Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Sunday, 2 April 2023

அமெரிக்கா: இந்துக்களுக்கு எதிரான `இந்துபோபியா'-வைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாகாணம்!

இந்துக்களை ஒடுக்கும் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இந்துபோபியாவைக் (Hinduphobia) கண்டித்து அதற்கெதிராக, அமெரிக்காவில் முதல் மாகாணமாக, ஜார்ஜியா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.அமெரிக்கா அட்லாண்டாவின் (Atlanta) ஃபோர்சித் (Forsyth) கவுன்ட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள் லாரன் மெக்டொனால்ட் (McDonald), டோட் ஜோன்ஸ் (Todd Jones) கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தில், ``100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றும், உலகின் மிகப்பெரிய பழைமையான மதங்களில் ஒன்று இந்து மதம். மருத்துவம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல், நிதி, கல்வித்துறை, உற்பத்தி, எரிசக்தி, சில்லறை வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் இங்கிருக்கும் இந்து சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்து சமூகத்தின் பங்களிப்புகளான யோகா, ஆயுர்வேதம், உணவு, இசை, கலைகள் போன்ற கலாசார கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது. மேலும் இது, அமெரிக்க சமூகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக, அமெரிக்காவின் பல பகுதிகளில் இங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்து மதத்துக்கு எதிரான இந்துபோபியா தீவிரமடைந்திருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.அமெரிக்கா - இந்தியா அதைத் தொடர்ந்து பேசிய CoHNA பொதுச்செயலாளர் ஷோபா ஸ்வாமி (Shobha Swamy), ஜார்ஜியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலுள்ள அமெரிக்க இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அமெரிக்காவின் கட்டமைப்பை வளப்படுத்தும் சமூகத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது. எனவே இந்திய வம்சாவளி மக்களுக்குச் சிறப்பு சட்டங்கள், கண்காணிப்பு தேவை" என்று கூறினார். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.``ராகுல் காந்தி வழக்கை நாங்களும் கவனித்துவருகிறோம்” - அமெரிக்கா சொல்வதென்ன?!
http://dlvr.it/SlsFk4

0 comments:

Post a Comment