அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர் (Phill Stringer). இவர் அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma City) சிட்டியிலிருந்து வட கரோலினாவின் சார்லொட் (Charlotte) வரை பயணம் செய்வதற்காக விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறார். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்பே விமான நிலையம் வந்த பயணிகளிடம் 'விமானம் தாமதமாக வரும்' எனக் கூறியிருக்கிறார்கள். பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்த நிலையில், 'விமானம் 18 மணி நேரம் தாமதமாக வரும்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே காத்திருந்த பயணிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். View this post on Instagram
A post shared by Phil Stringer (@philstringer)
ஆனால். பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமானத்துக்காக காத்திருந்திருக்கிறார். இது தொடர்பாக பில் ஸ்ட்ரிங்கர், ``விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை. விமானத்துக்குள் தனியே பயணித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. 18 மணி நேர காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு, விமானப் பணிப்பெண்கள் என்னை மிக மரியாதையாக நடத்தினார்கள். எனக்காகவே அளிக்கப்பட்ட 'பர்சனல் பார்ட்டி' போல இருந்தது இந்தப் பயணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமேசான் காட்டில் 4 குழந்தைகளின் போராட்டம்: விமான விபத்தில் மாயமாகி, 40 நாள்களுக்குப் பிறகு மீட்பு!
http://dlvr.it/SrMtnj
Wednesday, 28 June 2023
Home »
» Viral Video: 18 மணி நேரம் தாமதமான விமானம்... காத்திருந்த பயணிக்கு நடந்த `அடடே' சம்பவம்!







0 comments:
Post a Comment