அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையே நீண்ட ஆண்டுக்காலமாக மோதல்போக்கு நீடித்துவருகிறது. இதற்கிடையே, வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த நிலையில், `தனது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை வீழ்த்துவோம். கொரிய தீபகற்பத்துக்கு அருகே அணுசக்தி ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்தும் வாஷிங்டனின் திட்டங்களைக் கண்டிக்கிறோம்' என வடகொரியா சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாகப் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ``வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது. அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் எல்லையைத் தாண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரித்தார். வட கொரியா
இந்த நிலையில், வடகொரியா நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை அதன் கிழக்குக் கடல் பகுதியில் வீசியதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிலுள்ள (Pyongyang) சுனான் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, Sea of Japan என்ற இடத்தில் விழுந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்றும் இந்த ஏவுகணை குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்திருக்கிறது. இது மாதிரியான ஏவுகணைச் சோதனைகள் வடகொரியாவின் ராணுவத்தை நவீனமயமாக்கும் கிம் ஜாங் உன்னின் திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.
வட கொரியாவின் இந்தச் செயலுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் அந்த நாட்டின் பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றன. இந்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் தென்கொரிய அதிபர் யூன் கலந்துகொள்ளவிருக்கிறார். வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்கள் தொடர்பாக கூட்டணி உறுப்பினர்களுடன் வலுவான ஒத்துழைப்பைக் கோருகிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
மு. அவந்திகாவட கொரியா அதிபர் மக்களுக்கு எச்சரிக்கை| Youtube-ன் புதிய சிஇஓ-வாக இந்தியர் நியமனம் - உலகச் செய்திகள்
http://dlvr.it/Ss3fMp
Wednesday, 12 July 2023
Home »
» ``வடகொரியா அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை கடலை நோக்கி வீசியது'' - தென்கொரியா குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment