இரண்டாம் உலகப்போரின்போது தைவான், சீனாவிலிருந்து தனியே பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சீனா, தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தைவானின் மற்ற நாடுகளுடனான நட்புறவு நடவடிக்கையையும் சீனா கண்டித்துவருகிறது.தைவான் Vs சீனா
இதை எதிர்க்கும்விதமாக தைவானைச் சுற்றி சீனா ராணுவப்படைகளை நிலைநிறுத்தி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில் சீனாவின் 37 போர் விமானங்கள் தைவானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு சீனாவுடனான போர்ப் பதற்றங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் போன்ற காரணங்களால் தைவான், தண்ணீர் மற்றும் உணவுப்பொருள்களை ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அவசர முதலுதவி பெட்டிகளைத் தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகளை விவரிக்கும் கையேட்டையும் கடந்த ஆண்டு வெளியிட்டது.தைவான்
இந்த நிலையில், தைவான் ராணுவம் இன்று புதுப்பிக்கப்பட்ட தற்காப்பு கையேட்டை வெளியிட்டது. அதில் முதன்முறையாக சீன மற்றும் தைவான் ராணுவ வீரர்களுக்கிடையேயிருக்கும் வித்தியாசத்தை அவர்களின் சீருடை, கவசங்கள், சின்னம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய ஒரு பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் போர்ச் சூழல் ஏற்படலாம் என்பதால், தைவான் அனைத்து வகையிலும் தன் பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது.``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!
http://dlvr.it/SqcQPS
Tuesday, 13 June 2023
Home »
» சீன ராணுவ வீரர்களை அடையாளம் காண்பது எப்படி...? - கையேடு வெளியிட்ட தைவான்!







0 comments:
Post a Comment