இந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி, உலக அளவில் மிகவும் வெப்பமான நாளாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 டிகிரி பேரன்ஹீட்) ஆக அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகின் அதிக வெப்ப நிலையாக 16.92 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஜூலை 3-ம் தேதி பதிவான வெப்பநிலை, அதனை மிஞ்சி உள்ளது. உச்சம் தொட்ட வெப்பநிலை`உயரும் வெப்பநிலை... உயிரினங்கள் பிழைத்திருப்பதே சவாலானது!'
IPCC-யின் ஆய்வறிக்கை சொல்வதென்ன?
தெற்கு அமெரிக்கா, கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப அலைகளை சந்தித்து வருகிறது. சீனாவிலும், வெப்பநிலை அதிகரித்த வண்ணமே தொடர்கிறது. தற்போது, சீனாவில் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பேரன்ஹீட்) என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்கா பகுதியில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றே கூறலாம். அங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பேரன்ஹீட்) என்ற அளவை நெருங்கி வருகிறது.
பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. ஆனால், அதற்கு எதிர்மறையாக வெப்பநிலை அங்கும் அதிகரித்து வருகிறது. அர்ஜுன்டைன் தீவில் இருக்கும் உக்கரனின் வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சி மையத்தில், இதுவரை இல்லாத அளவில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது, உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்வதை புரிந்துகொள்ள முடிகிறது.காலநிலை மாற்றம்காலநிலை மாற்றம்... மனித இனத்துக்கு விடப்பட்ட ‘கோட் ரெட்’! - என்ன செய்யப்போகிறோம்?
காலநிலை மாற்றம் குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்ட்டியூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது நாம் கொண்டாட வேண்டிய மைல்கல் என நினைக்க வேண்டாம். உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என்று எச்சரித்துள்ளார்.
"உலக அளவில் கார்பன் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனால், பருவநிலை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த உச்சபட்ச வெப்பநிலையானது நேரடியாக எல் நினோ தாக்கத்தின் விளைவு தான். இப்படியே சென்றால், இவ்வுலகில் மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்" என்று கவலை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்.
http://dlvr.it/SrvM6F
Sunday, 9 July 2023
Home »
» ``உச்சம் தொட்ட வெப்பநிலை; மக்களே... இது அபாய ஒலி" எச்சரிக்கும் விஞ்ஞானி..!







0 comments:
Post a Comment