Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 31 July 2023

80 ஏக்கரில் பூந்தோட்டம்; 50-வது திருமணநாளில் மனைவிக்கு ஷங்கர் படம் போல சர்ப்ரைஸ் கொடுத்த விவசாயி!

பொதுவாக சூரியகாந்தி பூக்கள் குளிர்காலம் முடியும் காலநிலையில்தான் பயிர்செய்யப்படும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த விவசாயி ஒருவர் முற்றிலும் புதுமையாக, கோடைக்காலத்தில் சூரியகாந்திகளை பயிரிட்டுள்ளார். இதற்கான பிரத்யேக காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் கன்ஸாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் லீ வில்சன் மற்றும் ரெனி வில்சன். தம்பதியான இவர்கள் அடுத்த மாதம் தங்களின் 50-வது திருமண நாளை கொண்டாடவுள்ளனர். Sun Flower (Representational Image) இந்நிலையில், இந்த சிறப்புவாய்ந்த நாளில் தன் மனைவிக்கு மிகவும் பிடித்த சூரியகாந்தி மலர்களை அவருக்கு பரிசாக அளிக்கத்தான் லீ, புதிதாக கோடைக்காலத்தில் சூரியகாந்தியை பயிர்செய்துள்ளார். மனைவி ரெனிக்கு சூரியகாந்தி மிகவும் பிடிக்கும் என்பதால், தன் 80 ஏக்கர் வயல் முழுவதும் சூரியகாந்தியை பயிர் செய்துள்ளார் லீ. இதை தன் மகனின் உதவியுடன் செய்ததோடு, இதை தன் மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார். பின்னர் சூரியகாந்திகள் நன்கு வளர்ந்து பூத்துக்குலுங்கும் நேரத்தில் தன் மனைவியை நேரில் அழைத்துவந்து காட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் லீ. இதுபற்றி பேட்டியளித்துள்ள அவர், ``நானும் ரெனியும் எங்கள் உயர்நிலை பள்ளிக்காலத்தில் இருந்து ஒன்றாக இருக்கிறோம். அப்போது அவளை டேட் செய்வதற்காக அழைத்தேன். ஆனால் அவள் பயந்துகொண்டு வரவில்லை. பின்னர் அவளின் 16-வது வயதில் எங்களின் திருமணம் முடிந்தது. அதன் பிறகுதான் எங்களுக்கு முதல் டேட் இருந்தது. சூரியகாந்தி ``வாழும்போதே மனைவியை நேசியுங்கள்'' - மனைவிக்கு சிலை வைத்து பூஜை செய்யும் கணவர் நெகிழ்ச்சி அப்போதிலிருந்து இருவரும் ஒன்றாக இருக்கிறோம். ஆகஸ்ட் 10-ம் தேதி எங்களின் 50-வது திருமண நாளைக் கொண்டாடவுள்ளோம், அதற்கு என் மனைவியை சர்ப்ரைஸ் செய்யத்தான் இந்த சூரியகாந்தி ஏற்பாடு” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ``என் 50-வது திருமண நாளுக்கு இதைவிட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தப் பரிசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறேன்” என்று ரெனி தெரிவித்துள்ளார். 80 ஏக்கர் வயலில் சுமார் 1.2 மில்லியன் சூரியகாந்தி பூக்கள் இருப்பதாக லீ குறிப்பிட்டுள்ளார். நெடுஞ்சாலை 54-ல் உள்ள பெரிய வயலில் இந்தப் பருவ காலத்தில் கண்கவர் சூரியகாந்தி மலர்களை கண்ட மக்கள் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இது சூரியகாந்தி பூக்கும் சீசன் இல்லாததால் அவர்களுக்கு இந்தக் காட்சி விருந்தாகியுள்ளது.
http://dlvr.it/SszxYB

Saturday, 29 July 2023

சீனா போலீஸை போட்டோ எடுத்த தைவான் நபர்: 1,400 நாள்களுக்குப் பிறகு விடுவிப்பு - என்ன நடந்தது?

தைவானைச் சேர்ந்தவர் தொழிலதிபர் லீ மெங்-சு. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த லீ மெங்-சு, ஆண்டுக்கு இரண்டு முறையேனும் சீனாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், 2019-ம் ஆண்டும் வழக்கம் போல சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சீனாவின் ஹாங்காங்கில் போராட்டம் நடந்திருக்கிறது. அதனால், சில நாள்கள் அவர் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஹோட்டல் அறையிலிருந்து காவல்துறையைச் சேர்ந்த சிலரை புகைப்படம் எடுத்திருக்கிறார்.சீனா அதன் பிறகு அவர் தனது சக ஊழியரைச் சந்திக்க ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார். அவர் தனது பணிக்காக தைவானுக்குக் கொண்டு செல்லவிருந்த 10 வீடியோ கேமராக்களை சீன விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அதில், சீனா காவல்துறை அதிகாரிகளின் புகைப்படம் இருந்ததால், அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டு அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தைவானைச் சேர்ந்த உளவாளி எனச் சந்தேகமடைந்த காவல்துறை, அரசு ரகசியங்களைத் திருடியதற்காக அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து, அவர் ஹாங்காங்கில் தங்கியிருந்த அறையில் சுமார் 72 நாள்கள் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஒரு முகாமுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர், ``தாய்நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதற்கு வருந்துகிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார். அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் மன்னிப்பு கேட்டதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். மொத்தமாக 1,400 நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்தைவான் Vs சீனா இறுதியாக அவர் கடந்த திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜப்பானில் இருக்கிறார். விரைவில் தைவானுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கு முன்பு இந்த சிக்கலிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.வாக்னர் குழு விவகாரம்: ``ரஷ்யாவுடன் உறுதுணையாக நிற்போம்'' - சீனா சொல்வதென்ன?
http://dlvr.it/Ssw9rY

Friday, 28 July 2023

வெளிநாடுகளில் சிறையில் இருக்கும் இந்தியர்கள்... எந்தெந்த நாடுகளில் எத்தனைப் பேர் தெரியுமா?!

நாடாளுமன்றம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்று வருகிறார்கள். அவர்களில் சிலர் குற்றச்செயல்களில் சிக்கி வெளிநாடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறை வெளிநாடுகளின் சிறைகளில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றக் கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் 90 நாடுகளில், 8,330 இந்தியர்கள் சிறையில் இருப்பதாக எழுத்துப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்திருக்கிறார்.சிறை சவுதி அரேபியாவில் 1,461 பேரும், கத்தாரில் 696 பேரும் சிறையில் இருக்கிறார்கள்.சிறை நேபாளத்தில் 1,222 பேரும், குவைத்தில் 446 பேரும் சிறையில் இருக்கிறார்கள்.காவல்துரை மலேசியாவில் 341 இந்தியர்களும், பாகிஸ்தானில் 308 இந்தியர்களும் சிறையில் இருக்கிறார்கள்.சிறை அமெரிக்காவில் 277 என்ற எண்ணிக்கையிலும், சீனாவில் 178 என்ற எண்ணிக்கையிலும் இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள்.சிறை பஹ்ரைனில் 277 பேரும், இங்கிலாந்தில் 249 பேரும் சிறையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சிறை இத்தாலியில் இந்தியர்கள் 157 பேரும், ஓமானில் 139 பேரும் சிறைகளில் வாடுகின்றனர்.காவல்துறை பல நாடுகளில் இருக்கும் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர் சம்மதம் தெரிவிக்கும் வரை, உள்ளூர் அதிகாரிகள் கைதிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.
http://dlvr.it/SsvJr2

`அதிகரிக்கும் வேலையின்மை’ - முழு நேர `பிள்ளை’களாக மாறும் சீன இளைஞர்கள்!

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டுவிட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். சீனாவில் இப்படி நிறைய இளைஞர்கள் முழு நேரப் பிள்ளைகளாக வேலை செய்து வருகிறார்களாம். சீனாசீனாவில் பெய்த `புழு மழை...' வைரல் வீடியோ உண்மையா? சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த 29 வயதான ஜூலி என்ற பெண் கேம் டெவலப்பராக வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழலில் இருந்துள்ளார். இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளான ஜூலி, தற்போது தன் வேலையை விட்டுவிட்டு 2,000 யென்களுக்கு தன் பெற்றோர்களுக்கு முழு நேர மகளாக இருந்து வருகிறார். அவர் தினமும் வீட்டில் பாத்திரங்களைக் கழுவது, பெற்றோருக்கு உணவு தயாரிப்பது மற்றும் பிற வீட்டு வேலைகளைச் செய்வதில் தன் நாளைக் கழிக்கிறார். ஜூலியின் பெரும்பாலான அன்றாட செலவுகளுக்கு அவரின் பெற்றோர் பணம் தருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு முன் அவர் செய்த 16 மணி நேர வேலையில் இருந்து விடுபட்டு மூச்சு விடுவதற்கு தற்போது நேரம் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் ஜூலி. ``நான் இதற்கு முன்னர் நடைபிணம் போல வாழ்ந்து வந்தேன், வேலை, வேலை வேலை இது மட்டுமே என் உலகமாக இருந்தது ஆனால், தற்போது என் பெற்றோர்களுக்கு மகளாக தினமும் மாறுபட்ட வேலைகளைச் செய்கிறேன். ஓய்வெடுக்கிறேன், பெற்றோருடன் சுற்றுலா செல்வது, வீட்டு வேலைகளைச் செய்வது என மிகவும் நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறேன். சீனாசீனாவில் வாடகை அப்பாக்கள் அறிமுகம்: Bath House-க்கு ஆண் குழந்தையோடு வரும் அம்மாக்களுக்கு உதவ திட்டம் என் ரோபோ வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுப்பதற்காக தற்போது இதைச் செய்து வருகிறேன். மற்றொரு புறம் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக அமையவில்லை. என் வேலையை விடும் முன் புதிய வேலை தேடிய பின்னரே அதை விட வேண்டும் என நினைத்தேன். ஆனால், புதிய வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது, தற்போது வேலையை விட்ட பிறகு அது இன்னும் கடினமாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான் 40-க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன். ஆனால், இதுவரை எனக்கு இரண்டு நேர்காணல் அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன. இங்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது” என வேதனையுடன் பேசியுள்ளார். சீனாவில் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லாமல் உள்ளது. அங்கு இளைஞர்களின் வேலையில்லா விகிதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி சீனாவில் வேலையில்லாதவர்களின் விகிதம் 21% ஆக அதிகரித்துள்ளது. மிதமான உள்நாட்டு நுகர்வு, தனியார் தொழில்துறையின் பின்வாங்கல் மற்றும் போராடும் வணிக சந்தை, கொரோனாவால் அடிபட்ட பொருளாதாரம் என அனைத்தும் சேர்ந்து சீனாவில் மிக அதிகமான வேலையில்லா திண்டாட்ட நிலையை உருவாக்கியுள்ளது.
http://dlvr.it/Sss54W

மீண்டும் ஒரு நாடு கடந்த காதல் பயணம்... ஆன்லைன் காதலனைக் காண பாகிஸ்தானுக்குப் பறந்த சீனப் பெண்!

