Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 9 June 2023

பைடனைச் சந்திக்கும் பிரிட்டன் பிரதமர்| பிரபல அமெரிக்க எழுத்தாளருக்கு வெண்கலச் சிலை- உலகச் செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கவிருக்கிறார். உக்ரைன் போர் குறித்து விவாதிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். அமெரிக்காவின் ரிச்மான்டிலுள்ள (Richmond) ஒரு பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். இதில் ஒரு பெண் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்தச் சூழலில் உக்ரைனின் முக்கிய அணையான ககோவ்கா அணைமீது தாக்குதல் நடத்தப்பட்டு, அந்த அணையின் ஒரு பகுதி உடைந்ததில், கார்பன் நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதில் பலர் வீடுகளைவிட்டு வெளியேறிவருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவுசெய்திருக்கிறது பாகிஸ்தான் காவல்துறை. அப்துர் ராஸக் என்ற வழக்கறிஞரின் கொலையில் அவருக்குத் தொடர்புடையதாகக் கூறி அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. உலக வங்கி எதிர்வரும் நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதாரம் சுமார் 2 சதவிகிதம் வளரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. அடுத்த வாரம் Junteenth Concert என்ற நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நிகழவிருக்கிறது. இது அதிபர் பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் முன்னிலையில் நடக்கும். புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான Willa Cather-ன் வெண்கலச் சிலை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் திறக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SqPL08

0 comments:

Post a Comment