துருக்மெனிஸ்தானில் அர்கடாக் (Arkadag) என்ற 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் நகரத்தை, அதன் முன்னாள் தலைவர் குர்பாங்குலி பெர்டிமுகமெடோவின் (Gurbanguly Berdymukhamedov) நினைவாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
கிரீஸ் நாட்டின் இடதுசாரி தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ், சிப்ராஸ் சிரிசா கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. இதனால் சுமார் 40,000 காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
Apple Inc-ன் சந்தை மூலதனம் கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு முதன்முறையாக $3 டிரில்லியன் மதிப்பைத் தாண்டியிருக்கிறது.
பிரேசிலில் 2022-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், முன்னாள் அதிபருக்கு 2030 வரை தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
மால்டோவாவின் சிசினாவ் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மால்டோவன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்தனர்.
ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் Alan Arkin தனது 89-ம் வயதில் காலமானார். இவர் 2007ல் Little Miss Sunshine என்ற படத்துக்காக விருது பெற்றார்.
இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் சாக் கோல்ட்ஸ்மித் (Zac Goldsmith) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரின் அறிவிப்பை ரிஷி சுனக் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற வார்னர் புரோஸ் ஸ்டுடியோவில் (Warner Bros Studio) தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவில், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். 2022-ம் ஆண்டில் மொத்தம் 476 நபர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SrWXSP
Saturday, 1 July 2023
Home »
» ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மரணம் | 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் நகரம் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment