இந்திய - சீன எல்லைப் பிரச்னையில், கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸும், அடிக்கடி பா.ஜ.க-வைச் சாடிவருகிறது. இப்படியான நெருக்கடியான சூழலில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், சீன ராணுவத்தின் அத்துமீறலைத் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கியிருந்தது.இந்தியா - சீனா
இந்த நிலையில், 2014, 2017-ம் ஆண்டைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு, சீனா பெயர் மாற்றம் செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இடங்களை `தெற்கு திபெத்' என சீனா குறிப்பிடுகிறது.
இது குறித்த அறிக்கையை கடந்த ஞாயிறு (ஏப்ரல் 2) அன்று சீனா வெளியிட்டது. அந்த அறிக்கையில், இரண்டு நிலப்பரப்பு பகுதிகள், இரண்டு ஆறுகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், ஐந்து மலைப் பகுதிகள் என 11 இடங்கள், சீனாவின் மாவட்ட நிர்வாகங்களின்கீழ் பெயர் பட்டியலிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்தியா - சீனா எல்லை விவகாரம்
இந்தச் செய்தி தெரியவந்ததையடுத்து இந்தியா தரப்பிலிருந்து இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும். சில பெயர்களை மாற்றுவதால் இந்த நிலை மாறிவிடாது" என்று தெரிவித்தார்.சீனாவின் அத்துமீறலைத் தடுப்பதற்கு களமிறங்கும் மத்திய அரசு... அதிரடித் திட்டங்கள் என்னென்ன?!
http://dlvr.it/Sm1QB0
Wednesday, 5 April 2023
Home »
» அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்த சீனா - இந்தியா பதிலடி!






0 comments:
Post a Comment