இந்த உலகில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பணத்தால் மனிதர்களிடையே மிகப்பெரிய அளவில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தும், ஒருவருக்கு கஷ்டம் என்றால், அவர் முகம் தெரியாத நபராக இருந்தாலும்கூட தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் சாமானியர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்துகொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் கார் விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றவரைக் காப்பாற்றுவதற்கு 4,000-க்கும் மேற்பட்டோர், சுமார் ரூ.21.7 லட்சத்தை நன்கொடையாக அளித்து உதவியிருக்கின்றனர்.உதவி
முன்னதாக, 2020-ல் ஜியாங் என்பவர் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். அப்போது ஜியாங் பிழைப்பதற்கு சிறிய அளவிலான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதன் காரணமாக ஜியாங்கின் மனைவி டிங் (Ding), தன் கணவரைக் காப்பற்ற மருத்துவச் செலவுகளுக்காக, நிதி திரட்டத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து 4,055 பேர் சுமார் 26,500 டாலர் நன்கொடையளித்து உதவினர்.
அதோடு 2020 முதல் ஜியாங்கின் மனைவி டிங், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கணவனை அருகிலிருந்து கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நன்கொடையாளர்களின் உதவி மற்றும் டிங்கின் கவனிப்புக்குப் பலனாக ஜியாங் தற்போது கோமாவிலிருந்து மீண்டிருக்கிறார். அதோடு ஜியாங், எப்படிப் பேசுவது, நடப்பது, பல் துலக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டார்.மருத்துவமனை
இப்படியிருக்க `ஜியாங் கோமாவிலிருந்து மீண்டது தனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்திருக்கும் டிங், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக வந்த ரூ.21.7 லட்சத்தையும் உதவியவர்களுக்கே திருப்பித் தர முடிவுசெய்திருக்கிறார். கூடவே, ஜியாங் தன்னுடைய மனைவியின் கையால் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழவைத்திருக்கிறது. டிங்கின் இத்தகைய முடிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர், `உங்களின் வலிமையான இதயம் மிகப்பெரிய புன்னகையைக் கொண்டுவரும்' என்று குறிப்பிட்டார்.``12 கிராமங்கள் பயன்பெறும்..." 3 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி!
http://dlvr.it/SqmdTW
Friday, 16 June 2023
Home »
» கோமாவில் கணவன், காப்பாற்றப் போராடிய மனைவி... உதவிக்கரம் நீட்டிய 4,000 பேர்! - நெகிழ்ச்சி சம்பவம்







0 comments:
Post a Comment