அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடனுக்கு 80 வயதாகிறது. ஆனாலும் ஜோ பைடன் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணங்கள், உள் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். அதன் அடிப்படையில், அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள ஏர் ஃபோர்ஸ் அகாடமியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஜோ பைடன்
இதில் சிறப்பு விருந்தினராக ஜோ பைடன் கலந்துகொண்டார். மேலும், அதில் பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழை வழங்கிவிட்டு, தனது இருக்கைக்குத் திரும்பும்போது திடீரென மேடையில் தவறி விழுந்தார். போடியத்துக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிறப் பெட்டி ஒன்றில் கால் தவறி ஜோ பைடன் விழுந்துவிட்டதாக அதிகாரிகளிடம் கையை நீட்டிக் காண்பித்தார். உடனே, நிலைமையை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தூக்கிவிட்டனர். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் பென் லாபோல்ட், ``ஜோ பைடன் நலமாக இருக்கிறார். மேடையில் கை குலுக்கிவிட்டு ஜோ பைடன் செல்லும்போது கீழே மணல் பைகள் இருந்தன. அதில் கால் தவறி விழுந்துவிட்டார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
விழா மேடையிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ஜோ பைடன் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும்போது ஹெலிகாப்டர் கதவில் அவர் தலை மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Joe Biden just had a really bad fall at the U.S. Air Force Academy graduation. Falling like this at his age is very serious. Democrats want us to trust him to be the President until Jan, 2029. If we’re being real we all know that’s insane. He’s in no condition to run. pic.twitter.com/wacE0bojb9— Robby Starbuck (@robbystarbuck) June 1, 2023
ஆனால், அவர் வெள்ளை மாளிகைக்கு நடந்து சென்றபோது காயத்தின் எந்த அறிகுறியையும் காட்டவில்லை. தற்போது அவர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அமெரிக்கா: கொள்ளை முயற்சி... இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக் கொலை! - நடந்தது என்ன?!Loading…
http://dlvr.it/Sq1rLB
Friday, 2 June 2023
Home »
» Biden: கால் தவறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பதறிய அதிகாரிகள்! Video







0 comments:
Post a Comment