பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த பதான் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்ததாக இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் படத்திலும் ஷாருக்கான் நடித்து முடித்துள்ளார்.
ஜவான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக துங்கி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் டாப்ஸி மற்றும் விக்கி கெளஷல் ஆகியோர் ஷாருக்கானுடன் நடிக்க இருக்கின்றனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார். அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டது. இதில் ஷாருக்கான் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.ஷாருக் கான்
உடனே ஷாருக் கான் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ரத்தம் வந்துகொண்டே இருந்தது. இதனால் ரத்தத்தை நிறுத்த உடனே ஷாருக் கானுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். அதனை தொடர்ந்தே ரத்தம் கொட்டுவது நின்றது. ஆபரேசனுக்கு பிறகு ஷாருக்கான் மூக்கில் பேண்டேஜ் கட்டிய படி வந்தார்.
காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் ஷாருக்கான் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர். ஓரிரு வாரத்தில் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது குறித்து சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் அதிகமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
விரைவில் ஷாருக்கான் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் என்ன மாதிரியான படப்பிடிப்பில் ஷாருக்கான் கலந்து கொண்டார் என்பது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை.
http://dlvr.it/SrfQmd
Tuesday, 4 July 2023
Home »
» Shah Rukh Khan: படப்பிடிப்பில் நடந்த விபத்து; நடிகர் ஷாருக்கானுக்கு காயம்; பின்னணி என்ன?







0 comments:
Post a Comment