Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 8 April 2023

`138 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை!’ - கொண்டாட்டத்தில் அமெரிக்க குடும்பம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்ட்ரூ கிளார்க் மற்றும் கரோலின் கிளார்க் தம்பதி. இவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 1885-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்ட்ரூ கிளார்க் குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக பெண் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. தற்போது சுமார் 138 ஆண்டுகளுக்குப் பிறகு அக்குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிளார்க் தம்பதி இது குறித்து ஆண்ட்ரூ கிளார்க் கூறுகையில், “பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தில் நேரடி பெண் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. என் மனைவி இரண்டாவது முறையாக கர்பமான போது கருச்சிதைவு ஏற்பட்டது. எனவே, மீண்டும் கருத்தரித்தபோது நாங்கள் ஆண், பெண் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது. ஆனால் எங்களுக்கு நடந்த, குழந்தையின் பாலினத்தை கணிக்கும் விழாவில், என் நண்பர்கள் குழந்தையின் பாலினத்தை எங்களுக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் நாங்கள் கடித்த குக்கீஸில் பிங்க் நிறம் இருந்ததை நான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த நிமிடங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை’’ எனக் கூறியுள்ளார்.கிளார்க் குடும்பம்47 வயதில் குழந்தை பெற்ற தாய், 23 வயதில் அக்கா ஆகியிருப்பதாக நடிகை மகிழ்ச்சி! கரோலின் கிளார்க், “ என் கணவர் அவரது குடும்பத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் குழந்தைகளே இல்லை எனக் கூறியதை முதலில் நான் நம்பவில்லை. அதை உறுதிப்படுத்த அவரின் பெற்றோரிடம் கேட்டேன். அவர்களும் இதையே கூறினார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் நிலவில் உள்ளதை போல் உணர்கிறோம். என் மகள் ஆட்ரியின் வருகையால் குடும்பம் முழுமையடைந்துவிட்டது. அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். என் கணவரின் பெற்றோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்” எனப் பகிர்ந்துள்ளார்.
http://dlvr.it/Sm9jgv

0 comments:

Post a Comment