சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தை சேர்ந்தவர் 21 வயதான குய்ஹுவா. இவர் டிக்டாக்கின் சீன வெர்ஷனான டூயினில் மிகவும் ஆக்டிவ்வாகச் செயல்பட்டு அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தன் அதிக உடல் எடையை குறைக்கும் வீடியோ தொடரை ஆரம்பித்துள்ளார். குய்ஹுவா
இதனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான டயட் ஆகியவற்றை ஃபாலோ செய்து வந்துள்ளார். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகவும் கொண்டிருந்தார்.
தன்னை பின்தொடர்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக மிகவும் குறைந்த நாள்களில் தன் உடல் எடையை பாதியாகக் குறைக்க முயன்று, தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பை குய்ஹுவாவின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இவரது இறப்பு தொடர்பான சீன தேசிய வானொலியில் வெளியான அறிவிப்பில், `குய்ஹுவா 156 கிலோ எடை கொண்டவர். எனவே அவர் தன் எடையை 100 கிலோவுக்கும் கீழே குறைக்க நினைத்துள்ளார். இதனால் அவர் தன் இலக்கை அடையும் முயற்சியில் பல்வேறு நகரங்களில் உள்ள பல எடை இழப்பு முகாம்களில் சேர்ந்து இரண்டு மாதங்களில் 27 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
ஆரோக்கியமான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் ஓய்வு ஆகியவையே ஒருவர் எடையை இழக்க உதவும். ஆனால் குய்ஹுவா மிகத் தீவிர உடற்பயிற்சி செய்தது மட்டுமல்லாமல் ஓய்வில்லாமல் இருந்துள்ளார். மேலும் தன் உணவையும் சரியாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குய்ஹுவாஉடல் எடை குறைக்க சிகிச்சை எடுத்த பெண் உயிரிழப்பு; காதலரின் வேதனைப் பதிவு!
குய்ஹுவாவின் மரணத்துக்கு அவர் பயிற்சி எடுத்துக்கொண்ட எடை இழப்பு முகாம் (Gym) இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் இவரது இறப்பு தொடர்பாக சீன உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குய்ஹுவா இருந்த எடை இழப்பு முகாமில் அதிகப்படியான அல்லது முறையற்ற பயிற்சி நடத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.
சீனாவில் ஓர் இளைஞர் ஒரே நேரத்தில் பல வலுவான மதுபானங்களை குடித்து சமூகவலைதளத்தில் லைவ் செய்து உயிரிழந்தார். இந்தச் செய்தி வெளியான சில வாரங்களிலேயே குய்ஹுவாவின் இறப்பு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமூக வலைதள வியூவ்ஸுக்காக இளைஞர்கள் தங்கள் உயிருடன் விளையாடுகின்றனர் என்று பலரும் அதிர்ச்சியை பகிர, இதனால் சமூக வலைதள இன்ஃளூயன்சர்கள் குறித்து சீன அரசு தன் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது.
http://dlvr.it/SqtlYr
Monday, 19 June 2023
Home »
» குறைந்த நாள்களில் 156 கிலோ எடையைக் குறைக்க முயன்ற 21 வயது இன்ஃபுளூயன்சர் - பரிதாபமாக உயிரிழப்பு!







0 comments:
Post a Comment