Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 4 July 2023

அமெரிக்கா: இந்திய வம்சாவளிப் பெண் எம்.பி-யை அச்சுறுத்தும் வகையில் பின்தொடர்ந்த நபருக்கு ஓராண்டு சிறை

அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளிப் பெண் எம்.பி பிரமிளா ஜெயபாலுக்கு (Washington 7th Congressional District) கொலை மிரட்டல் விடுத்த 49 வயது நபர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு எம்.பி பிரமிளா ஜெயபால் வீட்டுக்கு வெளியே, பிரட் ஃபோர்சல் (Brett Forsell) என்பவர் அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியுடன் பின்தொடர்ந்து வந்ததையடுத்து போலீஸார், அந்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.இந்திய வம்சாவளிப் பெண் எம்.பி பிரமிளா ஜெயபால் அப்போது, பிரமிளா ஜெயபாலின் அக்கம் பக்கத்தினர், பிரட் ஃபோர்சல் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியாகவும், பிரமிளா ஜெயபாலின் வீட்டின் அருகே கூடாரம் அமைக்க முயன்றதைப் பார்த்ததாகவும் கூறினர். ஆனால், பிரட் ஃபோர்சல் பிரமிளா ஜெயபாலை இந்தியாவுக்குப் போகச் சொன்னாரா அல்லது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா என்பதை போலீஸாரால் உறுதியாகக் கூற முடியாததால், அடுத்த நான்கு நாள்களிலேயே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த வியாழன்று சியாட்டிலின் கிங் கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டில் (Seattle's King County Superior Court) வழக்கறிஞர்கள், பிரமிளா ஜெயபாலை பிரட் ஃபோர்சல் பலமுறை பின்தொடர்ந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து பிரட் ஃபோர்சல், வழக்கறிஞர்கள் தன்மீது வைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பிறகு நீதிமன்றம் பிரட் ஃபோர்சலுக்கு 364 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவு முன்னதாக, பிரட் ஃபோர்சல் பிரமிளா ஜெயபாலிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், எட்டு ஆண்டுகளுக்குத் துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால் தன்னுடைய 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். அதன் பிறகு, 2016-ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்மணியானார் பிரமிளா ஜெயபால்.அமெரிக்கா: கொள்ளை முயற்சி... இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக் கொலை! - நடந்தது என்ன?!
http://dlvr.it/SrgJYd

0 comments:

Post a Comment