தங்கம் விலை இனியாவது குறையுமா? குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்குமா? அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பால் இது நடக்கலாமோ என்ற பலத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
தங்கத்தை விரும்பாத பெண்கள் இல்லை, அதை வேண்டாம் என கூறும் ஆண்களும் இல்லை. இப்படிப்பட்ட தங்கத்தை இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளது. இதை பல்வேறு வழிகளில் வாங்கி விற்று லாபம் பார்க்க முடியும்.தங்கம் சாமானியர்கள் தங்கம் வாங்கும் நிலை வருமா? இனி விலை குறையுமா... குறையாதா..?
குறிப்பாக கமாடிட்டி சந்தையில் வாங்கி விற்பனை செய்வதன் மூலமும், ஷார்ட் செய்து வாங்குவதன் மூலம் லாபம் பார்க்க முடியும். ஆக இது முதலீட்டாளர்களுக்கு மிக சரியான வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது. தங்கம் விலை அதிகரிக்கும் போதெல்லாம் குறைந்த விலையில் வாங்கி, அதிக விலையில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்பனை செய்து உடனுக்குடன் லாபம் பார்க்க முடிகிறது. எனினும் தங்கம் விலை எப்போது அதிகரிக்கும்? எப்போது குறையும் என்று கணிப்பது மிகப்பெரிய சவாலான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
பொதுவாக தங்கம் விலையானது சர்வதேச பொருளாதாரம், அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், டாலரின் மதிப்பு, பங்கு சந்தைகளின் போக்கு, தேவை எப்படி இருக்கிறது? இந்தியாவை பொறுத்தவரையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கம் விலையில் பிரதிபலிக்கிறது.
தங்கம் விலை சரிவு...
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வரவிருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் , வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் காரணமாக தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்று பின்வாங்கி உள்ளது எனலாம். இது சமீபத்திய உச்சமான அவுன்ஸூக்கு 1968 என்ற லெவலில் இருந்து, தற்போது அவுன்ஸூக்கு 1950 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது.
தொடர்ந்து சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இரண்டு வாரங்களாக உச்சத்தை கண்ட சந்தையானது, நடப்பு வாரத்தில் சரியத் தொடங்கியுள்ளது. இது வரவிருக்கும் நாட்களிலும் தொடருமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அமெரிக்கா... பணவீக்கம், கடன் உச்சவரம்பு நெருக்கடிரூபாய் - திர்ஹாம் வர்த்தகம்... இனி ரிஸ்க் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு...!
ஆர்வம் அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் பணவீக்கம் என்பது மீண்டும் சற்று பின் வாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகித அதிகரிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி குறைவாக இருக்கும் போது வட்டியில்லா முதலீட்டிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம். இது தங்கம் விலையை ஊக்குவிக்க காரணமாக அமையலாம்.
முதலீட்டாளர்கள் கவனம்..
மேலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகள் இன்னும் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியை காண்பதையே சுட்டிக் காட்டுகிறது. இது அதிகளவிலான விலை சரிவை தடுக்கிறது. எனினும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சிக்கான அறிகுறிகள் என்பது வலுவாக காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் கவனத்தை மற்ற முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது.
எப்படியிருப்பினும் ஜூலை 26 அன்று அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெற உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்குமா அல்லது வட்டியை அப்படியே மாற்றம் செய்யாமல் வைத்திருக்குமா? என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது தங்கம் விலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.அமெரிக்கன் டாலர்ரூபாய் - திர்ஹாம் வர்த்தகம்... இனி ரிஸ்க் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு...!
டாலர் மதிப்பு அதிகரிப்பு
அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலர் மதிப்பானது சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இன்று தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு அதிகரிப்பால், டாலரில் தங்கத்தை வாங்குபவர்களுக்கு இது தங்கத்தை விலை உயர்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது. ஆக இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் இன்று தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.
வட்டி குறையலாம்?
நடப்பு ஆண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்க பட்டாலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியானது அடுத்த ஆண்டில் வட்டி அதிகரிப்பு என்பதை நிறுத்தி வைக்கலாம். குறைந்த வட்டி விகிதமானது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சீனாவின் தேவை ஆதரவளிக்கும்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் 2.2% எனும் அளவுக்கு விரிவடைந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 0.8% எனும் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது மேற்கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை கொடுக்கலாம். தங்கத்தை வாங்கி குவிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.சீனாEMI-ல் ஏ.சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கினால் லாபமா, நஷ்டமா?
விலை எப்படி இருக்கும்?
தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில வாரங்களாக உச்சத்தை எட்டி வந்த நிலையில், இது புராபிட் புக்கிங் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. இந்திய சந்தையை பொறுத்த வரையில் ஆகஸ்ட் மாத காண்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், இதுவும் புராபிட் புக்கிங் மற்றும் ரோல் ஓவர்களுக்கு வழிவகுக்கலாம். ஆக குறுகிய காலத்தில் விலை குறையலாம். ஆக தங்கம் விலை குறையும் போதெல்லாம் அதை வாங்கி வைக்கலாம். இது நீண்ட கால நோக்கில் லாபம் தரக் கூடிய ஒன்றாக இருக்கும். ஆக விலை குறைந்தால் அது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நல்ல சான்ஸ் என்று கூறலாம்.
http://dlvr.it/SsJqFW
Monday, 17 July 2023
Home »
» அமெரிக்கா பின் வாங்கப் போகிறதா... தங்கம் விலை இனி என்னவாகும்?







0 comments:
Post a Comment