ட்விட்டர் நிறுவனம் வாக்குறுதியளித்ததுபோல் ஊழியர்களுக்கு போனஸ் வழங்காததால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பாரிஸ் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 24 பேர் காயமடைந்தனர்.
பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் முதன்முறையாகத் தனது மூன்வாக் நடனத்துக்கு முன்னர் அணிந்திருந்த கறுப்பு நிற Fedora hat செப்டம்பர் மாதம் பாரிஸ் இசை நினைவுப் பொருள்களுக்கான ஏலத்தில் இடம்பெறவிருக்கிறது.
2011-ல் கொரியா காட் டேலன்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, மக்களை ஈர்த்த பாடகர் சோய் சங் போங், தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 33.
இஸ்ரேலின் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மூன்று பேரை இஸ்ரேல் அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக பிரெஞ்ச் கலைஞர் லாரென்ட் டே லா ஹையர் (French Artist Laurent de la Hyre) என்பவரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட ஓவியம், பிறகு பீட்டர் பால் ரூபென்ஸ் என்பவரால் வரையப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. இந்த ஓவியம், 7.7 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் நடந்த போரில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட் டேன்கரை அழித்த ரஷ்ய ராணுவ வீரருக்குத் தனியார் அறக்கட்டளை ஒன்று ஒரு மில்லியன் ரூபிள் ($11,842) வெகுமதி அளித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அரசுமுறைப் பயணமாக நான்கு நாள்கள் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் சந்தனக்கட்டைப் பெட்டி, வைரக்கல்லைப் பரிசாகத் தந்தார். இரு நாட்டுத் தலைவர்களும் பரிசுப் பொருள்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கடலுக்கடியிலுள்ள டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைப் பார்ப்பதற்குச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் பயணிகளுடன் காணாமல் போனது. நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்க பிரான்ஸ் நாட்டின் ஆழ்கடல் ரோபோ இணைந்திருக்கிறது.
சமீபத்தில் கிரீஸில் நடைபெற்ற கப்பல் விபத்தில் பலியானோரில் 209 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Sr67bZ
Friday, 23 June 2023
Home »
» பிரபல பாடகர் தற்கொலை | ட்விட்டர்மீது வழக்கு தொடர்ந்த ஊழியர் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment