Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 6 June 2023

Online Game Addiction 'ஐந்து ரூபாய்தான் மிச்சம்'- குடும்ப சேமிப்பை நான்கே மாதங்களில் தீர்த்த சிறுமி

இன்றைய காலகட்டங்களில் ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களை ஆட்டுவிக்கிறது. அதிலும், ஆன்லைன் கேம் அடிக்‌ஷன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் கேம் அடிக்‌ஷனால், பண இழப்புகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அரசுத் தரப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆன்லைன் கேம் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், சீனாவில் 13 வயது சிறுமி, ஆன்லைன் கேம் அடிக்‌ஷனில் சிக்கி நான்கே மாதங்களில் தனது குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் தீர்த்திருக்கிறார்.ஆன்லைன் கேம் இது குறித்து வெளியான தகவலின்படி, சம்பந்தப்பட்ட சிறுமி மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்திலுள்ள மேல்நிலைப் பள்ளியொன்றில் படித்துவருகிறார். இவ்வாறிருக்க ஒருநாள் பள்ளியில் சிறுமி அதிக நேரம் செல்போனில் மூழ்கியிருப்பதைக் கவனித்த ஆசிரியர், சிறுமி ஆன்லைன் கேம் விளையாடுவதாக சிறுமியின் தாயிடம் எடுத்துச்சொல்லி எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் தன்னுடைய வங்கிக் கணக்கைப் பார்த்தபோது வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்திருக்கிறது. சேமித்துவைத்திருந்த சுமார் ரூ.52 லட்சம் காணவில்லை. பின்னர்தான் தெரியவருகிறது சிறுமி தன்னுடைய தாயின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைன் கேமில் பணத்தைச் செலவழித்திருக்கிறார் என்று. இது குறித்து சிறுமியின் தந்தை சிறுமியிடம் கேட்டபோது, ஆன்லைன் கேம்களை வாங்குவதற்காக ரூ.38 லட்சமும், தனது தோழிகளுக்கு கேம்களை வாங்குவதற்காக ரூ.11 லட்சமும் செலவிட்டதாகச் சிறுமி ஒப்புக்கொண்டார். மேலும், வீட்டிலிருந்த டெபிட் கார்டை தனது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பணத்தைச் செலவிட்டதாகவும் சிறுமி கூறினார். ஆன்லைன் கேம் அதோடு வங்கியின் தரப்பில், சிறுமி தன்னுடைய ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் பரிவர்த்தனைப் பதிவுகளை நீக்கிவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, இணையதளவாசிகள் பலரும் `இது சிறுமியின் தவறு, இதைக்கூட கவனிக்காமல் விட்டது பெற்றோரின் தவறு' என்று பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். 2022-ம் ஆண்டு மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) மேற்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் அடிக்‌ஷன் குறித்த பகுப்பாய்வின்படி, பெரும்பாலானோர் சீனாவிலும், அதற்கடுத்தடுத்த இடங்களில் சவுதி அரேபியா, மலேசியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் ஆன்லைன் கேம்ஸில் ஆண்களைவிட அதிகநேரம் செலவிடும் பெண்கள்... ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்!
http://dlvr.it/SqFSk9

0 comments:

Post a Comment