ஒரு காலத்தில் காதலர்கள் தங்களை நேரில் சந்தித்துக்கொள்வதே பெரும்பாடாக இருந்து, கடிதம் மூலம் வளர்ந்த காதலெல்லாம் மலையேறி, தற்போது இந்த நவீன காலத்தில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பேசி, பழகி காதல் வளர்க்கின்றனர். இவ்வாறு காதலும் காலத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆவதென்பது, அவரவர் கோணங்களைப் பொறுத்து சரி, தவறு என்று மாறுபடுகிறது. காதல் இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலனைக் காண பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, சீனாவைச் சேர்ந்த காவோ ஃபெங்கும் (Gao Feng - 21 வயது), பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத்தும் (Javed - 18 வயது) முதலில் ஸ்னாப்சாட் (Snapchat) மூலம் நண்பர்களாக அறிமுகமாகியிருக்கின்றனர். மூன்று வருடமாக நீடித்த இந்த நட்பு ஒருகட்டத்தில் இருவருக்குமிடையே காதலாக உருவெடுத்தது. இவ்வாறிருக்க ஜாவேத்தைக் காண முடிவுசெய்த காவோ ஃபெங், மூன்று மாதகால விசிட் விசாவுடன் சீனாவிலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) கில்கிட் வழியாக, சாலை மார்க்கமாக புதன்கிழமை இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள பஜௌர் பழங்குடியினர் மாவட்டத்தில் வசிக்கும் ஜாவேத், அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டார்.காதல் பின்னர் ஜாவேத், பஜௌர் (Bajaur) மாவட்டத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, அந்தப் பெண்ணை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாமல் லோயர் டிர் (Lower Dir) மாவட்டத்தின் சமர்பாக் பகுதியிலுள்ள தன்னுடைய தாய்மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை அதிகாரி ஜியாவுதீன், காவோ ஃபெங்குக்கு சமர்பாக் பகுதியில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், காவோ ஃபெங்கின் பயண ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.``ஒருமுறை மீண்டும் என் இதயத்தோடு உன்னை  அணைத்துக்கொள்கிறேன்..." -  மார்க்ஸ்... ஜென்னி... காதல்..!  
http://dlvr.it/Sss52t

Thursday, 27 July 2023

ஓவியர் மாருதி காலமானார்

ஓவியர் மாருதி காலமானார். புதுக்கோட்டையில் பிறந்த இவருடைய இயற்பெயர் வி. ரங்கநாதன், வயது 86. புணே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கரோனா காலத்தில் மறைந்தார்.  1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம்   வார இதழ்களில்  தொடர்ந்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார். 'ஃபோட்டோபினிஷிங்'கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/cdLDOyN https://ift.tt/P873RDN
via IFTTT

Wednesday, 26 July 2023

காதலனுக்கு சூனியம் வைக்க அலுவலகத்தில் கைவரிசை: பிடிபட்ட பிறகும் கவலைப்படாத சீனப் பெண்!

காதல் எல்லைகளைக் கடந்தது, காதலின் பெயரில் செய்யும் அனைத்தும் நியாயமானவை என பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். உலகம் முழுக்க காதல் மீது அபரிமிதமான பேரார்வம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் இணையருக்காக எதையும் செய்யக்கூடிவர்கள். மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க மைல்கள் கடந்து பயணம் செய்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அதே சமயம் காதல் விஷமாகி எல்லை மீறும் நிகழ்வுகளும் சில இடங்களில் நடந்துள்ளன. காதல் அப்படி சீனாவை சேர்ந்த ஒரு பெண், தன் காதலரை தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள தான் வேலை செய்யும் அலுவலகத்தில் திருடி வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். வடகிழக்கு சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் வசிப்பவர் வாங். 24 வயது பெண்ணான இவர் ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் இவர் தன் காதலரை எப்போதும் தன்னுடனேயே இருக்க வைக்க விரும்பியுள்ளார். அதற்கான தேடுதலில், ஆன்லைனில் இவர் கண்ணில் சிக்கின ஜோசியம் மற்றும் ஜாதக விளம்பரங்கள். அவற்றால் தூண்டப்பட்ட வாங், சூனியம் செய்து தன் காதலரை தன் வசம் இருக்க வைக்க நினைத்துள்ளார். இதற்கான முயற்சிகளின் போது ஓர் ஆன்மீக குரு, வாங்கிடம் இருந்து 4 மில்லியன் யுவான்களை பெற்றுக்கொண்டு அவரை வேறு ஒரு பெரிய குருவிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து முறையில் செய்யப்படும் சூனியத்தால் வாங் உறவில் இருக்கும் பிரச்னைகள் முடிந்துவிடும், அதனால் அவரின் காதலர் கூடவே இருப்பார் என நம்பவைத்துள்ளார். இந்த சூனிய சடங்குகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 150 முறை என மொத்தமாக 4.8 மில்லியன் யுவான்களை அந்த ஆன்மீக குருவுக்கு அனுப்பியுள்ளார் வாங். இதற்காக தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து பணத்தைத் திருடியுள்ளார் வாங்.பில்லி, சூனியம்ஆன்லைன் காதலனுக்காக நாடுகள் கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பதின்பருவ பெண்; பெற்றோரிடம் ஒப்படைப்பு! மேலும் திருடிய பணத்தில் ஏராளமான ஹேண்ட் பேக்குகள், புது உடைகள் என வாங்கித் தள்ளியுள்ளார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல ஒருநாள், வாங் தன் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அவர் சற்றும் வருந்தவேயில்லை. காரணம் சூனிய சடங்குகள் அவரது உறவை பலப்படுத்தியதாக அவர் நம்புகிறார். வாங்கின் காதலர் தற்போதும் அவருடனேயே இருக்கிறார்.
http://dlvr.it/Ssm76T

அமெரிக்கா எடுக்கும் முடிவு... தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா..?

தங்கம் விலை கடந்த சில தினங்களில் குறைந்துள்ள நிலையில், இன்று அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையில் தங்கம் விலையின் நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் மே மாத இறுதிக்குள் தங்கம் விலை சற்று குறைந்தது. ஜூன் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. அடுத்து ஜூலை மாதத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. எனினும், கடந்த சில தினங்களில் மட்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.பெடரல் ரிசர்வ்டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்த சூப்பரான வாய்ப்பு... ஐடி நிறுவன பங்குகள் இனி எப்படியிருக்கும்? தற்போதைய நிலையில், தங்கம் விலை ஏறுமா, இறங்குமா என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு உலகம் அறிந்த விஷயம். இந்தியர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கும் மக்கள். தங்கத்தை ஒரு முதலீடாகவும், சொத்தாகவும், அவசர பணத் தேவைக்கு உதவும் பொருளாகவும், அந்தஸ்துக்கான சின்னமாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர். இன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. தங்கம் வாங்குவோர் அனைவரும் இந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த முறையும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டிலேயே குறைந்தபட்சமாக இரண்டு முறையாவது வட்டி விகிதம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே ஃபெடரல் ரிசர்வ் சிக்னல் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இன்னும் பணவீக்கம் ஃபெடரல் ரிசர்வின் இலக்கு வரம்புக்கு மேல் நீடித்து வருகிறது. எனவே, பணவீக்கத்தை குறைப்பதிலேயே ஃபெடரல் ரிசர்வ் கவனம் செலுத்தி வருகிறது. ஆக, இந்த முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும்.பங்கு சந்தைஷேர்லக் அப்டேட்ஸ்: ராக்கெட் வேகத்தில் அதானி பங்குகள்... 52 வார உச்சத்தில் லார்ஜ்கேப் ஸ்டாக்ஸ்! பொதுவாக, ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது தங்கம் விலை குறையும். ஆனால், தங்கம் விலை என்பது வட்டி விகிதத்தை மட்டும் பொறுத்து மாறுவதில்லை. பணவீக்கம், பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களும் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பங்குச் சந்தைகள் இறங்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தங்கத்தை தேடி ஓடுகின்றனர். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குவிகின்றன. எனவே, பங்குச் சந்தைகள் இறக்கத்தால் தங்கம் விலை உயருகிறது. ஆக, இன்று வட்டி விகிதம் குறித்து ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு, அதற்கு பங்கு சந்தை கொடுக்கும் ரியாக்‌ஷன் போன்றவற்றின் அடிப்படையில் தங்கம் விலையின் அடுத்த நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://dlvr.it/SslgFs

Tuesday, 25 July 2023

திடீரென மாயமான வெளியுறவுத்துறை அமைச்சர்; சத்தமில்லாமல் பதவி நீக்கம் செய்த சீன அரசு - என்ன நடக்கிறது?

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடந்துவருகிறது. ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் குயின் கேங் என்பவர் (Qin Gang) வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் கருதப்படுபவர். இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் ஜூன் 25-ம் தேதி அன்று ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.சீன அமைச்சர் குயின் கேங் அதற்குப் பிறகு, கடந்த ஒரு மாதமாக குயின் கேங் எந்த அரசு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. மக்களின் பார்வையிலும் படவில்லை. காணாமல்போனவர் குறித்த எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் இருக்கும் நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்து, சீனாவின் நாடாளுமன்ற உறுப்பினரான வாங் யி-யை புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக சீன அரசு நியமித்திருக்கிறது. இந்தத் தகவலை சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்திருக்கிறது. சீனாவில் அமைச்சரவையில் இருப்பவர்கள் திருமணம் மீறிய உறவில் இருக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. காணாமல்போன அமைச்சர் குயின் கேங்குக்குத் திருமணம் மீறிய உறவு இருப்பதாகவும், அதனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், குயின் கேங் காணாமல்போனதற்கு என்ன காரணம் என சீன அரசோ, அல்லது அவராகவோ மக்கள் மன்றத்தின் முன்பு தெரிவிக்கும் வரை... அனைத்தும் ஊகமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.வாக்னர் குழு விவகாரம்: ``ரஷ்யாவுடன் உறுதுணையாக நிற்போம்'' - சீனா சொல்வதென்ன?
http://dlvr.it/Ssjrdq

மணிப்பூர் சம்பவத்தை வெளிநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?!

