குவான்டனோமோ பே சிறையில் சட்டவிரோதமாகப் பிடிபட்டிருக்கும் சவுதியைச் சேர்ந்த Abd al-Rahim al-Nashiri என்ற கைதி தற்போது மரண தண்டனை எதிர்கொள்ளவிருக்கிறார். இதற்காக ஐநா சபை அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடாவின் ராக்கா, டபாகி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்த மரம் நபர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
சட்டவிரோத புலம்பெயர்வு தடுப்புத் திட்டம் பலன் தருவதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார். சட்டவிரோத புலம்பெயர்வோர், சிறு படகுகளில் இங்கிலாந்திற்கு வருவது 20 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மிகவும் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரரான ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimovic) (41 வயது) கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜாக் லீச்க்கு (Jack Leach) உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதை "It happened - first day in the books!" என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.
`Bling Empire' என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த Anna Shay என்ற பிரபலம், தனது 62-ம் வயதில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SqDyw9
Tuesday, 6 June 2023
Home »
» ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் |பக்கவாதத்தால் காலமான பிரபலம் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment