சீனாவில் பழங்காலத்தில் இருந்தே பாத் ஹவுஸ்கள் (Bath House) பிரபலம். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனித்தனியே குளிக்கும் இடங்கள் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளம் தான். ஆனால் சில பாத் ஹவுஸ் இடங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, மசாஜ், உணவு மற்றும் பானங்கள் என சகல வசதியோடு இருக்கும்.
மிகவும் சலிப்பாக இருப்பவர்கள், `போய் ஒரு குளியலைப் போட்டு விட்டு வருவோம்' என பாத் ஹவுஸ் பக்கம் கிளம்பிவிடும் பழக்கம் சீனாவில் இருக்கிறது.Woman with kid (Representational Image)
தற்போது வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணம் ஷென்யாங்கில் பாத் ஹவுஸ் ஒன்று அமைந்துள்ளது. இங்கே சமீபத்தில் வெளியான புதிய சேவை, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
அதாவது பாத் ஹவுஸிற்கு ஆண் குழந்தையை அழைத்து வரும் அம்மாக்களுக்கு உதவும் வகையில், `Rent A Dad' (வாடகை அப்பா) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் மட்டுமே இருப்பதற்காக இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வாடகைத் தந்தை அந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடையை மாற்றுவது, பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்வார். இந்தச் சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bath House (Representational Image)குழந்தை வளர்ப்பு...
அம்மாக்களுக்கு மட்டும் ஏன் குற்றவுணர்வு?
இந்த அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வரும் நிலையில், குழந்தைகளைப் பராமரிக்கும் ஆண்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்படுவார்கள், அவர்களுக்கு ஏதேனும் பயிற்சிகள் வழங்கப்படுமா, வாடகைத் தந்தையாக வருபவர்களுக்கான வயது வரம்புகள் என்ன என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை.
http://dlvr.it/Srm1YG
Thursday, 6 July 2023
Home »
» சீனாவில் வாடகை அப்பாக்கள் அறிமுகம்: Bath House-க்கு ஆண் குழந்தையோடு வரும் அம்மாக்களுக்கு உதவ திட்டம்







0 comments:
Post a Comment