‘உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது’ என்று பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். `மணிப்பூர் பிரச்னையால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் தாழ்ந்திருக்கும் நேரத்தில், யதார்த்த நிலைக்குப் புறம்பாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெண்களை நிர்வாணப்படுத்தி, நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரங்கள் நடைபெறும் தேசத்தை சர்வதேச சமூகம் எப்படிப் பார்க்கும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக் கொடுமை மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் வன்முறை பற்றிய விவாதம் இன்றுவரை நடைபெறவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. அவையின் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மணிப்பூர் பிரச்னையைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. மணிப்பூர் உட்பட பிற மாநிலங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்கலாம் என்று ஆளும் பா.ஜ.க கூறுகிறது. அதனால், மணிப்பூர் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றிருக்கிறது. ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்புத் தூதர் ஃபியோனா புரூஸ் எம்.பி., மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது, ‘மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேறியிருக்கிறார்கள். பள்ளிகளும் சர்ச்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன. இதில், மதம் ஒரு முக்கியக் காரணம்’ என்று அவர் பேசியிருக்கிறார். அந்த விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறை மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து எம்.பி-க்கள் கவலை தெரிவித்தனர். பியரே லரடோரு என்ற எம்.பி பேசியபோது, பிரதமர் மோடியையும், 2014-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளையும் விமர்சித்தார். அவர், ‘அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்கக் கூடாது. ஜனநாயகச் செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அது ஒரு பெரிய ஜனநாயக நாடு. ஆனால், அது சிறந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும்’ என்றார். ‘மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய கடமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு’ என்று ஸ்வென் சிமோன் என்ற எம்.பி பேசினார். ‘இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சுருங்கிவருகிறது’ என்று அல்வினா அலமெட்சா என்ற எம்.பி விமர்சித்தார். அவர், ‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பாகுபாடும் வெறுப்பும் அதிகரித்திருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இவற்றையெல்லாம் நேரிலேயே கண்டேன்’ என்றார்.மணிப்பூர் மணிப்பூரில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன்முறை நடக்கும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களும், சர்வதேசப் பார்வையாளர்களும் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்... இணைய சேவைக்கான தடை நீக்கப்பட வேண்டும்... சட்டவிரோத ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்’ என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க தயங்குகிறதா பாஜக?! ‘பிரிட்டனின் இந்தச் செயலை ஏற்க முடியாது’ என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான அரிந்தம் பக்சி கூறியிருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் குறித்தும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் கருத்து தெரிவித்த அரிந்தம் பாக்சி, ‘மணிப்பூர் நிலைமையைச் சரிசெய்யவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிரிட்டன் தனது உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும்’ என்றும் கூறியிருக்கிறார். பிரிட்டன் மட்டுமல்ல, மணிப்பூர் சம்பவத்துக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், ‘கொடூரமானது’, ‘பயங்கரமானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டிருக்கிறது.ஜோ பைடன் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பாகச் செயல்பட்டுவரும் அமைப்புகள் மணிப்பூர் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பி.பி.சி., அல்ஜசீரா, தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் மணிப்பூர் வன்முறை குறித்துச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ‘இனக்கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது மணிப்பூர் வீடியோவின் மூலம் தெரியவருகிறது’ என்று பி.பி.சி குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் கொடூர வீடியோ வெளியான பிறகே, மணிப்பூர் வன்முறை குறித்து முதன்முறையாக பிரதமர் மோடி வாய் திறந்ததைக் குறிப்பிட்டு, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன!
http://dlvr.it/Sshx3l

Monday, 24 July 2023

மணிப்பூர் கலவரம்: `பெண்களுக்கு நடந்த கொடூரம், மிருகத்தனமானது!' - அமெரிக்கா கண்டனம்

இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடரும் மணிப்பூர் கலவரம், இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில், மே 4-ம் தேதி இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ 76 நாள்களுக்குப் பிறகு வெளியாகி இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.மோடி - பாஜக இதற்கு முன்னர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "மணிப்பூர் வன்முறை நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்கா எந்த வகையிலும் உதவ தயாராக இருக்கிறது. அமெரிக்காவிற்கு மனிதம்மீது மிகுந்த அக்கறை உண்டு" எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வீடியோ விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டப் பிறகே பிரதமர் மோடி 30 வினாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசினார். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், மணிப்பூர் பெண்களின் நிர்வாண வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்கா கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர், ``மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்தது மிருகத்தனமானது, பயங்கரமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.`மணிப்பூர் கலவரத்துக்கு பாஜக அரசும் உடந்தை!' - மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ `பகீர்' குற்றச்சாட்டு
http://dlvr.it/Ssg62P

பிரதமர் தொடக்கிவைத்த ஒரு வாரத்தில் மழையால் சேதமுற்ற அந்தமான் விமான நிலையம்!

பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து ஒரு வாரத்துக்குள் அந்தமானில்  தலைநகர் போர்ட் பிளேரிலுள்ள வீர சாவர்க்கர் விமான நிலையத்தின்  மேற்கூரைப் பகுதிகள் மழை காரணமாக சரிந்துவிழுந்தன. போர்ட் பிளேரில் விரிவாக்கிக் கட்டப்பட்ட இந்த விமான  நிலையத்தைக்  காணொலி வாயிலாக சில நாள்களுக்கு முன்னர்தான், ஜூலை 18 அன்று,  பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இன்னமும் இது பயன்பாட்டுக்குக்கூட வரவில்லை. இந்த நிலையில் பலத்த காற்று - மழை காரணமாக மேற்கூரைகளின் பகுதிகள் சரிந்துவிழுந்தன. சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்காக டிக்கெட் கவுன்ட்டர்,  முனையத்தின் வெளிப்பகுதிகளில் மேற்கூரைப் பகுதிகள் தளர்த்தப்பட்டிருந்ததாக அலுவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன? சரிந்து கிடக்கும் வீர சாவர்க்கர் விமான நிலையப் பகுதிகளின் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த பாதிப்பு விமான நிலையத்துக்கு வெளியேதான் என்றும் வேண்டுமென்றேதான் இந்தப் பகுதி தளர்த்திவைக்கப்பட்டிருந்தது என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா குறிப்பிட்டுள்ளார். இப்போதெல்லாம்  பிரதமர் நரேந்திர மோடி, வேலை முடிந்ததோ,  இல்லையோ, தரம் குறைந்த கட்டுமானங்களோ என்னவோ, எதை வேண்டுமானாலும் - நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், ரயில்கள் என - தொடக்கிவைப்பார்  என்று சிந்தியாவுக்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/ul2NSTU https://ift.tt/k8DQPsp
via IFTTT

மணிப்பூர்: காவலில் இருந்த இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!

  மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மே மாதம் முதல் வாரத்தில் போலீஸ் காவலில் இருந்த குக்கி இளைஞரை வன்முறைக் கும்பல்  அடித்தே கொன்ற சம்பவம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. மணிப்பூரில் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தைச்  சேர்ந்த குக்கிகளுக்கும் சமவெளியில் வசிக்கும் மைதேயி இனத்தினருக்கும் இரு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன. இந்த மோதல்களில் பெருமளவில் குக்கி பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு குக்கி இனப் பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாகக் கொண்டுசென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் இரு மாதங்களுக்குப் பிறகு அண்மையில் வெளியான ஒரு விடியோ மூலம்  அம்பலமாகி உலகையே உலுக்கியது.  இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன? வன்முறை தொடங்கியபோது, குக்கி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதும் இப்போது தெரிய வந்திருக்கிறது. மைதேயி இனத்தைச் சேர்ந்தவரான மணிப்பூர் மாநில முதல்வர்  பிரேன் சிங் பற்றிய பதிவொன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததற்காக குக்கி இனத்தைச் சேர்ந்த ஹங்லால்முவான் வைபேயைக் காவல்துறையினர் கைது செய்தனர். மே 4 ஆம் தேதி இவரை நீதிமன்றத்தில் நிறுத்திய பிறகு சஜிவா சிறைக்குக்  காவல்துறையினர் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். அப்போது பொரம்பட் என்ற இடத்தில் இவர்களை ஒரு வன்முறைக்  கும்பல் வழிமறித்து நிறுத்தியது. காவல்துறையினரிடமிருந்த ஆயுதங்களைப் பறித்துக்கொண்ட கும்பல், அந்த இளைஞரை அடித்தே கொன்றுவிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல்வேறு திசைகளில் சிதறியோடிவிட்டனர். இதுபற்றி பொரம்பட் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இரு நாள்களுக்குப் பிறகு காவலில் மரணம் என்பதாகத் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை நிர்வாணமாகக் கொண்டுசெல்லும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து, குக்கி பழங்குடியினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.  இதையும் படிக்க | மணிப்பூர்: அந்த அக்கிரம நாளில் நடந்தது என்ன? நேரடி சாட்சியம்!

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/ul2NSTU https://ift.tt/bnOKroR
via IFTTT

Saturday, 22 July 2023

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை! - அமெரிக்க கடைகளில் அலைமோதும் மக்கள்

இந்தியாவில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம் (ஜூலை 20) மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், இந்திய சந்தைகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் போதுமான அளவு கிடைப்பதை உறுதிசெய்யவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்ததது.அரிசி இன்னொருபக்கம், இந்தியாவில் கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும், அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இத்தகைய அறிவிப்பு தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய பற்றாக்குறை நிலவுகையில், உலகளவில் அரசி ஏற்றுமதியில் பெரும் பங்காற்றும் இந்தியா, திடீரென பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடைவிதித்திருப்பது, வெளிநாடுகளில் அரிசியின் விலையுயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. #India bans rice exports, sparking chaos Panic inside for rice in America. Look at the chaos amongst NRI’s for buying rice stock in USA #RiceBan pic.twitter.com/AG21Yqw70d— Amitabh Chaudhary (@MithilaWaala) July 22, 2023 அதன் உடனடி எதிர்வினையாகத்தான், அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் அரிசியை மூட்டை மூட்டைகளாக வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது தொடர்பாக, அமெரிக்கப் பல்பொருள் அங்காடியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே என்ற முறையையும் பல பல்பொருள் அங்காடிகள் கொண்டுவந்திருக்கின்றன. மேலும், இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு முன் அமெரிக்காவில் 22 டாலராக இருந்த ஒரு மூட்டை அரிசி, தற்போது 32 டாலர் முதல் 47 டாலர் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
http://dlvr.it/SsZ65k

Thursday, 20 July 2023

`உலகின் மிகப்பெரிய கட்டிடம்' 35 ஏக்கரில் குஜராத்தில் அமையும் வைர வர்த்தக மையம்... என்ன ஸ்பெஷல்..?

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ராணுவ அலுவலகமான பென்டகன் (Pentagon) உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ள சூரத் வைர வர்த்தக மையம் `உலகிலேயே மிகப்பெரிய அலுவலகம்’ என்ற பெருமையைத் தட்டிச் செல்ல உள்ளது. சூரத் வைரங்களுக்குப் பெயர் போன ஊர். `இந்தியாவின் வைர நகரம்' என அழைக்கப்படும் சூரத் தனித்துவமான வைர டிசைன்களை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.வைரம் (மாதிரி படம்)ஜியோ ஃபைனான்ஸியல் சர்வீசஸ்! எதிர்பார்ப்புகளை தாண்டி பங்குவிலை நிர்ணயம்... எவ்வளவு தெரியுமா? சர்வதேச சந்தைகளில் சூரத்தில் இருந்து வரும் நகைகளுக்கு என்றுமே தனிமதிப்பு இருக்கும். உலகின் 90 சதவிகித வைரங்கள் சூரத்தில் இருந்துதான் வெட்டப்பட்டு, மெருகூட்டப்படுகிறது.  சூரத் வைர வர்த்தக மையம் மற்றும் அதன் பிரமிப்பூட்டும் கட்டிட அமைப்புகள் குறித்து அறிந்து கொள்வோம்... *குஜராத்தின் சூரத்தில் 35 ஏக்கரில் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு அமைப்புகளிலும் 15 மாடிகள் இருக்கிறது. *4,700 அலுவலகங்கள் வரை இந்த கட்டிடத்தில் செயல்பட முடியும். இந்த அலுவலகங்கள் மார்பல் தரையோடு, அழகான பிரகாசமான லைட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. *வைரத்தை வெட்டும், பட்டை தீட்டும், விற்பனை செய்யும் பணிகளுக்காக 65,000 ஊழியர்கள் வரை இங்கு பணிபுரிய முடியும். *15 மாடிகளுக்கு சென்று வர 131 எலிவேடர்கள் (Elevators), உணவருந்தும் பகுதிகள், கலந்தாய்வு கூடங்கள் உள்ளன. *தொழிலாளர்களுக்கான சுகாதார வசதிகளாக ஓய்வெடுக்க, சாதாரணமாக அமர்ந்து பேச என 1.5 ஏக்கர் பரப்பளவில் 9 முற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் அமர்வதற்கான இருக்கைகளும், தண்ணீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  *இந்தியக் கட்டடக்கலை நிறுவனமான மார்போஜெனிஸ் (Morphogenesis), சூரத் வைர வர்த்தக கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க நான்கு வருடங்களானது எனவும், கோவிட் தொற்றின் பாதிப்பு காரணமாக 2 வருடங்கள் கட்டட பணிகளில் தாமதம் ஏற்பட்டது எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரத் வைர வர்த்தக மையம்ரூ.40 லட்சம் வரை விற்கப்படும் சூரத் வைர பற்கள்... என்ன ஸ்பெஷல் தெரியுமா? *கட்டடத்தைக் கட்டி முடிப்பதற்கான மொத்த செலவு 3,200 கோடி.  *கடந்த 80 வருடங்களாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலகமாகத் திகழ்ந்து வரும் பென்டகனின் தரை பரப்பளவு 6.5 மில்லியன் சதுர அடி ஆகும். இப்போது சூரத் வைர வர்த்தக மைய  கட்டிடத்தின் தரை பரப்பளவு 7.1 மில்லியன் சதுர அடியாக உள்ளது. *வரும் நவம்பர் மாதம் இந்த கட்டடத்தை இந்திய பிரதமர் நரேந்தி மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வைரங்களுக்கான ஒரே நிலையமாக (One stop Station) இந்தக் கட்டடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SsSbv8

Tuesday, 18 July 2023

அல்சைமர் நோயாளிகளுக்கு இலவச டாட்டூ... முதியவர்கள் தொலையாமல் இருக்க சீன பார்லரின் முயற்சி!

மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.  அல்சைமர் எனும் மறதிநோயால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாகவே தங்களது பெயர், உறவினர்கள் மற்றும் முகவரி என அனைத்தையும் மறந்துவிடுவதுண்டு. இதனால் அடிக்கடி அவர்கள் தொலைந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.அல்சைமர் இந்நிலையில், இப்படி முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது.  வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் `ஜாங்' இந்த இலவச டாட்டூ குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அல்சைமர் நோயாளிகள் தன்னிடம் வந்து டாட்டூ போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜாங் கூறுகையில், ``என்னுடைய திறனைப் பயன்படுத்தி இந்தச் சமூகத்திற்கு அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில், நோயாளியின் கையில் மகன், மகள் அல்லது பாதுகாவலரின் குடும்ப விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களை டாட்டூ போட்டேன். மக்கள் இதை வரவேற்றுள்ளனர்.அல்சைமர்டாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்! சில நோயாளிகள் டாட்டூ போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சுமையைக் குறைக்க நினைக்கிறார்கள். டாட்டூ போடுவது கொடூரமானதாகத் தோன்றலாம், ஆனால் இது நோயாளியின் குடும்ப உறுப்பினர்களை மக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள உதவும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்கு மக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
http://dlvr.it/SsLjdv

Monday, 17 July 2023

அமெரிக்கா பின் வாங்கப் போகிறதா... தங்கம் விலை இனி என்னவாகும்?

தங்கம் விலை இனியாவது குறையுமா? குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்குமா? அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பால் இது நடக்கலாமோ என்ற பலத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தங்கத்தை விரும்பாத பெண்கள் இல்லை, அதை வேண்டாம் என கூறும் ஆண்களும் இல்லை. இப்படிப்பட்ட தங்கத்தை இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளது. இதை பல்வேறு வழிகளில் வாங்கி விற்று லாபம் பார்க்க முடியும்.தங்கம் சாமானியர்கள் தங்கம் வாங்கும் நிலை வருமா? இனி விலை குறையுமா... குறையாதா..? குறிப்பாக கமாடிட்டி சந்தையில் வாங்கி விற்பனை செய்வதன் மூலமும், ஷார்ட் செய்து வாங்குவதன் மூலம் லாபம் பார்க்க முடியும். ஆக இது முதலீட்டாளர்களுக்கு மிக சரியான வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது. தங்கம் விலை அதிகரிக்கும் போதெல்லாம் குறைந்த விலையில் வாங்கி, அதிக விலையில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்பனை செய்து உடனுக்குடன் லாபம் பார்க்க முடிகிறது. எனினும் தங்கம் விலை எப்போது அதிகரிக்கும்? எப்போது குறையும் என்று கணிப்பது மிகப்பெரிய சவாலான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக தங்கம் விலையானது சர்வதேச பொருளாதாரம், அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், டாலரின் மதிப்பு, பங்கு சந்தைகளின் போக்கு, தேவை எப்படி இருக்கிறது? இந்தியாவை பொறுத்தவரையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கம் விலையில் பிரதிபலிக்கிறது. தங்கம் விலை சரிவு... இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வரவிருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் , வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் காரணமாக தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்று பின்வாங்கி உள்ளது எனலாம். இது சமீபத்திய உச்சமான அவுன்ஸூக்கு 1968 என்ற லெவலில் இருந்து, தற்போது அவுன்ஸூக்கு 1950 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது. தொடர்ந்து சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இரண்டு வாரங்களாக உச்சத்தை கண்ட சந்தையானது, நடப்பு வாரத்தில் சரியத் தொடங்கியுள்ளது. இது வரவிருக்கும் நாட்களிலும் தொடருமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அமெரிக்கா... பணவீக்கம், கடன் உச்சவரம்பு நெருக்கடிரூபாய் - திர்ஹாம் வர்த்தகம்... இனி ரிஸ்க் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு...! ஆர்வம் அதிகரிக்கலாம்  அமெரிக்காவின் பணவீக்கம் என்பது மீண்டும் சற்று பின் வாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகித அதிகரிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி குறைவாக இருக்கும் போது வட்டியில்லா முதலீட்டிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம். இது தங்கம் விலையை ஊக்குவிக்க காரணமாக அமையலாம். முதலீட்டாளர்கள் கவனம்.. மேலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகள் இன்னும் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியை காண்பதையே சுட்டிக் காட்டுகிறது. இது அதிகளவிலான விலை சரிவை தடுக்கிறது. எனினும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சிக்கான அறிகுறிகள் என்பது வலுவாக காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் கவனத்தை மற்ற முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது. எப்படியிருப்பினும் ஜூலை 26 அன்று அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெற உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்குமா அல்லது வட்டியை அப்படியே மாற்றம் செய்யாமல் வைத்திருக்குமா? என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது தங்கம் விலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.அமெரிக்கன் டாலர்ரூபாய் - திர்ஹாம் வர்த்தகம்... இனி ரிஸ்க் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு...! டாலர் மதிப்பு அதிகரிப்பு அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலர் மதிப்பானது சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இன்று தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு அதிகரிப்பால், டாலரில் தங்கத்தை வாங்குபவர்களுக்கு இது தங்கத்தை விலை உயர்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது. ஆக இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் இன்று தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.  வட்டி குறையலாம்?  நடப்பு ஆண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்க பட்டாலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியானது அடுத்த ஆண்டில் வட்டி அதிகரிப்பு என்பதை நிறுத்தி வைக்கலாம். குறைந்த வட்டி விகிதமானது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். சீனாவின் தேவை ஆதரவளிக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது முதல் காலாண்டில் 2.2% எனும் அளவுக்கு விரிவடைந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 0.8% எனும் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது மேற்கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை கொடுக்கலாம். தங்கத்தை வாங்கி குவிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.சீனாEMI-ல் ஏ.சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கினால் லாபமா, நஷ்டமா? விலை எப்படி இருக்கும்? தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில வாரங்களாக உச்சத்தை எட்டி  வந்த நிலையில், இது புராபிட் புக்கிங் செய்வதற்கு வழிவகுத்துள்ளது. இந்திய சந்தையை பொறுத்த வரையில் ஆகஸ்ட் மாத காண்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், இதுவும் புராபிட் புக்கிங் மற்றும் ரோல் ஓவர்களுக்கு வழிவகுக்கலாம். ஆக குறுகிய காலத்தில் விலை குறையலாம். ஆக தங்கம் விலை குறையும் போதெல்லாம் அதை வாங்கி வைக்கலாம். இது நீண்ட கால நோக்கில் லாபம் தரக் கூடிய ஒன்றாக இருக்கும். ஆக விலை குறைந்தால் அது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நல்ல சான்ஸ் என்று கூறலாம்.
http://dlvr.it/SsJqFW

Sunday, 16 July 2023

`ஐ லவ் யூ நான்ஸி...' - 60 வருடங்களுக்குப் பிறகு ஓகே சொன்ன காதலி! வைரல் வீடியோ

'காதலிப்பதற்கு வயது ஒரு தடையில்லை'....என்று சொல்வார்கள். உண்மைதான், எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். காலம் மாற மாற காதலும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்தவகையில் 70'ஸ், 80'ஸ் காலங்களிலெல்லாம் காதலித்துத் தோல்வியுற்றவர்களை விடக் காதலைச் சொல்லாமாலே வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டவர்கள் அநேகர். ஒருவேளை, அப்படி நீங்கள் நேசித்த உங்கள் முதல் காதலியிடம் காதலைச் சொல்லாமால் தவறவிட்டு, 60 வருடங்களுக்குப் பிறகு வயதானக் காலத்தில், அதே காதலியைப் பார்த்து அதே காதலுடன் அவரிடம் மண்டியிட்டு உங்கள் காதலை மனம் திறந்து சொன்னால் அந்தத் தருணம் எப்படி இருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த நரைக் கூடிய 78 வயதான இளைஞர், அப்படியான ஒரு சம்பவத்தைச் செய்து நெட்டிசன்களை நெகிழச் செய்துள்ளார்.தாமஸ் மெக்மீகின், நான்ஸி அமெரிக்காவைச் சேர்ந்தவர் 78 வயதான டாக்டர் தாமஸ் மெக்மீகின். இவர், தான் படித்த பள்ளியின் ரீ-யூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் தன் பள்ளி பருவ காதலியைச் சந்திக்க அமெரிக்காவின் தம்பா சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கிறார். தாமஸ் எதிர்பார்த்தபடியே விமான நிலையத்தில் வந்திறங்கினார் அவரது காதலி நான்ஸி. சுமார் 60 வருடங்களுக்குப் பின் அவரைப் பார்த்த தாமஸ், அன்புடன் கட்டியணைத்து மண்டியிட்டபடி கையிலிருந்த கடிதத்தை எடுத்து, "ஒரு துணையாக, காதலியாக, தோழியாக நான் விரும்பும் எல்லாமும் நீதான். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு உன்னை நான் நேசிக்கிறேன். என் வாழ் நாளை உன்னுடன் வாழ விரும்புகிறேன். உன்னை நான் மிகவும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வேன். அதற்கான ஒரு வாய்ப்பை எனக்கு கொடுப்பாயா?. என்றென்றும் உன்னைக் காதலிப்பேன். என்னைத் திருமணம் கொள்கிறாயா!!" என்று தன் காதலி முன் வாசித்துக் காட்டி பூங்கொத்துடன் ப்ரபோஸ் செய்துள்ளார். அதற்கு அவரது காதலியும் 'YESSS!!" என சம்மதம் தெரிவித்தது தாமஸ் மெக்மீகினுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்த இருவரும் மகிழ்ந்தனர். கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவமும் இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுபற்றிக் கூறும் தாமஸ் மெக்மீகின், "பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பும் , கடைசி வாய்ப்பும் இதுதான். இனி நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக எங்களின் கடைசி காலத்தை வாழ்வோம்" என்று கூறியுள்ளார்.
http://dlvr.it/SsFrRR

Friday, 14 July 2023

25 பள்ளி மாணவர்களுக்கு விஷம்வைத்த ஆசிரியை; மரண தண்டனை விதித்த நீதிமன்றம் - என்ன நடந்தது?

