மக்கள் தொகையில் சீனாவைக் கூடிய விரைவிலேயே இந்தியா முந்தும் எனப் பல நிபுணர்கள் கணித்து இருந்தனர். இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் உலக மக்கள் தொகை அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்த ஆண்டு மத்தியில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 1.4286 பில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 1.4257 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபை!``உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா பங்களிப்பு 50% இருக்கும்...” ஆய்வறிக்கை சொல்வதென்ன?
இந்தோனேஷியா, பாகிஸ்தான், நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் முறையே நான்கு, ஐந்து, ஆறு என வரிசையாக முதல் 10 இடத்தை பிடித்துள்ளது.
மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது மக்களிடையே வாழ்வாதாரத்திற்கான அச்சத்தை அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில், ``மக்கள் தொகை எண்கள் பயத்தையோ அல்லது எச்சரிக்கையையோ உருவாக்கக் கூடாது. மாறாகத் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விருப்பங்கள் நிலைநிறுத்தப்பட்டால், முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கவேண்டும்'' என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் இந்தியப் பிரதிநிதியாக இருக்கும் ஆண்ட்ரியா வோஜ்னர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
http://dlvr.it/SmnPQY
Thursday, 20 April 2023
Home »
» `உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா?!'
ஐ.நா அறிக்கை சொல்வது என்ன?







0 comments:
Post a Comment