இரண்டாம் உலகப்போரின்போது தைவான் சீனாவிலிருந்து தனியே பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத சீனா, தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தைவானின் மற்ற நாடுகளுடனான நட்புறவு நடவடிக்கையையும் சீனா கண்டித்துவருகிறது. இதை எதிர்க்கும்விதமாக தைவானைச் சுற்றி சீனா ராணுவப்படைகளை நிலைநிறுத்தி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீனா - தைவான்
இந்த நிலையில் சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சன் லி-ஃபாங், ``(தைவான் நேரப்படி) காலை 5 மணி முதல் சுமார் 6 மணி நேரத்துக்குள் (மதியம் 11 மணி வரை) மொத்தம் 37 சீன ராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்திருக்கின்றன.
தைவானின் ராணுவம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறது. ரோந்து விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள் பதில் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. சோதனைக்குப் பிறகு ஊடுருவல்கள் தொடர்கின்றனவா என்பது இன்னும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார். சீனாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் தைவானில் மீண்டும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!
http://dlvr.it/SqM5xT
Thursday, 8 June 2023
Home »
» அத்துமீறி நுழைந்த 37 சீனப் போர் விமானங்கள்; தைவானில் மீண்டும் போர்ப் பதற்றம்!







0 comments:
Post a Comment