பிரெஞ்சு செனட்டர்கள் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரான்ஸ்: பிரெஞ்சு செனட்டர்கள் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதனால் நாடு முழுவதும் எதிர்ப்புகளையும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கன்சர்வேட்டிவ் லெஸ் ரிபப்ளிக்கைன்ஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தும் செனட்டின் 201 உறுப்பினர்கள், ஓய்வு பெறும் வயது குறித்த சீர்திருத்தத்தின் முக்கிய பிரிவு 7க்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே நேரத்தில் 115 பேர் அதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். சீர்திருத்த மசோதாவின் மீதமுள்ள பிரிவுகளுக்கு பிரெஞ்சு மேலவை இந்த வார இறுதியில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் ஓய்வூதிய மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசு நம்புவதாக தெரிகிறது.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Bu5NPL8 https://ift.tt/PgJ4QU8
via
IFTTT
0 comments:
Post a Comment