அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஃபுல்டன் கவுன்ட்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பரிசோதனைகளுக்குப் பின்னர் தெரியவர, அவர் மனநலப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 13, 2022 அன்று, தாம்சன் தனது சிறை அறையில் நினைவிழந்த நிலையில் எந்தவித சலனமும் இன்றி கிடந்திருக்கிறார். உடனே அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தாம்சனின் வழக்கறிஞர், ``மூட்டைப்பூச்சிகள் அவரை உயிருடன் தின்றதால்தான், அவர் இறந்துவிட்டார்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். அதோடு அவருடைய குடும்பத்தினர் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்தச் சிறையை மூடிவிட்டு, தரமானதாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மரணம்
இது குறித்து தாம்சன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் மைக்கேல் டி.ஹார்பர் ஊடகங்களிடம் பேசுகையில், "தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை சுகாதாரமற்று மூட்டைப்பூச்சிகள் நிறைந்திருந்தன. அவரை மூட்டைப் பூச்சிகள் உயிருடன் தின்றிருக்கின்றன. அவருக்கு இத்தகைய கொடூரமான சாவு நிகழ்ந்திருக்கக் கூடாது.
அவர் சலனமற்று கிடந்தபோது, சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்க சிறை அதிகாரி ஒருவர் முதலில் மறுத்தார். அவருடைய சாவுக்கு சிறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். யாரேனும் ஒருவர் கண்டிப்பாக பதில் கூற வேண்டும். மேலும் தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த அறை எவ்வளவு சுகாதாரமின்றி அழுக்கு நிறைந்ததாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. அவரின் உடலும் மிகவும் அழுக்காக இருந்தது" என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், தாம்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்படி, அவரின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை. ஆனால். கடுமையான மூட்டைப் பூச்சி தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனினும் அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இது தொடர்பாக ஃபுல்டன் கவுன்ட்டி ஷெரஃப் அலுவலகம் அளித்த அறிக்கையில், ``தாம்சனின் மரணம் குறித்து முழு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
மூட்டைப்பூச்சிகள், பேன்கள், பிற பூச்சிகளின் தொல்லைகளைத் தீர்க்க 5,00,000 டாலர் பயன்படுத்தி சிறையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சுற்றுகளுக்கான நெறிமுறைகளைப் புதுப்பித்தல் உட்பட சிறையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மேலும், தற்போது இருக்கின்ற சிறையின் பாழடைந்த நிலையை மாற்றி அதைப் புதுப்பித்து, மேம்படுத்தி, சுகாதாரமான முறையில் மாற்றும் எங்கள் இலக்குக்கான பயணம் மிகவும் எளிதானது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமே. தற்போது தாம்சனுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் வேறு ஏதேனும் கிரிமினல் குற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்ற பாணியிலும் விசாரணை நடத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து கென்டக்கி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் மைக்கேல் பாட்டர் பிபிசி-யிடம், ``பொதுவாக மூட்டைப்பூச்சிகள் மரணத்தை உருவாக்கும் அளவுக்குக் கொடியது அல்ல. ஆனால், சில அரிதான சந்தர்ப்பங்களில், நீண்டகாலமாக அதிகமான மூட்டைப்பூச்சிகளின் தொல்லைக்கு ஆளானால், அது கடுமையான ரத்த சோகையை ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தானது. ஏனெனில் இந்த மூட்டைப்பூச்சிகள் ரத்தத்தை உண்கின்றன" என்று கூறியிருக்கிறார்.அமெரிக்கா: பண்ணையில் தீ; 18,000 மாடுகள் பரிதாபமாக பலியான சோகம்!
http://dlvr.it/SmYzP1
Sunday, 16 April 2023
Home »
» அமெரிக்கா: சிறைக் கைதியை உயிருடன் தின்றனவா மூட்டைப்பூச்சிகள்? - அதிர்ச்சியைக் கிளப்பிய மரண விவகாரம்







0 comments:
Post a Comment