தென்கொரியாவின் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவின் நிர்வாக செயலாளருமான யோ சாங் பும், (Yoo Sang-bum) கிம் ஜாங் உன் பற்றி சில முக்கியத் தகவல்களைச் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "வடகொரியா சமீபத்தில் மார்ல்போரோ (Marlboro) உள்ளிட்ட பிராண்டுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகளையும், பாரம்பர்ய மது வகைகளையும் இறக்குமதி செய்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய படங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) பகுப்பாய்வின்படி, அவரது எடை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வடகொரிய அதிபர் எடை 140 கிலோவுக்கு மேல் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பிரபல செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான புளூம்பெர்க், தேசிய புலனாய்வு சேவையை (National Intelligence Service) மேற்கோள் காட்டி, ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில், "வடகொரிய அதிபர் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நிக்கோடின், ஆல்கஹால் ஆகியவற்றை அதிகமாக சார்ந்திருப்பதாகத் தெரிகிறது.
தூக்கமின்மை போன்ற சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இறக்குமதி செய்திருக்கும் விவரங்களும் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மே 16 அன்று, மக்கள் மத்தியில் கிம் ஜாங் உன் தோன்றியபோது அவர் கண்களைச் சுற்றி தெளிவான கருவளைய வட்டங்கள் இருந்தன. மிகவும் சோர்வாகத் தோன்றினார். தூக்கமின்மை சிகிச்சைக்காக சோல்பிடெம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பலி! - அதிகாரியை சிறைபிடிக்க முயன்ற மக்கள்.. தஞ்சையில் பரபரப்பு!
http://dlvr.it/Spz2z6
Thursday, 1 June 2023
Home »
» Kim Jong Un:``வடகொரிய அதிபருக்குத் தூக்கமின்மை நோய் இருக்கலாம்" - தென்கொரிய உளவுத்துறை







0 comments:
Post a Comment