கம்பெனி என்று இருந்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடத்தான் செய்வார்கள். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
ஆனால், சீனாவின் ஜெஜியாங் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு விநோதமான பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. `விவாகரத்து பெறக் கூடாது, திருமணத்தைத் தாண்டி தகாத உறவு வைத்திருக்கக் கூடாது' என்று நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அனைவரையும் சற்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஊழியர்கள்
இந்தக் கட்டுப்பாடுகள், குறிப்பாக, திருமணமான அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால், நேரடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
`திருமண உறவுக்கு உண்மையாக இருத்தல், கணவன் மற்றும் மனைவிக்கிடையே உள்ள அன்பு, குடும்பத்தைச் சிறப்பாகப் பாதுகாத்தல் மற்றும் வேலையில் கவனம் செலுத்துதல் போன்ற கலாசாரத்தைப் பரிந்துரைப்பதற்காக, திருமணமான அனைத்து ஊழியர்களும் தகாத உறவு, திருமணம் தாண்டிய உறவு, விவாகரத்து போன்ற தீய நடத்தைகளில் இருந்து தடுக்கப்படுகிறார்கள்' என்ற அறிவிப்பை இந்நிறுவனம் ஜூன் 9 அன்று அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததற்கு என்ன தூண்டுதலாக இருந்தது என்பது தெரியவில்லை. ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பணியிட விவகாரங்களில் இது ஒரு காரணமாக இருந்ததா என்பது கேள்வியாகி இருக்கிறது.``நாங்க என்ன ஸ்கூல் குழந்தைங்களா..?” கூகுள் நடவடிக்கைகளை எதிர்க்கும் ஊழியர்கள்!
`சீனாவின் தொழிலாளர் ஒப்பந்தச் சட்டத்தின்படி, ஊழியர்கள் இனி வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது அவர்களின் திறன்கள் அவர்களின் வேலையின் தேவைகளோடு பொருந்தவில்லை என்றால் மட்டுமே அவர்கள் சட்டபூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்’ என ஷாங்காயில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சென் டோங் இந்தத் தடை குறித்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தடை அறிவிப்புக்கு சமூக வலைத்தளத்தில் மாறுபட்ட கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.
சீன நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து உங்களின் கருத்தென்ன?
http://dlvr.it/Sqxx4C
Tuesday, 20 June 2023
Home »
» விவாகரத்து, தகாத உறவுக்குத் தடை; மீறினால் டிஸ்மிஸ்- ஊழியர்களுக்கு இப்படியும் ரூல்ஸ் போடும் நிறுவனம்!







0 comments:
Post a Comment