Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 28 June 2023

`கொரோனா Bioweapon-ஆக உருவாக்கப்பட்டது..!' - வூஹான் வைராலஜி ஆராய்ச்சியாளர் அதிர்ச்சித் தகவல்!

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலாகப் பரவத் தொடங்கிய `கோவிட்-19' எனும் கொரோனா வைரஸ் தொற்று, நாளடைவில் உலகின் பல்வேறு நாடுகளில் படர்ந்து பல லட்சக்கணக்கான மனிதர்களைப் பலிகொண்டது. தற்போது வரையில் முழுமையாக கொரோனா தொற்று நீங்கிவிட்டது என்று கூற முடியவில்லை என்றாலும், தடுப்பூசிகள் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.கோவிட் 19 கொரோனா வைரஸ் இத்தகைய கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே வெளியிட்டது என்று இடையில் பல பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், சீனாவிலுள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் (Wuhan Institute of Virology) ஆராய்ச்சியாளர் சாவோ (Chao), சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை உயிரி ஆயுதமாக (Bioweapon) உருவாக்கியதாக தற்போது கூறியிருக்கிறார். இத்தகைய அதிர்ச்சி தரும் தகவலை, சீனா குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் நேரடித் தகவல்களை வெளியிடும், சர்வதேச பத்திரிகை சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங் (Jennifer Zeng) உடனான நேர்காணலின்போது சாவோ வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நேர்காணலின் முழு வீடியோவையும் ஜெனிஃபர் ஜெங் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், இது தொடர்பாக ஜெனிஃபர் ஜெங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், சாவோ, ``2019-ம் ஆண்டு பிப்ரவரியில் என்னுடைய உயரதிகாரியால், நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகள் எனக்கு வழங்கப்பட்டன. அதில், அதிக வீரியமிக்க, அதே சமயம் மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் எதுவென்று கண்டறியுமாறு கூறப்பட்டது. கொரோனா வைரஸ் உயிரி ஆயுதம் (Bioweapon). பின்னர் அதே ஆண்டு வூஹானில் நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது என்னுடைய சக ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில நாள்கள் காணவில்லை.கோவிட் 19 கொரோனா வைரஸ் பின்னர் காணாமல்போன ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சுகாதார நிலைமையைச் சரிபார்க்க தான் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், சுகாதார நிலைமையைச் சரிபார்க்க வைராலஜி ஆராய்ச்சியாளர்களை அனுப்ப அவசியமில்லை. ஒருவேளை அவர்கள் மூலம் கொரோனா வைரஸை பரவ விட்டிருக்கலாம். இது மட்டுமல்லாமல் 2020-ல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்நிலையைப் பரிசோதிக்க ஜின்ஜியாங்குக்கு (Xinjiang) நான் அனுப்பப்பட்டேன். ஆனால், இங்கு உடல்நிலையைச் சரிபார்க்க வைராலஜி ஆராய்ச்சியாளர் தேவையில்லை. பிறகுதான், மனிதர்களில் அந்த வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய அனுப்பப்பட்டேன் என்ற சந்தேகம் எழுந்தது" என்று கூறியதாக ஜெனிஃபர் ஜெங் விளக்குகிறார். இந்தத் தகவல் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சீனாவில் பரவும் புதியவகை கொரோனா... `மறுபடியும் மொதல்லேருந்தா...'- அச்சத்தில் உலக நாடுகள்!
http://dlvr.it/SrMtkB

0 comments:

Post a Comment