16 வருடங்கள் தனித்து வாழ்ந்த அமெரிக்க முதலை ஒன்று எவ்வித சேர்க்கையுமின்றி முட்டையிட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
2002-ல் 2 வயதான அமெரிக்க முதலை ஒன்று கைப்பற்றப்பட்டு கோஸ்டா ரிகாவில் உள்ள பார்க் ரெப்டிலாண்டியா (Parque Reptilandia) என்ற ஊர்வன பூங்காவில் தனித்து விடப்பட்டது. அதன்பின் 16 வருடங்கள் இம்முதலைத் தனிமையிலேயே இருந்தது. ஆனால், 2018-ல் முதலை 14 முட்டைகளை இட்டது. இனப்பெருக்கம் புலிகள் பாதுகாப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்
தெரியுமா?
|காடும் கற்பனைகளும்! - 8
பொதுவாகவே விலங்கினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த பின் கருவுறுதல் நிகழும். ஆனால், எவ்வித சேர்க்கையுமின்றி விலங்கினங்கள் கருவுறுதலை ஆராய்ச்சியாளர்கள் `Virgin Births’ என்று அழைக்கின்றனர்.
ஏற்கனவே பறவைகள், சுறாக்கள், பல்லிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பாம்புகள் சேர்க்கையின்றி கருவுறுதலை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இதுவரையில் முதலைகளில் இது போன்று நடந்ததில்லை.
முதலையின் 14 முட்டைகளில் 7 முட்டைகளை இன்குபேஷன் முறையில் அங்குள்ள பராமரிப்பாளர்கள் பாதுகாத்தனர். துரதிர்ஷ்டவசமாக அவை குஞ்சு பொறிக்கவில்லை.
அதனால் மூன்று மாதங்களுக்குப் பின் முட்டைகளைத் திறந்து பார்த்தபோது, 6 முட்டைகளில் என்னெவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால் ஒரு முட்டையில் மட்டும், முழுமையாக உருவாகியும், உயிராக முடியாத கரு இருந்தது. மரபணு பகுப்பாய்வில் இறந்த குட்டி முதலை, தாய்க்கு ஒத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலையில் சேர்க்கையின்றி கருவுறுதல் நிகழ்ந்திருப்பதால், டைனோசர்களின் இனப்பெருக்க திறன்கள் மீது ஆய்வு நடத்த இச்சம்பவம் வழிவகுத்துள்ளது. டைனோசர் குட்டிகள் கணவனின் காலைக் கவ்விய முதலை; ஒற்றைப் பிரம்புடன் சிங்கப்பெண்ணாக மாறிய மனைவி - நடந்தது என்ன?
`முதலைகளின் முட்டைகள் பொறிக்காமல் போனது ஏமாற்றம் தான். இது அசாதாரணமானது அல்ல. ஒருவேளை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வந்திருந்தாலும், அவை பாதிப்புக்குள்ளாகி வளர இயலாமல் போயிருக்கும்’ என வாரன் பூத் என்ற நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆராய்ச்சி குறித்த விளக்கங்கள் `Biology Letters’ என்ற இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SqQDb3
Friday, 9 June 2023
Home »
» இனச்சேர்க்கை நிகழாமலே முட்டையிட்ட முதலை... அமெரிக்காவில் அதிசயம்!







0 comments:
Post a Comment