Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 1 April 2023

`மாத்திரையை எதிர்க்கும் வீரியத்துடன் உருமாறுகிறது கொரோனா வைரஸ்' - அமெரிக்க ஆய்வு சொல்வதென்ன?

அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் (Paxlovid) எனப்படும் கொரோனா தடுப்பு மாத்திரையை தயாரித்து நீண்ட ஆய்வுக்குப் பின்னர் வெளியிட்டது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.Paxlovid கொரோனா தடுப்பு மாத்திரைமீண்டும் பரவும் கொரோனா - அலர்ட்டாக இருக்கிறதா தமிழக மருத்துவத்துறை?! பெருந்தொற்றுக் காலத்தில், `` தினமும் இருமுறை, மூன்று மாத்திரைகள் வீதம் ஐந்து நாள்களுக்கு இந்தக் கொரோனா தடுப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாக்ஸ்லோவிட் மாத்திரை சாப்பிட்டவர்களில் யாரும் மரணிக்கவில்லை. பாக்ஸ்லோவிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையோ, இறப்பு ஏற்படும் நிலையோ 89% குறையும்” என பைசர் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் உலக அளவில் விற்பனையில் சாதனையும் படைத்தது. ஆனால் தற்போது, பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கொரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவ ஆய்வு உறுதி செய்து அறிவித்துள்ளது. இந்த மருத்துவ அறிக்கை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டா மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா சான் டியாகோவை சேர்ந்த விஞ்ஞானிகள், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர். அதில், ``பாக்ஸ்லோவிட் மாத்திரை சாப்பிட்ட கொரோனா நோயாளிகளுக்கு, அவர்கள் உடலில் இயற்கையாக உருவாகும் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது.. இதனால் இந்த மாத்திரை எடுத்து நோயில் இருந்து மீண்டவர்களுக்கு  மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதுடன், அது பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை எதிர்க்கும் வீரியத்தையும் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ்எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்கத்தின் விரிவான பாடப் புத்தகம்! இதனால், பல்வேறு மருந்துகளின் கூட்டுக் கலவை மூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். குறிப்பாக எச்ஐவி, ஹெபாடிடிஸ் சி வைரஸ் சிகிச்சைக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/Slq8B5

0 comments:

Post a Comment