நீங்கள் H 1B விசாக்கள் வைத்திருந்தால் மட்டுமே அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு பிரஜைகள் தற்காலிகமாக வேலை செய்ய முடியும்.
இந்த நிலையில், `அமெரிக்க H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில், ஓப்பன் வொர்க் பர்மிட் ஸ்ட்ரீமை (Open Work Permit Stream) அரசாங்கம் உருவாக்கும்’ என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.கனடாபங்குச் சந்தை: மார்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனம் பரிந்துரை செய்யும் பங்குகள்... என்னென்ன?
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வெளியீட்டில், ``கனடாவிலும், அமெரிக்காவிலும் உயர் தொழில்நுட்பத் துறைகளில், பெரிய செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் H-1B விசாவைக் வைத்துள்ளனர். H-1B ஸ்பெஷலிட்டி ஆக்குபேஷன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களோடு வரும் குடும்ப உறுப்பினர்கள், கனடாவுக்கு வர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அல்லது பணிபுரிவதற்கான அனுமதியும் வழங்கப்படும். இந்தப் புதிய முடிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை கனடாவில் பணிபுரிய அனுமதி பெறுவார்கள். அவர்கள் கனடாவின் எல்லாப் பகுதிகளிலும், எந்தவொரு நிறுவனத்திலும் வேலை செய்ய முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
கனடா அரசின் இந்த அறிவிப்புக்கு H-1B விசா வைத்திருப்பவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது!
http://dlvr.it/SrMQzf
Wednesday, 28 June 2023
Home »
» H-1B விசா வைத்திருக்கிறீர்களா? நீங்கள் கனடாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்...!







0 comments:
Post a Comment