ஓவியர் மாருதி காலமானார். புதுக்கோட்டையில் பிறந்த இவருடைய இயற்பெயர் வி. ரங்கநாதன், வயது 86. புணே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கரோனா காலத்தில் மறைந்தார். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் வார இதழ்களில் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார். 'ஃபோட்டோபினிஷிங்'கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/cdLDOyN https://ift.tt/P873RDN
via
IFTTT
0 comments:
Post a Comment