சீனாவின் ஹெனான் மாகணத்தில் வசித்தவர் வாங் யுன் Wang Yun (40). இவர் 2019 காலகட்டத்தில் மெங்மெங் முன் என்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். அப்போது மாணவர்களை நிர்வகிப்பது (Student Management) தொடர்பாக சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வாங் யுன் 2019 மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் நச்சுவான சோடியம் நைட்ரேட்டைக் கலந்திருக்கிறார்.விஷம் இதை அறியாத மாணவர்கள், அந்த உணவைச் சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, 25 மாணவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 24 மாணவர்கள் சில நாள்களிலேயே குணமடைந்தனர். அதேநேரம் வாங் யுன் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஒரு மாணவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பிறகு காவல்துறை, ``குற்றவாளியான வாங் யுன் பள்ளியில் மாணவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர், தன் கணவருக்கும் அதே போன்று விஷம் கொடுத்து, கொலைசெய்ய முயன்றிருக்கிறார்.மரண தண்டனை ஆனால், அவர் லேசான பாதிப்புகளுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த இரண்டு வழக்குகளிலும், பழிவாங்கும் நோக்கில் குற்றவாளி செயல்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால், குற்றவாளி வாங் யுன்-க்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது" எனத் தெரிவித்திருக்கிறது.வாக்னர் குழு விவகாரம்: ``ரஷ்யாவுடன் உறுதுணையாக நிற்போம்'' - சீனா சொல்வதென்ன?
http://dlvr.it/SsCSnx

தென்கொரியாவில் முதல் முறையாக இரட்டை குட்டிகளை ஈன்ற பான்டா கரடி…!

தென்கொரியாவின் தீம் பார்க் ஒன்றில் முதன் முறையாக ஒரு பான்டா கரடி இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது தாயும் இரண்டு குட்டிகளும் நலமுடன் இருப்பதாக, அந்த தீம் பார்க் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.பான்டா கரடிஆமைகள் கடற்கரையில் முட்டையிடுவது ஏன்? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்! | காடும் கற்பனைகளும் - 11 கொரியாவின் தலைநகரான சியோலுக்கு அருகிலுள்ள எவர்லேண்ட் எனப்படும் தீம் பார்க்கில் Ai bao எனப் பெயரிடப்பட்ட பான்டா ( இது ராட்சத பான்டா எனவும் அழைக்கப்படுகிறது) கரடி அண்மையில் இரண்டு‌ குட்டிகளை ஈன்றெடுத்தது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு குட்டிகள் தான், இந்த ஆண்டு உலகளவில்‌ பிறந்த முதல் பான்டா குட்டிகள். மேலும் தென்கொரியாவில் இந்த வகை ராட்சத பான்டா ஒரே நாளில் இரட்டை குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல் முறை.  இந்த செய்தியைக் கேட்டதில் இருந்து சீன மற்றும் தென் கொரிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த பான்டாவானது சீன மற்றும் தென்கொரிய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வந்தது. ஒன்பது வயது நிரம்பிய இந்த பான்டா முதல் குட்டியை அதிகாலை 4.52 மணிக்கும், இரண்டாவது குட்டியை காலை 6.39 மணிக்கும் ஈன்றது. இதில் முதல் குட்டி 180 கிராம் எடையும், இரண்டாவது குட்டி 140 கிராம் எடையும் கொண்டுள்ளது.பிறந்த குட்டி பான்டாவன உருவாக்கத்தில் யானைகள்; கடவுளாக வணங்கப்படும் காட்டு உயிரினங்கள்!| காடும் கற்பனைகளும் - 10 தற்போது தாய் பான்டா மற்றும் அதன் இரு குட்டிகளும் சீரான ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக, சீனாவின் பான்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.பான்டா கரடி மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ``இது ரொம்பவே மகிழ்ச்சியான செய்தி. இந்த வகை பாண்டாக்கள் சீனாவின் அடையாளம் மற்றும் பொக்கிஷம். அதுமட்டுமின்றி இவை சீனாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்த உதவும் தூதுவராகவும் செயல்படுகிறது. இதில் முதல் குட்டியை தென் கொரிய மக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இந்த குட்டிகளின் பிறப்பால் நாட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இவை வளர்ந்த பிறகு இதன் சகோதரி Fu bao போல், மக்களுக்கு இடையே நட்புணர்வையும் மற்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவையும் மேம்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்.பிறந்த குட்டி பான்டாபுலிகள் பாதுகாப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா? |காடும் கற்பனைகளும்! - 8 Ai bao எனப்படும் தாய் பான்டா மற்றும் அதன் இணையான Le bao இரண்டும் 15 ஆண்டு குத்தகையின் பேரில், மார்ச் 2016-ல் தென் கொரியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இவை 2020-ல் Fu bao என்று பெயரிடப்பட்ட தனது முதல் குட்டியைப் பெற்றெடுத்தன.பிறந்த குட்டி பான்டா தற்போது பிறந்திருக்கும் இவ்விரு இரட்டைக் குட்டிகளின் புதிய வரவு இரு நாட்டு இணையவாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் பான்டா பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களைச் சொன்னதுடன், சிலர் குட்டிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்யத் துவங்கினர். மேலும் இவை பிறந்த அன்று இவ்விரு குட்டிகள்தான் சீனாவின் ட்ரென்டிங் ஹேஷ்டாக்காக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Ss9jxy

``எனக்கு கணவர் தேவை... வரன் தேடித் தருபவருக்கு ரூ.4 லட்சம்'' - பெண்ணின் வித்தியாசமான அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஈவ் டில்லி-கோல்சன் (Eve Tilley-Coulson - 35). வழக்கறிஞரான இவர் தனது டிக் டாக் பக்கத்தில் மணமகன் தேவை என்பது குறித்து வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவரின் அந்தப் பதிவில், ``கடந்த ஐந்து ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். டேட்டிங் செய்து சோர்வடைந்துவிட்டேன். எனக்கு விருப்பமானவரை டேட்டிங் ஆப் மூலமோ அல்லது நேரிலோ சந்தித்தாலும் அது பெரிதாக பலனளிக்கவில்லை. மேலும், கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு டேட்டிங் கலாசாரத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.ஈவ் டில்லி-கோல்சன் டேட்டிங் ஆப்பில் இருப்பவர்களும் உண்மையான டேட்டிங்குக்காக வருவதில்லை. அதைத் தீவிரமாகவும் எடுத்துக்கொள்வதில்லை. அதனால், எனது தேவைகளைப் பூர்த்தி செய்து, எனது உண்மையான உறவுக்குத் தயாராக இருக்கும் ஒரு ஆணைத் தேடி திருமணம் செய்துகொள்வது என முடிவுசெய்திருக்கிறேன். அதற்காக எனக்கு மணமகனை அறிமுகப்படுத்தி, நான் அவரையே திருமணம் செய்துகொண்டால், எனக்கு என்னுடைய கணவரை அறிமுகப்படுத்தியவர்களுக்கு 5,000 டாலர் (ரூ.4 லட்சம்) அன்பளிப்பாக வழங்குவேன். நான் அவருடன் நீண்டகாலம் இருப்பேன் என்றெல்லாம் இல்லை. எங்கள் திருமணம் முடிந்து 20 வருடங்களில் நான் அவரை விவாகரத்து செய்துவிடக்கூடிய சூழல் உருவாகலாம். எனது வருங்காலக் கணவரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள், அவருக்கு 27 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அவரின் உயரம் 5 - 11 அடி இருக்கலாம். நான் உயரமாக இருப்பதால் எனது கணவரும் உயரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் டேட்டிங் செய்த சிலர், அவர்கள் குள்ளமாக இருந்ததால், நான் ஹீல்ஸ் அணியக் கூடாது எனக் கூறினார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை.ஈவ் டில்லி-கோல்சன் மேலும், அவர் நகைச்சுவை உணர்வும், அன்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அரசியல் பார்வைகள், மத நம்பிக்கைகள் மற்றும் இனம் ஆகியவை எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நான் திருமணம் செய்துகொள்ளும் ஆண் போதைப்பொருள் உட்கொள்வதை நான் விரும்பவில்லை. திருமணச் சான்றிதழில் கையொப்பமிட்டவுடன் உங்களுக்கான பணத்தைத் தந்துவிடுவேன்" எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார். அவரின் இந்த வீடியோ கலவையான விமர்சனங்களுடன் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.இரு இளைஞர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்ய விரும்பும் இளம்பெண்; அதிர்ந்த அதிகாரிகள்! - என்ன நடந்தது?
http://dlvr.it/Ss9Gt4

