Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 11 April 2023

"இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையா?" - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றிருந்தார். மேலும், அங்கு இந்தியக் குடியரசுத் தலைவரின்கீழ் இரண்டாவது `G-20’ நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள்  கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அப்போது அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல்  எகனாமிக்ஸ் (Peterson Institute for International Economics) தலைவர் ஆடம் எஸ்.போசன், `எதிர்க்கட்சியிலுள்ள எம்.பி-க்கள் பதவி இழப்பது, இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது குறித்து மேற்கத்திய ஊடகங்களில் பரவலான செய்திகள் வருகின்றன. இது போன்ற கண்ணோட்டமே இந்தியாவில் முதலீடு செய்வதை பாதிக்கும்' எனக் கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “உங்களின் கருத்துக்கு பதில், இந்தியாவுக்கு வரும் முதலீட்டாளர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியாவில் இருக்கும் ஆரோக்கியமான சூழல்தான் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான காரணம்.  சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாக சாதாரண அறிக்கைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களால் உருவாக்கப்படும் கருத்துகளைக் கேட்பதற்கு பதிலாக, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்க்க வாருங்கள். உலகில் அதிக முஸ்லிம் மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையாக இருந்தால், 1947-ல் இருந்ததைவிட முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை குறைந்திருக்குமே?மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக உறுதியளித்த இஸ்லாமிய நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட  பாகிஸ்தானில், ஒவ்வொரு சிறுபான்மைக் குழுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. சில முஸ்லிம் பிரிவுகள்கூட அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வியாபாரத்தைச் செய்கிறார்கள், அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு அரசால் உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உலக வர்த்தக அமைப்பு (WTO) இன்னும் முற்போக்கானதாக, எல்லா நாடுகளின் பேச்சைக் கேட்கக்கூடியதாக, நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மற்ற நாடுகளின் குரல்களுக்கும் இடம் கொடுத்து கேட்க மட்டுமல்ல, சற்று கவனிக்கவும் வேண்டும்" என்றார்.``90% முஸ்லிம்கள் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமையால் மதம் மாறியவர்களே!" - பீகார் அமைச்சர்
http://dlvr.it/SmJMKB

0 comments:

Post a Comment