மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு பா.ஜ.க தலைவர்களும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி.சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பா.ஜ.க.தலைவர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே சீனாவில் நடந்த சூதாட்டத்தில் ரூ.3.5 கோடியை செலவு செய்துள்ளார். சூதாட்டத்தில் பவன்குலே
இது தொடர்பாக என்னிடம் 27 புகைப்படங்கள் மற்றும் ஐந்து வீடியோக்கள் இருக்கிறது. ஆனால் நான் அதனை வெளியிடவில்லை. அதனை வெளியிட்டால் பவன்குலேவுக்கும் அவரது கட்சிக்கும் தர்மசங்கடமாகிவிடும். சூதாட்டம் நடக்கும் நடக்கும் இடத்தில் பவன்குலே என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான் எனது கேள்வி. ஒரு நாள் இரவில் ரூ.3.5 கோடியை செலவு செய்துவிட்டதாக சிலர் என்னிடம் சொன்னார்கள். சூதாட்டம் விளையாடவில்லை என்றால் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்.
அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத்தில் பொழுதை கழிக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் ராவத்
இதற்கு பா.ஜ.க. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''எங்களது மாநில கட்சி தலைவர் எப்போதும் சூதாட்டத்தில் பங்கேற்றது கிடையாது. அங்கு அவர் குடும்பத்தோடு சென்று இருந்தார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், `ஆதித்ய தாக்கரே கையில் இருப்பது என்ன பிராண்ட் விஸ்கி?’ என்று கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக ஒரு புகைப்படத்தையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''பவன்குலே தனது குடும்பத்தோடு ரெஸ்டாரன்டுக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு சூதாட்டமும் நடந்திருக்கிறது'' என்று விளக்கம் அளித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz5scw
Monday, 20 November 2023
Home »
» சீனாவில் நடந்த சூதாட்டம்; 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்தாரா மகாராஷ்டிரா பாஜக தலைவர்? | பின்னணி






0 comments:
Post a Comment