Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 21 June 2023

இந்திய வம்சாவளி மாணவருக்குச் சிறைத் தண்டனை| சீன அதிபரைச் சந்தித்த அமெரிக்க அமைச்சர்- உலகச் செய்திகள்

ஆஸ்திரியாவில் நடந்த அணிவகுப்பில் (Pride Parade) திட்டமிட்டுத் தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ் அமைப்பை ஆதரிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேபாளில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க செயலாளர் அன்டோனி பிளிங்கன் சீனா சென்றடைந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்க்கையும் அவர் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்காகத் தொடர்ந்து போராடுவேன்'' என்று உறுதிப்படக் கூறியிருக்கிறார். கைது இங்கிலாந்தின் வேல்ஸில், கடந்த ஆண்டு நண்பர்களுடன் இரவு வெளியில் சென்றபோது, போதையில் இருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இந்திய வம்சாவளி மாணவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனின் ககோவ்கா அணை உடைந்ததைத் தொடர்ந்து, கொசுக்களால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ராணுவம் எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 47 மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு பில்லியனர் மக்கள் வசிப்பதாக Forbes பத்திரிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வார இறுதியில் உள்நாட்டு லீக் பட்டத்தை வென்ற பிறகு, துலூஸின் ரக்பி வீரர்களுடன் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி German Peace Prize- ஐ வென்றிருக்கிறார். வடக்கு அட்லாண்டிக்கில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற பாகிஸ்தானின் பெரும் பணக்காரர், அவரின் மகன் மற்றும் ஐந்து பேர் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
http://dlvr.it/Sr0LRC

0 comments:

Post a Comment