Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 19 June 2023

கலிபோர்னியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம் | பஞ்சத்தால் இறக்கும் வடகொரிய மக்கள் - உலகச் செய்திகள்

வாஷிங்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ககோவ்கா அணை சமீபத்தில் உடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவதை ரஷ்யா தொடர்ந்து தடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில், 2050-ம் ஆண்டுக்குள் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக குறைப்பதை நோக்கமாகக் கொண்ட வணிகங்களுக்கு உலகளாவிய குறைந்தபட்ச வரியும் மற்றும் காலநிலைச் சட்டமும் அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சுவிஸ் வாக்காளர்கள் அங்கீகரிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையே 254 கிலோமீட்டர் நீளமுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிளை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ஐரோப்பா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியா ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியான இணைப்பை உருவாக்க உதவும் என்று அந்நாட்டின் நிதித்துறை தெரிவித்திருக்கிறது. உகாண்டாவில் பள்ளிக் குழந்தைகள் 37 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க மேலும் பல தனிப்படைகளை அனுப்ப அந்நாட்டின் அதிபர் யோவேனி முசெவேனி உத்தரவிட்டிருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் உடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். வட கொரியாவில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, மக்கள் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். உணவின்றி மக்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இத்தாலியிலிருந்து மீட்கப்பட்ட 2,800 ஆண்டுகள் பழைமையான கல் பலகையை ஈராக் வெளியிட்டிருக்கிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், பீட்டர் சதுக்கத்தில், பிரார்த்தனையில் ஈடுபட்டார் போப் ஃப்ரான்சிஸ். தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிலநடுக்க அதிர்வு பதிவு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
http://dlvr.it/Sqv9zF

0 comments:

Post a Comment