மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் `த்ரெட்ஸ் செயலி' பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை அதிகமாகக் கண்காணிப்பதாக, ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் 17 வயதில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர், தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வருடமாக தன் தாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டெக்ஸாஸில் 74 ஆண்டுகள் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பணிக்குச் சென்ற மெல்பா மெபேன் (Melba Mebane) என்ற மூதாட்டி தனது 90 வயதில் ஓய்வுபெற்றிருக்கிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த மெல்பா மெபேன், அங்கு வேலை பார்க்கும் அனைவரிடமும் மிகுந்த பாசத்தோடு பழகிவந்திருக்கிறார்.
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் 27 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக்கைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. இது எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படுவதற்கான அறிகுறி என்று அந்த நாட்டின் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
பிரான்ஸில் சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கவும், கேமராவை உபயோகிக்கவும், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
பீய்ஜிங்கில் தொடர்ந்து பத்து நாள்களுக்கும் மேலாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஊழியர்களுக்கு Work from Home வசதியைப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். நான் நாட்டிலேயே இருந்து, என்மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்கொள்ளப்போகிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான சூழலைச் சரிசெய்ய, அமெரிக்க கருவூல செயலாளர் (Treasury Secretary) சீனா விரைந்திருக்கிறார்.
விபத்துக்குள்ளான ஓஷன் கேட் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சுழல்வது போன்ற பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/SrqmtT
Friday, 7 July 2023
Home »
» 74 ஆண்டுகள் லீவு எடுக்காமல் பணிக்குச் சென்ற மூதாட்டி|பீய்ஜிங்கில் கொளுத்தும் வெயில் -உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment