டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர்இந்தியா AI173 விமானம் பறந்துக்கொண்டிருக்கும் போது இயந்திரக்கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, விமானம் நேற்று ரஷ்யாவில் உள்ள மகதானுக்கு திருப்பி விடப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.ஏர்இந்தியா விமானம்
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், "இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
அது அமெரிக்காவிற்குப் புறப்பட்ட விமானம். எனவே, அதில் அமெரிக்கக் குடிமக்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏர் இந்தியா மற்றொரு மாற்று விமானத்தை அனுப்புவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பயணிகள் பாதுகாப்பாக அவர்களின் இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால், இதைப் பற்றி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.துருக்கி அதிபராக Erdogan மீண்டும் தேர்வு | சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம் - உலகச் செய்திகள்
http://dlvr.it/SqH7j4
Tuesday, 6 June 2023
Home »
» இந்தியா டூ அமெரிக்கா: ரஷ்யாவில் தரையிறங்கிய விமானம் | `கூர்ந்து கவனித்து வருகிறோம்’ - அமெரிக்கா







0 comments:
Post a Comment