உலகளவில் ஆன்லைனில் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊராடங்கின் போது ஆன்லைனில் பொருள்களை வாங்குவது இயல்பாகிவிட்டது. கடைகளுக்கு செல்லாமலே விரைவில் பொருள்கள் கைகளில் வந்து சேர்வதால் மக்களின் கவனம் இதன்பக்கம் திரும்பியிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்த பொருள் 4 வருடங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் தகவல் வைரலாகிவருகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் நிதின் அகர்வால். இவர் 2019 -ம் ஆண்டு அலி எக்ஸ்பிரஸ் ஆன்லைன் வலைத்தளத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது சீனாவில் கொரோனா பரவியதால் சர்வதேச பார்சல்கள் அனுப்பும் சேவை நிறுத்தப்பட்டது. அலி எக்ஸ்பிரஸ்
அதனால், அந்தப் பொருள் வந்து சேரவில்லை. அதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படதால் அந்தப் பொருள் குறித்து நிதின் அகர்வால் மறந்துவிட்டார். இதற்கிடையே, 2020- ம் ஆண்டு சீன செயலில்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதில் அலி எக்ஸ்பிரஸ் வலைதளமும் இருந்தது. உடனே அந்த நிறுவனம், பொருட்களை ஆர்டர் போட்டிருந்தவர்களின் பணத்தை திருப்பி கொடுத்தது. ஆனால், நிதின் அகர்வாலுக்கு பணம் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில்தான் அலி எக்ஸ்பிரஸ் நிறுவனம், நிதின் அகர்வால் ஆர்டர் போட்டிருந்த பொருட்களை வேறு டெலிவரி நிறுவனம் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது. நிதின் அகர்வால் இதை ட்விட்டாரில் பகிர்ந்து கொண்டதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பணம் பெருக்கும் மந்திரங்கள்..!
ஃபைனான்ஷியல் சீக்ரெட்ஸ் - புதிய தொடர்
http://dlvr.it/SrC2tN
Sunday, 25 June 2023
Home »
» 2019-ல் ஆர்டர்; 2023-ல் டெலிவரி - இந்தியாவில் செயலி தடை செய்யப்பட்டும் பொருளை அனுப்பிய சீன நிறுவனம்!







0 comments:
Post a Comment