சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நீண்டகால நடைமுறையை, முறியடிக்கும்விதமாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இன மற்றும் சாதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடைசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.ஜோ பைடன்
இது தொடர்பான இரண்டு வழக்குகளை எட்வர்டு பிளம் என்பவர் 2014-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழகங்களில் இனம் சார்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுவதைக் கடுமையாக எதிர்ப்பவர் எட்வர்டு பிளம். வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் மனுதாரர் சார்பில் பல்கலைக்கழகத்தின்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ``பல்கலைக்கழகம் கறுப்பினத்தவர்களுக்கும், பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறது. வெள்ளையர்கள் மற்றும் ஆசிய மாணவர்களுக்குப் பாகுபாடு காட்டுகிறது" என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கிலும் இதே குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டன. ``இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டபூர்வமானது. இதை, சமீபத்தில் உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று பல்கலைக்கழகங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கூட்டாட்சி விசாரணை நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வந்த நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றம் நோக்கி நகர்ந்தது.
இரு பல்கலைக்கழகங்களுக்கும் எதிரான வழக்குகளையும் ஆறு நீதிபதிகள்கொண்ட அமர்வு விசாரித்தது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கில், மூன்று நீதிபதிகள் பல்கலைக்கழகத்துக்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்கில் இரண்டு நீதிபதிகள் பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து, இறுதி தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ஜான் ராபர்ட், ``இதற்கு மேலும் இவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மாணவர்களை, அவர்களின் திறமைகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும். அவர்களது நிறத்தை வைத்து மதிப்பிடக் கூடாது.
வெகுகாலமாக, பல்கலைக்கழகங்கள் எதிர்மறையாகச் செயல்பட்டு வருகின்றன'' என்று கூறி, இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலர் இந்தத் தீர்ப்புக்கு தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.
முன்னதாக உறுதியான நடவடிக்கை (Affirmative Action) என்பது, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பாகுபாடுகளைச் சரிசெய்யவும் கொண்டுவரப்பட்டது.Titan Tragedy: `மிக நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்தது இதுதான்...' - மீட்பு குறித்து அமெரிக்கா தகவல்!
http://dlvr.it/SrTRHS
http://dlvr.it/SrTRHS






















































