Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 20 June 2023

இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் மைக்ரான் டெக்னாலஜி... என்ன காரணம்?

அமெரிக்க நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி இந்தியாவில் தனது செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலையை அமைக்க 1பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. எதிர்காலத்தில் இந்த முதலீடு 2 பில்லியன் டாலர்  வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது.மைக்ரான் டெக்னாலஜிஇந்திய பங்குச் சந்தை: நச்சுன்னு 4 ஐபிஓ-க்கள்... முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு..! இந்த மைக்ரான் டெக்னாலஜிஸ் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் கணினி, மொபைல்போன் பயன்பாடுகளுக்கான நினைவகம் மற்றும் டைனமிக் ரேண்டம் அணுகல் நினைவகம் சேகரிப்பு பாகங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது அமெரிக்க பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் போது சிப்மேக்கர்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான தனது முயற்சிகளை செயல்படுத்துவார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு தேவையான செமிகண்டக்டரை, அந்நிறுவனம் சீன ஆலையிலிருந்து பெற்று வருகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் மத்தியில், சீனாவிற்கு வெளியே அதன் முக்கியமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்பாக இதை கருதுகிறது. எனவே, சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளில் ஆலை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. இதனால் இந்தியாவில் அமைக்கப்படும் ஆலையில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும்..? பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..! இன்றைய சூழலில் பல நாடுகள் மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வரும் வேளையில் அதற்கான செமிக்கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து செமிகண்டக்டர்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா இப்போது, உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான முதலீட்டை செய்ய மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்த முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானால், `மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், தொழில்துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் என்று கூறுகிறார்கள்.
http://dlvr.it/SqxT5b

0 comments:

Post a Comment