இரான் கொம் நகரில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதைத் தடுக்கவும், பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தியும் இது போன்று சிலர் செயல்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது.
அதையடுத்து இரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பள்ளி மாணவிகள்மீது தற்போது விஷவாயு செலுத்தப்பட்டதாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜான்ஜென், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ் உள்ளிட்ட 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலுள்ள மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெண்கள் பள்ளிகள்மீது ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி
இந்தச் சம்பவம் தொடர்பாக இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி கூறும்போது, "நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித் திட்டம் இது. இதன் மூலம் நமது அதிகாரிகள், பெற்றோர், மாணவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் இரானில் மீண்டும் பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்... வலுக்கும் எதிர்ப்பு!
http://dlvr.it/SkQn2f
Monday, 6 March 2023
Home »
» `விஷத்துக்குப் பிறகு விஷவாயு?’ - இரானில் பள்ளி செல்லும் மாணவிகள்மீது தொடரும் தாக்குதல்?







0 comments:
Post a Comment