காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு ஆறு நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மே 30-ம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்றடைந்த அவர், கலிஃபோர்னியாவின் சான்டா கிளாராவில் இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றினார்.ராகுல் காந்தி
அப்போது, ராகுல் காந்தி, ``பிரதமர் மோடி உலகத்தைப் பற்றித் தனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார். பிரதமர் மோடியைக் கடவுளுக்கு அருகில் உட்காரவைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கடவுளுக்கே அவர் விளக்கிவிடுவார் என்று நினைக்கிறேன். எதை நான் உருவாக்கினேன் என்று கடவுளே குழப்பமடைவார்” எனப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து, நேற்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அதிகபட்ச தண்டனையாக எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான். இப்படிப் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவேன் என நான் கற்பனைகூடச் செய்யவில்லை. ஆனால், இந்தத் தகுதிநீக்கம்தான் உண்மையில் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுத்தது.ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் எனக்குக் கிடைத்ததைவிட மிகப்பெரிய வாய்ப்பு. அப்படித்தான் அரசியல் செயல்படுகிறது. என் தகுதிநீக்கத்துக்கான இந்த நாடகம் உண்மையில் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என நினைக்கிறேன். பெரும் பணபலம் பொருந்திய, ஆதிக்கம் நிறைந்த, அதிகாரக் கட்டமைப்புகளைக் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடினோம்.
அப்போதுதான் சிந்தித்தோம்... ஜனநாயகம் என்பது எதிர்ப்பவர்களை எதிர்ப்பதல்ல. அது எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் புனிதம் பற்றியது. அது தற்போது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பிறகு, கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்தேன். நாடு முழுவதும் நடைப்பயணத்தின்போது அரசியல்ரீதியாக மட்டும் என்னென்ன நடக்கும் என நாங்கள் ஒரு நொடிகூட கற்பனை செய்து பார்க்கவில்லை.ராகுல் காந்தி
125 பேருடன் பயணத்தைத் தொடங்கினோம்... அது நம் நாடு, மக்கள் மற்றும் அரசியல் பற்றி நாம் சிந்திக்கும்விதத்தை அடிப்படையிலேயே மாற்றியது. இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்னவென்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். நீண்டகாலமாக என்னால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக விரைவாக எங்களுக்குள் ஒரு மௌனம் இறங்கியது. நாங்கள் மக்களுடன் தொடர்புகொண்டதால், நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டோம். பெரும் துன்பத்தின் கண்ணீரைக் கேட்டோம்.
`காஷ்மீரில் நான்கு நாள்கள் தொடர்ந்து நடந்தால் கொன்றுவிடுவார்கள்' என்றார்கள். அவர்களிடம் என்மீது குண்டு வீச விரும்புபவரைப் பார்க்க வேண்டும் என்றேன். மக்களுடன் உறவாடும்போது உண்மைக்கு எதிரான அதிகாரத்தின் தருணங்களை நீங்கள் பார்க்கலாம். மகாத்மா காந்தி முழு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையும் எதிர்த்து போராடினார், அவருக்கு எந்தப் படையும் இல்லை.ராகுல் காந்திஅரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! - டெல்லி அரசியல் பின்னணி
அதேநேரத்தில் ஆங்கிலேயர்களிடம் பலம், ராணுவம் மற்றும் ஓர் அமைப்பு இருந்தது. ஒரு நபருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது முக்கியமல்ல... நாம் எதிர்கொள்ளும் மாற்றத்துக்கான வேறுபாட்டை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்த பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு நான் நாட்டைப் பற்றியும், நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பலவற்றைச் சிந்தித்து முடிவுசெய்தேன். இந்த நடைப்பயணம் அழகாக இருந்தது. எனது வாழ்க்கையின் மாபெரும் அனுபவம்" என்று தெரிவித்தார்.Loading…
http://dlvr.it/Sq01Wm
Thursday, 1 June 2023
Home »
» Stanford : "எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வார்கள் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை"- ராகுல்







0 comments:
Post a Comment