தி லிட்டில் பெஸ்டிவல்: சென்னையில் நடந்த கொரியன் பொம்மலாட்டம்

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான ‘தி லிட்டில் பெஸ்டிவல்’ என்ற கலை விழா ஜூலை 2-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடந்தது. இதனை தி லிட்டில் தியேட்டர் என்ற குழந்தைகளுக்கான நாடகக் குழு, INKO (Indo-Korean) சென்டருடன் இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தென் கொரியாவின் பிரபல மேடை நாடகக் கலைக்குழுவான ArtstageSAN என்ற அமைப்பும் சென்னை வந்திருந்தது. "தி கூக்ஸ்" ( The kooks) இந்த நிகழ்ச்சி மொத்தம் இரண்டு நிரல்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஜூன் 2 முதல் 4 வரை இந்தியா தலைமையில் "தி கூக்ஸ்" ( The kooks) என்ற அதிரடி நகைச்சுவை மேடை நாடகம்  நடைபெற்றது. அழியும் நிலையில் உள்ள உலகத்தைக் காக்கும் பொறுப்பு ஒரு மாயாஜால சமையல் குழுவின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த விசித்திரமான சமையல்காரர்கள், தங்கள் சமையல் அறையில் இருந்து உலகத்தைக் காக்க பல மாய உலகங்களுக்கும், வேறு பரிமாணங்களுக்கும் பயணம் செய்கிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், உலகைக் காக்கும் அந்த உணவை நம் கோமாளி சமையல் கலைஞர்கள் செய்து முடிக்கிறார்களா என்பதை பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாகப் படைத்திருக்கிறார்கள் தி லிட்டில் தியேட்டரின் ’தி கூக்ஸ் ஷோ.’ ஜூன் 5ம் தேதி கொரியாவின் ArtstageSAN குழுவினர் "ஹிஸ் டே" (His day) என்ற கொரியன் பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களுக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். இது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சி. தனக்கென நேரமே இல்லாமல் சலிப்பான ஓட்டத்தில் சிக்கியிருக்கும் ஒரு சோர்வடைந்த  மனிதனின் அன்றாட வாழ்க்கையை இந்த நிகழ்ச்சி சித்திரிக்கிறது. "ஹிஸ் டே" (His day) ஒவ்வொரு நாளும் வேலையிலிருந்து களைத்து வரும் அவர், இரவில் தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளோடு கனவுலகத்தில் இளைப்பாறுகிறார். அதே சமயம் இன்னொரு சந்தர்ப்பத்தில், தனது முதலாளியின் ஆவேசத்தால் அவர் சந்திக்கும் மன அழுத்தத்தை ஒரு சர்க்கஸ் காட்சியாக கொரியன் குழுவினர் அட்டகாசமாகச் சித்திரித்தனர். இந்தக் கதையை வீடியோக்கள், பொம்மைகள், மைம் ஆகியவற்றின் உதவியுடன் மிக அழகாகவும் அதே சமயம் காத்திரமாகவும் பதிவு செய்திருந்தனர். கொரியன் பொம்மலாட்டத்தைத் தொடர்ந்து, ’மன ஆரோக்கியத்தில் கலையின் தாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்ததாக ஜூன் 6-ம் தேதி, மீண்டும் கொரியன் பொம்மை நாடகம் மற்றும் சிறப்பு கொரியன் பயிற்சிப் பட்டறையுடன் இந்தக் கலை விழா நிறைவு பெற்றது. இந்த இந்திய-கொரிய கலை விழா குறித்து தி லிட்டில் தியேட்டர் நாடகக் குழுவின் தலைவர் டாக்டர் ரோஹிணி ராவ் கூறுகையில், "இந்த லிட்டில் பெஸ்டிவல் நிகழ்ச்சி தொடர்ந்து 12 வருடங்களாக வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டுவருகிறது. இதற்கு முன்னர், ஜெர்மனி, ஈரான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் இணைந்து கலை விழா ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் ஸ்பெயின் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் விசா பிரச்சனையால் அந்நாட்டுக் கலைஞர்களால் கலந்து கொள்ளமுடியவில்லை. அதனால், தென் கொரியாவுடன் இணைந்து, தி லிட்டில் தியேட்டரின் மேனேஜிங் தலைவரான ஆய்ஷா ராவ் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ArtstageSAN குறிப்பாக, இந்த நிகழ்ச்சியானது இளம் பார்வையாளர்கள் அதாவது பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு, மற்ற நாடுகளின் மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்நாடுகளுடனான ஒரு நல்லிணக்கத்தை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம். இதன் மூலம் மாணவர்களுக்கு பிற நாட்டு மக்கள்/ நாடுகள் மீதான வன்முறை எண்ணங்கள் எழுவதைத் தவிர்க்கலாம்.  மேலும், சென்னையில் குழந்தைகளுக்காக நடத்தப்படும் முதல் சர்வதேசக் கலை விழா இதுதான். இரண்டு நாள்களாக நடைபெற்ற 'தி கூக்ஸ்' (The kooks) நிகழ்ச்சியைக் காண எங்கள் அரங்கை அலங்கரித்து அமர்ந்திருந்த குழந்தைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. 'தி கூக்ஸ்' நகைச்சுவை நாடகத்தில், அந்நாடகத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், சூரரைப் போற்று திரைப்படத்தின் கலை இயக்குநர் மற்றும் நடிகருமான சைத்தன்யா ராவ் உட்பட ஆறு கலைஞர்கள் பங்கேற்று நடித்தார்கள். கொரியன் பொம்மலாட்டம் ஜூன் 5-ம் தேதி,  ’மன ஆரோக்கியத்தில் கலையின் தாக்கம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. அதில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நடனக் கலைஞர் அனிதா ரத்னம் மற்றும் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநர் டாக்டர் பவானி சங்கர் மற்றும் மனநல மருத்துவரான சுஜாதா வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்” என்றார் ரோஹிணி ராவ். - மணிமேகலை பெரியசாமி
http://dlvr.it/Ss9Gj6

திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, உள்ளிட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக சார்பில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம்! · “தேர்தல் வாக்குறுதிகளை” நிறைவேற்றுவதற்குப் பதில் விளம்பரத்தில் மோகம்; ·  வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் “15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில்” ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல்; ·  “மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிப் பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது; ·  “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில்” இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது; ·  “ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதில்” ஒட்டுமொத்த இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது; · “கூட்டுறவு கூட்டாட்சி” என்று கூறிவிட்டு - மாநில அரசுகளை முனிசிபாலிட்டிகளாக ஆக்கிவிட துடிப்பது; ·  ‘உழவர்களின் தோழன்’ என்று கூறிக்கொண்டே அவர்கள் வாழ்க்கையை - வாழ்வாதாரத்தை குழி தோண்டி புதைக்கும் உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது - எதிர்த்து போராடிய உழவர்களை அலட்சியம் செய்ததும், பின் அனைத்துத் தரப்பு எதிர்ப்பினை கண்டு பயந்து பின்வாங்கியது; · ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை நம் இந்திய நிதி அமைச்சரிடம்; ஆனால், பா.ஜ.க.வால் கார்பரேட்  முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகள் - வரிச் சலுகைகள் வழங்குவது; · எல்.ஐ.சி முதல் ஏர்இண்டியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது; ·  கேஸ் சிலிண்டர் தொடங்கி மூக்குபொடி வரை ஜி.எஸ்.டி. போடுவது;  · மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிற போது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது; ·  “அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை போற்றிப் பாதுகாப்பதற்குப் பதில்”, அதை தகர்த்தெறியும் பணியை அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டு வருவது; ·  “அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக் காப்பதற்கு பதில்” அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது; ·  “பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில்” “ஒரே” என்ற முழக்கத்துடன் அனைத்தையும் மாற்றி வருவது; · “நடுநிலையான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைக்குப் பதில்”, அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது; ·  “மாநிலத்தின் நிர்வாகச் சுதந்திரத்தை” நிலைநாட்டுவதற்குப் பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே திருத்தும் வகையில் டெல்லியில் அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது;  ·  “மண்ணைத் தொட்டு வணங்கிய நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பதற்கு பதில்” நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் யாரையும் மாற்றுக் கருத்து பேச விடாமல் - பிரதான எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் -நாடாளுமன்ற மாண்பை சிதைத்துள்ளது; ·  அதானி குழுமத்தின் ‘மெகா முறைகேடு’ பற்றிய இண்டென்பர்க் அறிக்கை குறித்த விவாதத்தை, நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மறுப்பது; · “ஆரோக்கியமான மற்றும் வலுவான ஜனநாயகம்” என்று கூறிவிட்டு - நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குவது; ·  “தொன்று தொட்டு நிலைநாட்டப்பட்டு வந்த சமூக நீதியை” அடியோடு ஒழிக்க பொருளாதாரத்தின் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது; ·  “அனைவருக்குமான அரசு” என்ற நிலைக்குப் பதில், சிறுபான்மையினரை நசுக்க - அவர்களின் உரிமைகளை பறிக்க பா.ஜ.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருப்பது;  - · அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் குடியரசுத் தலைவரையே இந்திய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்தது; · தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து தொழிலாளர்களை வஞ்சிப்பது, என ஜனநாயக இந்தியா - சமத்துவ இந்தியா- சமூக நீதி இந்தியா - பன்முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியா என்பது பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலால் - சனாதன அரசியலால் - இன்று எதேச்சாதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரைவில் பிரதமர் மோடி அவர்களும் - அவரது சகாக்களும் வரப் போகிறார்கள். ஆனால், முதல் ஐந்து ஆண்டுகளிலும் சரி - இந்த ஐந்து ஆண்டுகளிலும்  சரி தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு தந்தது என்ன? - ஜி.எஸ்.டி இழப்பீடு பறிப்பு; -  மின்கட்டணத்தை ஏற்றும் உதய் திட்டம்;  - ஒற்றைச் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனை;  - தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட ஒரு ஆளுநர்; - பொது விநியோகத்திற்குத் தேவையான கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, அரிசி குறைப்பு. மான்யங்கள் குறைப்பு; - திட்டங்களுக்கு ஓன்றிய அரசின் நிதி பங்கு குறைப்பு; - நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைப்பு; - மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதலும் தராமல் - நிதியும் அளிக்காமல் இழுத்தடிப்பது; - ரயில்வே திட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது; - தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்க கூடாது என கொண்டு வந்த நீட் தேர்வு; - தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் - ரயில்வே உள்பட, தமிழ்நாட்டு இளைஞர்களையே வேலைக்கு அமர்த்தக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது;  - அன்னைத் தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்து - சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மடியில் வைத்து சீராட்டிக் கொண்டிருப்பது - தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்கத் திட்டம் போட்டு பணியாற்றுவது;  - தமிழ்மீது காதல் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி - நம் இளைஞர்களை தமிழில் போட்டித் தேர்வுகளைகூட எழுத விடாமல்  தடுத்தது; - சமூகநீதி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூட நீதிபதிகளை நியமிக்காமல் வஞ்சித்தது என தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பாஜக. தந்தது, “நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை. மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடமுமில்லை” என்பதுதான் என்பதை இந்த கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது. இன்றைக்கு நாட்டில் வெறுப்புவாத அரசியல் பற்றி எரிகிறது. மணிப்பூர் கலவரத் தீ இன்னும் அடங்கவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இந்தியாவின் புகழை உலக நாடுகள் மத்தியில் கொண்டு சென்ற சமூக நீதி - சமத்துவம் - மதச்சார்பின்மை - ஜனநாயகம் எல்லாம் இன்றைக்கு பாஜக ஆட்சியில் தலை கவிழ்ந்து கிடக்கின்றன.  நாட்டின் அரசியல் சட்டம் - அந்த அரசியல் சட்டத்தை நிலைநாட்டும் நீதித்துறை எல்லாம் ஒன்றிய அரசின் வரம்புமீறிய அதிகாரத்திற்கும்   - மிரட்டலுக்கும் உள்ளாக நேரிடுகின்றன. இப்படியொரு சூழலில்தான், ‘அனைவருக்கும் நான் பிரதமர்’ என்ற பிரதமர் அவர்களே,  பொது சிவில் சட்டம் என்ற “வெறுப்பு முழக்கத்தை” முன்வைத்துள்ளார். எம்.எல்.ஏ. - எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் கலாசாரத்தின் கதாநாயகனாக பாஜக என்ற கட்சியை மாற்றி - பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் வலுப்படுத்திய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை “காட்சிப் பொருளாக்கி” வேடிக்கை பார்க்கிற பாஜகவுக்கு  இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது - இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற சொல்லையேகூட நீக்கிவிடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை பதிவு செய்யும் இக்கூட்டம் - வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை  ஒன்பது ஆண்டுகாலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை, ஆளுநர்களின் அத்துமீறல்களை, பாஜக.ஆட்சியில் ஜனநாயகத்திற்கு - மதச்சார்பின்மைக்கு - சமூக நீதிக்கு - அடிப்படை உரிமைகளுக்கு - மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும் - இந்தியாவுக்காகவும் செயல்படுவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/BdjITLc https://ift.tt/KE7BDZi
via IFTTT

Thursday, 13 July 2023

தங்கம் பவுனுக்கு ரூ.64 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.5,545-க்கும், பவுனுக்கு ரூ.64 உயா்ந்து ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து ரூ.81.30-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,800 உயா்ந்து ரூ.81,300-க்கும் விற்பனையாகிறது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/BdjITLc https://ift.tt/NADt9qM
via IFTTT

``நேட்டோ உச்சி மாநாட்டைக் கவனித்தோம்... அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கத் தயார்" - ரஷ்யா

