Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Sunday, 9 April 2023

இந்தியாவுக்கு வரும் உக்ரைன் அமைச்சர் | பாண்டா கரடிக்கு `Farewell' - உலகச் செய்திகள்

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சு மல்ஹி என்ற சமையல் கலைஞருக்கும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவருடன் அந்த நாட்டின் `British Empire Medal' என்ற விருதைப் பெற்றவர்களும், நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். சீனா, தைவான் எல்லையில் தன்னுடைய போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி, எல்லையில் போர் விமானங்களைப் பறக்கவிட்டது. தைவான் அதிபரின் அமெரிக்கப் பயணத்துக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளில் சீனா இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இரானில் பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதிசெய்ய பொது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், இனி ஹிஜாப் அணியாத பெண்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமாம். உக்ரைனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான Emine Dzhaparova, ஏப்ரல் 10-ம் தேதி இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வரவிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கி, உக்ரைன் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதன் முறை. சிரியாவிலிருந்து மூன்று ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த வாரம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அயர்லாந்தில் சந்திக்கவிருக்கிறார். நியூரம்பெர்க் விசாரணையில், எஞ்சியிருந்த கடைசி வழக்கறிஞரான பென் ஃபெரென்ஸ் தன்னுடைய 103-வது வயதில் காலமானார். நாசி முகாம்களில் நடந்த கொடூரங்களை, வெளியிலிருந்து ஆவணப்படுத்திய முதல் நபர் பென் என்பது குறிப்பிடத்தக்கது. மெம்பிஸ் சரணாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டா கரடி 'யா யா', மீண்டும் சீனாவுக்குச் செல்லவிருக்கிறது. அதன் காரணமாக அந்தப் பகுதி பார்வையாளர்கள் பாண்டாவை வழியனுப்ப சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.
http://dlvr.it/SmCwkk

0 comments:

Post a Comment