Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 4 July 2023

தாயிடம் அடிவாங்குவதிலிருந்து தப்பிக்க 5-வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் - அடுத்து நடந்தது என்ன?

பெற்றோர்களில் எப்போதுமே இருவகைகள் இருப்பர். அதில் ஒரு தரப்பினர் தங்கள் பிள்ளைகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் பக்குவமாய் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும் என்று இருப்பார்கள். இன்னொரு தரப்பினர், பிள்ளைகளை அதட்டி, அடித்து வளர்த்தால் தான் சொன்ன பேச்சை கேட்பார்கள் என்று இருப்பார்கள். இதில் இரண்டாவது ரக பெற்றோர்களால், பிள்ளைகள் எங்கு அப்பா அம்மா தன்னை அடிப்பார்களோ என்ற பயத்திலேயே முதலில் பொய் சொல்ல ஆரம்பித்து போகப் போக சில விபரீத செயல்களில் ஈடுபடுவதுண்டு.பெற்றோர்! இந்த நிலையில் சீனாவில் இப்படித்தான் 6 வயது சிறுவன் ஒருவன், தன்னுடைய தாயிடமிருந்து அடிவாங்குவதிலிருந்து தப்பிக்க 5-வது மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் ஜூன் 25-ம் தேதியன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுவன் தன்னுடைய தாய் குச்சியால் அடிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக, அடுக்குமாடிக் கட்டடத்தின் வெளிப்புறத்திலுள்ள ஏர் கண்டிஷனிங் யூனிட் மீது ஏறி கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறுவன், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும் பல எலும்புகள் முறிந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறுவன் கீழே குதிப்பதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.அடுக்குமாடி குடியிருப்பு பின்னர் அந்த வீடியோ பரவலாக வைரலாக இணையதளவாசிகள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `கீழே குதிப்பதை விடவும், தன்னுடைய தாய் அடிப்பதற்குத் தான் சிறுவன் அதிகம் பயந்தான்' என்று கமென்ட் செய்திருக்கிறார். மேலும் இதுபற்றி போலீஸார், சிறுவனின் தாயார், எங்கு தன்னுடைய மகன் கீழே விழுந்துவிடுவானோ என்ற கவலையில், மகனை உள்ளே வரவழைக்க வற்புறுத்தும் விதமாகத் தாக்கியதாகத் தெரிவித்தனர். எப்படியாயினும் இத்தகைய அதிர்ச்சிகரமான சம்பவமானது, சீனாவில் வலுவான குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தேவை என்று பேசவைத்திருக்கிறது.புது பைக்கை கங்கையில் நீராட்டிய சிறுவன்... திடீரென ஆற்றுக்குள் இழுத்துச்சென்ற முதலை - என்ன நடந்தது?
http://dlvr.it/Srfsb9

0 comments:

Post a Comment