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூட்டாக அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்புக்கும், ரஷ்யாவுக்கும் எப்போதும் முட்டல், மோதலாகவே இருக்கிறது. ரஷ்யா, தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முன்வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது போர்த்தொடுக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பின் நாடுகள் சில ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி போன்றவற்றை அளித்துவருகிறது.நேட்டோ இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், ``சமீபத்திய நேட்டோ உச்சி மாநாடு மேற்கத்திய கூட்டணி பனிப்போர் திட்டங்களுக்குத் திரும்புவதைக் காட்டுகிறது. ஆனால், எல்லா யுத்திகளையும் பயன்படுத்தி அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கத் தயார்" என நேற்று (ஜூன் 12) தெரிவித்திருக்கிறது. முன்னதாக லிதுவேனியாவில் நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குப் புதிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அளித்தது. அதோடு, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துருக்கி அதிபர், தன்னுடைய ஆட்சேபனைகளைக் கைவிட்டதையடுத்து, ஸ்வீடனின் புதிய வரவுடன் நேட்டோ உச்சி மாநாடு நடந்து முடிந்தது. இத்தகைய சூழலில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அந்த அறிக்கையில், ``நேட்டோ உச்சி மாநாட்டின் தீர்மானங்களைக் கவனத்தில் கொண்டோம். ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான சவால்கள், அச்சுறுத்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எங்களின் யுத்திகள் மூலம் சரியான நேரத்தில் பதிலளிப்போம். இந்த உச்சி மாநாடானது, உலகின் புதிய புவிசார் அரசியல் சூழ்நிலைக்கு நேட்டோ தங்களைத் தகவமைத்துக்கொள்ள முடியாததை வெளிப்படுத்துகிறது. அதோடு நேட்டோ தங்களின் படைகளைப் பயன்படுத்துவதற்கான வரம்பைத் தொடர்ந்து குறைத்து வருவதோடு, அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களை அதிகப்படுத்துகிறது. மேலும், ரஷ்யா, உக்ரைனுக்கிடையிலான மோதலை முடிந்தவரை நீட்டிப்பதற்காக, நவீன மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான புதிய தீர்மானங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். எனவே நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவுகளை விடவும் அதிகமாக, ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்பைth தொடர்ந்து பலப்படுத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினை, `நிலத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் மோகம் கொண்டவர்' எனச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. - மு. அவந்திகாரஷ்யா: 24 மணி நேரத்தில் பின்வாங்கிய WAGNER படை... பின்னணி இதுதான்! - பலவீனமடைகிறாரா அதிபர் புதின்?!
http://dlvr.it/Ss6qYy

ராசிபுரம் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!

ராசிபுரம் பெண் கவுன்சிலர் தேவிப்பிரியா, அவரது கணவர் அருண் லால், மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராசிபுரம் நகர திமுக துணை செயலாளராக இருப்பவர் அருண் லால் (53). இவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவிப்பிரியா (46). இவர் ராசிபுரம் நகர மன்றத்தின் 13 ஆவது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா (18) உயிரிழந்த மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.  இதையும் படிக்க | குரூப் - 4 கலந்தாய்வு எப்போது தெரியுமா? - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! இந்த நிலையில் இவர்களது வீட்டில் அருன்லால், தேவிப்பிரியா, மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே. செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/BdjITLc https://ift.tt/R3ZTLih
via IFTTT

Wednesday, 12 July 2023

``வடகொரியா அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை கடலை நோக்கி வீசியது'' - தென்கொரியா குற்றச்சாட்டு

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையே நீண்ட ஆண்டுக்காலமாக மோதல்போக்கு நீடித்துவருகிறது. இதற்கிடையே, வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த நிலையில், `தனது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை வீழ்த்துவோம். கொரிய தீபகற்பத்துக்கு அருகே அணுசக்தி ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்தும் வாஷிங்டனின் திட்டங்களைக் கண்டிக்கிறோம்' என வடகொரியா சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாகப் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ``வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது. அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் எல்லையைத் தாண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும்'' என்று எச்சரித்தார். வட கொரியா இந்த நிலையில், வடகொரியா நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை அதன் கிழக்குக் கடல் பகுதியில் வீசியதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிலுள்ள (Pyongyang) சுனான் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, Sea of Japan என்ற இடத்தில் விழுந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்றும் இந்த ஏவுகணை குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்திருக்கிறது. இது மாதிரியான ஏவுகணைச் சோதனைகள் வடகொரியாவின் ராணுவத்தை நவீனமயமாக்கும் கிம் ஜாங் உன்னின் திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. வட கொரியாவின் இந்தச் செயலுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் அந்த நாட்டின் பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றன. இந்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் தென்கொரிய அதிபர் யூன் கலந்துகொள்ளவிருக்கிறார். வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்கள் தொடர்பாக கூட்டணி உறுப்பினர்களுடன் வலுவான ஒத்துழைப்பைக் கோருகிறார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. மு. அவந்திகாவட கொரியா அதிபர் மக்களுக்கு எச்சரிக்கை| Youtube-ன் புதிய சிஇஓ-வாக இந்தியர் நியமனம் - உலகச் செய்திகள்
http://dlvr.it/Ss3fMp

Tuesday, 11 July 2023

வருங்கால மருமகனிடம் ரூ.33 லட்சம் வரதட்சணை கேட்ட மணமகளின் தாயார்; அரசிடம் முறையிட்ட மணமகன்!

சீனாவில் தாயார் ஒருவர் தன்னுடைய மகளின் காதலனிடம், `என்னுடைய மகளை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமானால், ரூ.33 லட்சத்தை வரதட்சணையாகச் செலுத்த வேண்டும்' என்று கூறியிருக்கும் நிகழ்வு பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டு அரசாங்கம், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக திருமணங்களில் கைலி (Caili) அல்லது நிச்சயதார்த்த பரிசு (Betrothal Gift) என்றழைக்கப்படும் நடைமுறையை ஊக்குவித்துவருகிறது. அதாவது கைலி எனும் இந்தப் பாரம்பர்ய நடைமுறையில், மணமகன் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு `மணமகள் விலை' என்ற பெயரில் வரதட்சணை கொடுக்க வேண்டும்.திருமணம் - வரதட்சணை அந்த வகையில் தற்போது இந்த விவகாரத்தில், மணமகளின் தாயார் மணமகனிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். இது தொடர்பாக இதில் சம்பந்தப்பட்ட இளைஞன் அரசிடம் புகாரளித்ததையடுத்து, இந்தச் சம்பவம் தற்போது வெளியில் வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, லியு என்ற குடும்பப் பெயர்கொண்ட அந்த இளைஞன் கடந்த ஜூன் 15 அன்று சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள (Gansu Province) ஜென்யுவான் கவுன்ட்டியின் (Zhenyuan County) மேயரிடம் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``நானும் என்னுடைய காதலியும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிந்த காதலியின் தாயார், திருமணத்துக்கு உள்ளூர் வழக்கப்படி மணமகளின் குறைந்தபட்ச விலையான 2,88,000 யுவானைத் (ரூ.33 லட்சம்) தர வேண்டும் என்றார். அதிலும் வீடு, கார்கூட எதுவும் குறிப்பிடவில்லை என்கிறார். ஆனால், எங்கள் கவுன்ட்டியில் மணமகளின் விலை 1,20,000 யுவான் (ரூ.13.74 லட்சம்) மட்டுமே. இருப்பினும், நானும் என் காதலியும் ஒருவருக்கொருவர் விரும்புவதால், எங்களின் குடும்பத்தால் அவ்வளவு வரதட்சணை தர முடியாது என்று கூற தைரியம் வரவில்லை" என்று குறிப்பிட்டு, இதில் தகுந்த நடவடிக்கை எடுத்து சமாதானப்படுத்துமாறு அந்த நபர் குறிப்பிட்டிருக்கிறார்.திருமணம் பின்னர் இந்தப் புகார் குறித்து பதிலளித்த உள்ளூர் அரசு நிர்வாகம், `கவுன்ட்டியில் மணமகளின் விலை குறைந்தவண்ணம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தது. இதுவொருபுறமிருக்க, இந்தப் புகார் சமூக வலைதளங்களில் பரவியபோது, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் அனுதாபங்களுக்கு பதில், பலரிடமிருந்து விமர்சனத்தையே பெற்றார். அதிலும் இணையதளவாசி ஒருவர், `உங்களால் மணமகள் விலைக்கு உடன்பட முடியவில்லையென்றால், அவரைத் திருமணம் செய்துகொள்ளாதீர். விலையே கேட்காத மணமகள் ஒருவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். திருமண சடங்குகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும்கூட, வரதட்சணை என்பது நிச்சயம் ஏதாவது ஒருபக்கம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றே. அவ்வாறிருக்க மணமகன் அல்லது மணமகள் என எந்தத் தரப்பினராக இருந்தாலும் வரதட்சணை என்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியதே ஆகும்.தெலங்கானா: அரசின் `கல்யாண லக்ஷ்மி திட்டம்' - வரதட்சணை கொடுமையாக மாறும் அவலம்!
http://dlvr.it/Ss1gHR

Monday, 10 July 2023

`வான்வெளியில் அத்துமீறி நுழையும் உளவு விமானங்களை வீழ்த்துவோம்' - அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!

வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், `தனது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை வீழ்த்துவோம். கொரிய தீபகற்பத்துக்கு அருகே அணுசக்தி ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்தும் வாஷிங்டனின் திட்டங்களைக் கண்டிக்கிறோம்' என வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ``இந்த மாதம் வடகொரியாவின் விருப்பத்துக்கு எதிராக விமானங்கள் செய்யப்பட்டன. ஓர் உளவு விமானம் கிழக்கு கடல் வழியாக அதன் வான்வெளியில் `பல முறை' ஊடுருவியது. அமெரிக்க விமானப்படையின் உளவு விமானத்தை வீழ்த்துவது போன்ற அதிர்ச்சியூட்டும் விபத்து கொரியாவின் கிழக்குக் கடலில் நடக்காது. தென்கொரியாவிலிருந்து கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில், அமெரிக்கா அணுசக்தியை திட்டமிட்டு அனுப்புவது வடகொரியாவுக்கு `மிகவும் மறைக்கப்படாத அணு ஆயுத அச்சுறுத்தல்'. அது பிராந்திய மற்றும் உலக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தின் நிலைமை அணுசக்தி மோதலை நோக்கி நகர்கிறது என்பதை தற்போதைய சூழ்நிலை தெளிவாக நிரூபிக்கிறது. பல முறை தென்கொரிய துறைமுகத்துக்கு நேரத்தைக் குறிப்பிடாமல், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புவதாக ஏப்ரலில் வாஷிங்டன் கூறியது. வடகொரியா இந்த ஆண்டு பல தடைகளை முறியடிக்கும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது, அதன் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சோதனை செய்தல் மற்றும் மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வைக்க முயன்றது'' எனக் கூறியிருக்கிறார். அமெரிக்காவும், தென்கொரியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்திருக்கின்றன. மேம்பட்ட ஜெட் விமானங்கள் மற்றும் உயர்மட்ட அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். மு. அவந்திகாCluster Munitions: கிளஸ்டர் வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா! - விரிவான பின்னணி!
http://dlvr.it/Sryj3L

Sunday, 9 July 2023

``உச்சம் தொட்ட வெப்பநிலை; மக்களே... இது அபாய ஒலி" எச்சரிக்கும் விஞ்ஞானி..!

