Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 2 June 2023

ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதம் | பாகிஸ்தானில் பணவீக்கம் 38%-ஆக அதிகரிப்பு - உலகச் செய்திகள்

அமெரிக்காவும், தைவானும் நேற்று ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு தரப்புக்குமிடையே பொருளாதார உறவுகளை ஆழமாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதை எதிர்த்து சீனா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலையைச் சந்தித்திருக்கிறது. மே மாதத்தில் அந்த நாட்டின் பண வீக்கம் 38% எட்டியிருக்கிறது. ஜார்டன் நாட்டின் இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா (Hussein bin Abdullah), கட்டடக்கலை நிபுணரும், சவுதி அரேபிய குடும்பத்தின் வாரிசுமான ரஜ்வா அல்சீஃப் (Rajwa Alseif) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 பிரபலங்கள் கலந்துகொண்டனர். எலான் மஸ்க், சீனாவின் Vice Premier Ding Xuexiang-கை பெய்ஜிங்கில் சந்தித்தார். மேலும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் மஸ்கை 'காம்ரேட் மஸ்க்' என்று கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினாவைச் சேர்ந்த Celeste Saulo என்பவர் உலக வானிலை அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க உளவுத்துறை ஆயிரக்கணக்கான ரஷ்யர்களின் ஐபோன்களை ஹேக் செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது. ஜப்பானின் தென்புறத் தீவுகளில் `மாவர் புயல்' தாக்கிவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவரான தேவ் ஷா, அமெரிக்காவின் புகழ்பெற்ற Scripps National Spelling Bee என்ற போட்டியில் வெற்றிபெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டது. தொழில்முனைவோரான Diane Hendricks தொடர்ந்து ஆறாவது வருடமாக முன்னணியில் இருக்கிறார். ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து 7-வது ஆண்டாகக் குறைந்திருக்கிறது. அந்த நாட்டில் கருவுறுதல் விகிதம் 1.2565 ஆக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sq2K6N

0 comments:

Post a Comment