Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 27 June 2023

லுங்கியுடன் சாகச வீரர் பியர் கிரில்ஸ் | பூங்காவில் விபத்துக்குள்ளான ரோலர் கோஸ்டர் - உலகச் செய்திகள்

டெக்ஸாஸில் ஐஸ்க்ரீம் கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 150 பவுண்டு போதைப்பொருளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். அமெரிக்காவிலுள்ள ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தில் பணிபுரியும் 3,000 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். LGBTQ+ மக்களை ஆதரிக்கும் விதமான "Pride Month" கொண்டாட்டங்களுக்கு அந்த நிறுவனம் ஒப்புதல் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஸ்வீடனில் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். விபத்து குறித்து அந்த நிறுவன சி.இ.ஓ, ``இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார். தென்கொரியாவில், பொருளாதார நெருக்கடியால், தன் இரண்டு பிள்ளைகளைக் கொன்று பல ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த பெண்ணைக் கைதுசெய்திருக்கின்றனர். ரஷ்யாவில் வாக்னர் படையால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உக்ரைனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், தனது நிகழ்ச்சிக்கான அடுத்த விருந்தினர் குறித்து ஹிண்ட் கொடுக்கும் விதமாக, அவர் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். `ஓஷன் கேட்' நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான வழக்கை அமெரிக்கக் கடலோரப் படையினர் விசாரிக்கவிருக்கின்றனர். பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அடுத்த நிதியாண்டின் வரியை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பலில் தன் மகனுடன் உயிரிழந்த பாகிஸ்தானிய பில்லியனர் ஷாஜதா தாவூத்தின் மனைவி கிறிஸ்டின் தாவூத், இறப்புக்கு முந்தைய இறுதித் தருணங்களைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அமெரிக்காவில், `அலாரம் தொந்தரவாக இருக்கிறது' என்று ஆய்வக ஃப்ரீசரை நிறுத்திய தூய்மைத் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனம், ரூபாய் 8 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருக்கிறது.
http://dlvr.it/SrHllb

0 comments:

Post a Comment