இந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி, உலக அளவில் மிகவும் வெப்பமான நாளாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு ஆய்வகம் வெளியிட்டுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 டிகிரி பேரன்ஹீட்)  ஆக அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகின் அதிக வெப்ப நிலையாக 16.92 டிகிரி செல்சியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஜூலை 3-ம் தேதி பதிவான வெப்பநிலை, அதனை மிஞ்சி உள்ளது. உச்சம் தொட்ட வெப்பநிலை`உயரும் வெப்பநிலை... உயிரினங்கள் பிழைத்திருப்பதே சவாலானது!' IPCC-யின் ஆய்வறிக்கை சொல்வதென்ன? தெற்கு அமெரிக்கா, கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப அலைகளை சந்தித்து வருகிறது. சீனாவிலும், வெப்பநிலை அதிகரித்த வண்ணமே தொடர்கிறது. தற்போது, சீனாவில் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பேரன்ஹீட்) என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்கா பகுதியில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றே கூறலாம். அங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பேரன்ஹீட்) என்ற அளவை நெருங்கி வருகிறது. பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. ஆனால், அதற்கு எதிர்மறையாக வெப்பநிலை அங்கும் அதிகரித்து வருகிறது. அர்ஜுன்டைன் தீவில் இருக்கும் உக்கரனின் வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சி மையத்தில், இதுவரை இல்லாத அளவில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது, உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்வதை புரிந்துகொள்ள முடிகிறது.காலநிலை மாற்றம்காலநிலை மாற்றம்... மனித இனத்துக்கு விடப்பட்ட ‘கோட் ரெட்’! - என்ன செய்யப்போகிறோம்? காலநிலை மாற்றம் குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்ட்டியூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது நாம் கொண்டாட வேண்டிய மைல்கல் என நினைக்க வேண்டாம். உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என்று எச்சரித்துள்ளார்.  "உலக அளவில் கார்பன் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனால், பருவநிலை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த உச்சபட்ச வெப்பநிலையானது நேரடியாக எல் நினோ தாக்கத்தின் விளைவு தான். இப்படியே சென்றால், இவ்வுலகில் மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்" என்று கவலை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்.
http://dlvr.it/SrvM6F

Saturday, 8 July 2023

பதவியை ராஜினாமா செய்த நெதர்லாந்து பிரதமர் | 24 வயது இளைஞருக்கு 90 ஆயுள் தண்டனைகள் - உலகச் செய்திகள்

வெஸ்ட் பாங்க் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்தேறியது. ஸ்வீடனில் குரான் எரிப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'குரானின் புனிதத்தைக் காப்போம்' என்று கூறி அந்த நாட்டுப் பிரதமர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். 'Threads' என்ற மெட்டாவின் புதிய செயலிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அச்சுறுத்தியிருக்கிறது. ட்விட்டரின் வணிக ரகசியங்களைச் சட்டவிரோதமாக மெட்டா நிறுவனம் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது ட்விட்டர். செக் நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியல்லா (Petr Fiala) உக்ரைனுக்குப் புதிய ஆயுதங்களை வழங்கப்போவதாக அறிவித்தார். மேலும், உக்ரைன் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க உதவுவதாகவும் அறிவித்தார். பீய்ஜிங் சென்ற அமெரிக்க கருவூலர் செயலாளர் ஜானட் ஏலன், சீனாவின் Premier Li Keqian அவர்களைச் சந்தித்தார். ஆரோக்கியமான வர்த்தகப் போட்டியை விரும்புவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வால்மார்ட்டில் 2019-ல் இனவெறியினால் பயங்கரத் துப்பாக்கிச்சூடு நடத்திய 24 வயது பாட்ரிக் க்ரூசியஸிக்கு (Patrick Crusius) 90 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 23 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றபோது டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததை அடுத்து, ஓஷன்கேட் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்தியது. குடியேற்றக் கொள்கை தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருக்கிறார். க்ரைம் ஜெர்மனியில் ஐ.எஸ் குழுவால் ஈர்க்கப்பட்டு, பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை ஜெர்மனி காவல்துறை கைதுசெய்திருக்கிறது. பேஸ்பால் மட்டையால் ஆசிரியரை அடித்துக் கொன்றதற்காக அமெரிக்க இளைஞனுக்கு 25 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Willard Miller என்ற சிறுவன், 2021-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யாததால் ஆசிரியரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது. ரஷ்யப் போரினால் உக்ரைனில் 500 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 9,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/SrsrHh

சனன கயமபட சநதயல தககள வல அதகரபப

  நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ள தக்காளி விலை, இன்று சென்னையில் ஒரே நாளில் தக்காளி கிலோ ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கத்தைவிட சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இதையும் படிக்க: ராகுலுக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? சீமான் பேட்டி அதன்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி சென்னைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை ரூ.90 வரை விற்பனையான தக்காளி, சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/LN7nKux https://ift.tt/TANO1I2
via IFTTT

அமெரிக்கா: 53 மில்லியன் டாலர் கோவிட் நிதி மோசடி; இந்திய வம்சாவளியினர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை

உலகை உலுக்கிய கொரோனா பரவலின்போது, அமெரிக்க அரசால் `Paycheck Protection Program' (PPP) எனும் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதி உதவி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், வாடகைக்கடை நடத்தும் வியாபாரிகளுக்கு அவர்கள் நஷ்டத்திலிருந்து மீண்டு வர உதவும் வகையில், வணிக மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தப்பட்டது. சிலருக்கு வட்டியில்லாக் கடன், திரும்ப செலுத்தத் தேவையில்லாக் கடன் என நிறுவனத்தின் பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.கொரோனா வைரஸ் - அமெரிக்கா இந்த நிலையில், அரசின் இந்த நிவாரண நிதி உதவியை மோசடியாகப் பெற்றதாக சன்ஷைன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, மம்மத் குழுமத்தின் உரிமையாளர், ஆர்.ஏ. இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எல்.கே.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர், Gulf Coast Scrap நிறுவனத்தின் உரிமையாளர், NTC 5G Metals and Sunshine உரிமையாளர் உள்ளிட்ட இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கர்கள் எனப் பல முக்கிய பெரும் நிறுவன முதலாளிகள் 14 பேர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக , அமெரிக்க அரசின் Pandemic Response Accountability Committee (PRAC) விசாரித்து வந்தது. அதில், வங்கிக் கணக்குகள், காசோலைகள், போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 53 மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய டெக்ஸாஸ் வழக்கறிஞர் லீகா சைமன், ``அரசை ஏமாற்றுவது வரி செலுத்தும் ஒவ்வொருவரையும் அவமானம் செய்வதுதான். பெரும் தொற்று பரவிக்கொண்டிருக்கும்போது, மக்களை மீட்க அரசு போராடிக்கொண்டிருக்கும்போது, அந்த சமயத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுவது வெந்தக் காயத்தில் உப்புத் தண்ணீர் ஊற்றுவதுபோல" என விமர்சித்திருக்கிறார்.அமெரிக்கா இந்த விவகாரத்தில் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், வங்கி மோசடி மற்றும் ஃபெடரல் டெபாசிட் இன்ஷூரன்ஸ் கமிஷனுக்கு (FDIC) தவறான அறிக்கைகளை வழங்கியதற்கான குற்றச்சாட்டுகளுக்கு 30 ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.``திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்... மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" - அண்ணாமலை
http://dlvr.it/SrsXh8

Friday, 7 July 2023

74 ஆண்டுகள் லீவு எடுக்காமல் பணிக்குச் சென்ற மூதாட்டி|பீய்ஜிங்கில் கொளுத்தும் வெயில் -உலகச் செய்திகள்

மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் `த்ரெட்ஸ் செயலி' பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை அதிகமாகக் கண்காணிப்பதாக, ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 17 வயதில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர், தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வருடமாக தன் தாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெக்ஸாஸில் 74 ஆண்டுகள் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பணிக்குச் சென்ற மெல்பா மெபேன் (Melba Mebane) என்ற மூதாட்டி தனது 90 வயதில் ஓய்வுபெற்றிருக்கிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த மெல்பா மெபேன், அங்கு வேலை பார்க்கும் அனைவரிடமும் மிகுந்த பாசத்தோடு பழகிவந்திருக்கிறார். மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் 27 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக்கைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. இது எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படுவதற்கான அறிகுறி என்று அந்த நாட்டின் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. பிரான்ஸில் சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கவும், கேமராவை உபயோகிக்கவும், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பீய்ஜிங்கில் தொடர்ந்து பத்து நாள்களுக்கும் மேலாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருவதால்‌, ஊழியர்களுக்கு Work from Home வசதியைப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். நான் நாட்டிலேயே இருந்து, என்மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்கொள்ளப்போகிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான சூழலைச் சரிசெய்ய, அமெரிக்க கருவூல செயலாளர் (Treasury Secretary) சீனா விரைந்திருக்கிறார். விபத்துக்குள்ளான ஓஷன் கேட் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சுழல்வது போன்ற பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/SrqmtT

மணிப்பூர்: ``இந்தியாவின் வடகிழக்கு எங்களுக்கு முக்கியம்; நாங்கள் உதவத் தயார்" - அமெரிக்கத் தூதர்

பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் பழங்குடி சமூகமான குக்கி சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல், இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு திணறி வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகும் கூட கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.மணிப்பூர் கலவரம் அதற்கேற்றாற் போலவே மணிப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட அடுத்த நாளே இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரையில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி (Eric Garcetti), ``மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா உதவி கேட்டால் எந்த வகையிலும் நாங்கள் உதவத் தயார்" எனத் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மணிப்பூர் கலவரம் தொடர்பாகப் பேசிய எரிக் கார்செட்டி, ``மணிப்பூரில் அமைதி நிலவ நாங்கள் பிரார்த்திக்கிறோம். அமெரிக்காவுக்கு இதில் என்ன அக்கறை என்று நீங்கள் கேட்கலாம்... இது சக மனிதர்கள் மீதான அக்கறை. மணிப்பூர் வன்முறையில் குழந்தைகள் உட்பட பலர் இறப்பதைப் பார்த்து கவலைகொள்வதற்கு நீங்கள் இந்தியராக இருக்கவேண்டிய அவசியமில்லை. பல்வேறு நல்ல விஷயங்களுக்கு அமைதியே முன்னோடி என்பதை நாங்கள் அறிவோம்.இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி வடகிழக்கிலும் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அமைதியில்லாமல் அத்தகைய நல்ல விஷயங்களைத் தொடர முடியாது. எனவே இந்தியா கேட்டால் எந்த வகையிலும் நாங்கள் உதவி செய்யத் தயார். இது இந்திய விவகாரம் என்று தெரியும். இருப்பினும் இங்கு அமைதி நிலவ பிரார்த்திக்கிறோம். கூடிய விரைவில் நல்லது நடக்கட்டும். அமைதி நிலவும் பட்சத்தில், இங்கு அதிக திட்டங்கள், அதிக முதலீடுகள் ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். இறுதியாக தெளிவாக ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்கிறேன், இந்தியாவின் கிழக்கும், வட கிழக்கும் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. அதன் மக்கள், இடங்கள், திறன், எதிர்காலம் ஆகியவை எங்களுக்கு முக்கியம்" என்றார்.மணிப்பூர் போராட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பெண்கள்! - பின்னணி என்ன?
http://dlvr.it/SrqJgD