Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 12 April 2023

தந்தைக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு 640 கி.மீ பயணித்த 12 வயது சிறுமி! - எதற்காகத் தெரியுமா?

இன்றைய இணையதள உலகில் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும் என்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இந்த இணையம், முகம் தெரியாத பலருடன் பழகுவதற்கு ஓர் ஊடகமாகச் செயல்படுகிறது. அவ்வாறு இணையத்தில் யாரென்றே தெரியாத, எங்கோ இருப்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அத்தகைய நபரைக் காண பலர் நாடு கடந்துசென்ற சம்பவங்களும் நிறைய உண்டு. அவை சில நேரங்களில் நல்லபடியாகவும், சிலநேரம் விபரீதமாகவும் முடிந்திருக்கின்றன.online friendship இந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய தந்தைக்கே தெரியாமல் அவரின் காரை எடுத்துக்கொண்டு, ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்ட நபரைக் காண்பதற்காக 640 கி.மீ சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஜேட் கிரிகோரி (Jade Gregory) எனும் 12 வயது சிறுமி, ஃபுளோரிடா (Florida) மாகாணத்தின் யூனியன் கவுன்ட்டியில் (Union County) வசிப்பவராவார். இவர் கடந்த வாரம் தன்னுடைய 14 வயது தோழி க்ளோ லார்சனுடன் (Khloe Larson) சேர்ந்துகொண்டு, ஆன்லைனில் பழக்கமான நபரைக் காண லூசியானாவுக்குச் செல்ல முடிவுசெய்து காரில் புறப்பட்டார். இவ்வாறு திடீரென இவர்கள் காணாமல்போனது பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இவர்கள் காணாமல்போனதாக மாகாணம் முழுவதும் தொலைக்காட்சிகளில் தகவல்கள் ஒளிபரப்பப்பட்டன.போலீஸ் பின்னர் அலபாமாவிலுள்ள (Alabama) ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் தொலைக்காட்சியில் தங்களுடைய படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இந்தச் சிறுமிகள், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவலைச் சொல்லியிருக்கின்றனர். பிறகு சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டுக்குவந்து சேர்ந்தனர். அதே சமயம் சிறுமிகள் சந்திக்கச் சென்ற நபர், அவர்களைக் கடத்த முயன்றாரா என்றும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.ஆன்லைனில் ரூ. 2.47 லட்சத்திற்கு விளையாட்டுப் பொருள்கள் ஆர்டர்... வாயடைக்கச் செய்த 5 வயது சிறுமி!
http://dlvr.it/SmLvC7

0 comments:

Post a Comment