அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ராணுவ அலுவலகமான பென்டகன் (Pentagon) உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ள சூரத் வைர வர்த்தக மையம் `உலகிலேயே மிகப்பெரிய அலுவலகம்’ என்ற பெருமையைத் தட்டிச் செல்ல உள்ளது.
சூரத் வைரங்களுக்குப் பெயர் போன ஊர். `இந்தியாவின் வைர நகரம்' என அழைக்கப்படும் சூரத் தனித்துவமான வைர டிசைன்களை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.வைரம் (மாதிரி படம்)ஜியோ ஃபைனான்ஸியல் சர்வீசஸ்! எதிர்பார்ப்புகளை தாண்டி பங்குவிலை நிர்ணயம்... எவ்வளவு தெரியுமா?
சர்வதேச சந்தைகளில் சூரத்தில் இருந்து வரும் நகைகளுக்கு என்றுமே தனிமதிப்பு இருக்கும். உலகின் 90 சதவிகித வைரங்கள் சூரத்தில் இருந்துதான் வெட்டப்பட்டு, மெருகூட்டப்படுகிறது.
சூரத் வைர வர்த்தக மையம் மற்றும் அதன் பிரமிப்பூட்டும் கட்டிட அமைப்புகள் குறித்து அறிந்து கொள்வோம்...
*குஜராத்தின் சூரத்தில் 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு அமைப்புகளிலும் 15 மாடிகள் இருக்கிறது.
*4,700 அலுவலகங்கள் வரை இந்த கட்டிடத்தில் செயல்பட முடியும். இந்த அலுவலகங்கள் மார்பல் தரையோடு, அழகான பிரகாசமான லைட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*வைரத்தை வெட்டும், பட்டை தீட்டும், விற்பனை செய்யும் பணிகளுக்காக 65,000 ஊழியர்கள் வரை இங்கு பணிபுரிய முடியும்.
*15 மாடிகளுக்கு சென்று வர 131 எலிவேடர்கள் (Elevators), உணவருந்தும் பகுதிகள், கலந்தாய்வு கூடங்கள் உள்ளன.
*தொழிலாளர்களுக்கான சுகாதார வசதிகளாக ஓய்வெடுக்க, சாதாரணமாக அமர்ந்து பேச என 1.5 ஏக்கர் பரப்பளவில் 9 முற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் அமர்வதற்கான இருக்கைகளும், தண்ணீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*இந்தியக் கட்டடக்கலை நிறுவனமான மார்போஜெனிஸ் (Morphogenesis), சூரத் வைர வர்த்தக கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க நான்கு வருடங்களானது எனவும், கோவிட் தொற்றின் பாதிப்பு காரணமாக 2 வருடங்கள் கட்டட பணிகளில் தாமதம் ஏற்பட்டது எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரத் வைர வர்த்தக மையம்ரூ.40 லட்சம் வரை விற்கப்படும் சூரத் வைர பற்கள்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?
*கட்டடத்தைக் கட்டி முடிப்பதற்கான மொத்த செலவு 3,200 கோடி.
*கடந்த 80 வருடங்களாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலகமாகத் திகழ்ந்து வரும் பென்டகனின் தரை பரப்பளவு 6.5 மில்லியன் சதுர அடி ஆகும். இப்போது சூரத் வைர வர்த்தக மைய கட்டிடத்தின் தரை பரப்பளவு 7.1 மில்லியன் சதுர அடியாக உள்ளது.
*வரும் நவம்பர் மாதம் இந்த கட்டடத்தை இந்திய பிரதமர் நரேந்தி மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைரங்களுக்கான ஒரே நிலையமாக (One stop Station) இந்தக் கட்டடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SsSbv8
Thursday, 20 July 2023
Home »
» `உலகின் மிகப்பெரிய கட்டிடம்' 35 ஏக்கரில் குஜராத்தில் அமையும் வைர வர்த்தக மையம்... என்ன ஸ்பெஷல்..?







0 comments:
Post a Comment