Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 29 April 2023

சுயநினைவை இழந்த ஓட்டுநர், 66 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் (Warren) நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார். இருந்த போதும் அவரால் இயலவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆள்களை அழைத்திருக்கிறார். டில்லன் ரீவ்ஸ்``40 வருஷமா மூணு சக்கர வண்டி ஓட்டுறேன்!’’ - 70 வயது எனர்ஜி டானிக் கண்ணம்மா செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக இதனைக் கண்ட டில்லன் ரீவ்ஸ் என்ற 7-ம் வகுப்பு மாணவர், துரிதமாகச் செயல்பட்டு ஸ்டியரிங்கை பிடித்து, பிரேக்கில் கால் வைத்து அழுத்தியிருக்கிறார். வண்டி நின்றதும் உடனடியாக அவரச உதவி எண்ணுக்கு அழையுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  ஓட்டுநரின் உடல்நலக் குறைவிற்கான பிரச்னை என்னவென்று தெரியவில்லை. இதற்கு முன்பு இவருக்கு இதுபோல ஆனதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு தக்க சமயத்தில் 66 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்… 
http://dlvr.it/SnGdrk

Friday, 28 April 2023

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து | 8 மாதங்களில் 1,000 நிலநடுக்கங்கள் பதிவு - உலகச் செய்திகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 1,000 சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவுசெய்யப்பட்டதாக, Seismological Research Letters ஜர்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கயிர்பூர் என்ற இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் தீப்பிடித்தது. இதில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். புகழ்பெற்ற விளையாட்டு சேனலான ESPN -ன் தொகுப்பாளர் Marly Rivera, ஒரு நிகழ்ச்சியின்போது சக தொகுப்பாளரான Ivón Gaete -யிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவர் இந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சூடானின் தலைநகரான கார்ட்டூமில், ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன. இதுவரை, இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 512-ஆக உயர்ந்திருக்கிறது. புகழ்பெற்ற 'ஜெரி ஸ்ப்ரிங்கர் ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சின்சினாட்டியின் முன்னாள் மேயருமான Jerry Springer காலமானார். அவருக்கு வயது 79. அமெரிக்காவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய பெற்றோரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். குழந்தைகளை டாட்டூ போட அவர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவால்ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க , உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் அறிவித்தப்படி, 1,550 ஆயுத வாகனங்களையும், 230 டாங்குகளையும் வழங்கியிருப்பதாக நேட்டோவின் தலைவரான Jens Stoltenberg அறிவித்திருக்கிறார். புகழ்பெற்ற 'குயின் ' இசைக்குழுவின் பாடகரும், பாடலாசிரியருமான ஃபிரெடி மெர்குரியின் 'ஷாட்பேண்ட்ஸ்' (Hotpants) ஒன்று ஏலத்தில் சுமார் 18,000 பவுண்டுகளுக்குப் பிரிட்டனில் விற்கப்பட்டது. 1703-ல் தொடங்கப்பட்ட உலகின் பழைமையான நாளிதழ்களில் ஒன்றான Wiener Zeitung, அதன் அச்சுப் பதிப்பகத்தை நிறுத்திவிட்டு, இணையவழி சேவையைத் தொடங்க முடிவெடுத்திருக்கிறது. இதுவே உலகின் பழைமையான நாளிதழ். இரண்டாம் உலகப் போரின்போது, நாசி முகாம்களில் காவலாளியாக இருந்த Josef Schuetz தன்னுடைய 102-வது வயதில் காலமானார். கடந்த ஆண்டுதான், இவரின் போர்க் குற்றங்களுக்காக ஐந்து வருடங்கள் இவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
http://dlvr.it/SnDWms

தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த அமெரிக்க மாகாணம் | பாகிஸ்தானில் பரவும் குரங்கு அம்மை - உலகச் செய்திகள்

நீண்ட தூரம் தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகளை, 2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின் பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் குரங்கு அம்மை நோயால் முதல் நபர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் விசாரித்துவருகின்றனர். ஜோ பைடன் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் தேசியக்குழு பைடனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து பல அணுசக்தி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாக தென்கொரியாவுக்கு அனுப்பப்படுகிறது. வடகொரியாவின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் (Bishops Meeting) பெண்களும் வாக்களிக்க, போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியிருக்கிறார். பெண்களுக்கு அதிக அளவில் முடிவெடுக்கும் பொறுப்புகள் அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜீன் கோரல், ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னகொட, அவரின் மனைவி ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.தீபாவளி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளிப் பண்டிகையன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SnC7Xl

Thursday, 27 April 2023

"இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்புக்கு சிறுபான்மையினரே பொறுப்பு!" - பிரவின் தொகாடியா கருத்து

ஐநா சபை, 2023-க்கான உலக மக்கள்கொகை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடி என்றும், சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சீனாவைவிட இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 29 லட்சம் அதிகம் என்பது தெரியவந்திருக்கிறது.பிரவின் தொகாடியா இந்த நிலையில், `உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகச் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்கு முதல் இடம் கிடைத்ததற்குச் சிறுபான்மை சமூகம்தான் பொறுப்பு' என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) முன்னாள் செயல் தலைவரும், அந்தராஷ்டிரிய இந்து பரிஷத்தின் (AHP) தலைவருமான பிரவின் தொகாடியா தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்புக்குச் சிறுபான்மை சமூகமே பொறுப்பு. நாட்டில் இந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி தற்போது எதிர்மறையாக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் சதவிகிதம் உண்மையில் குறைந்திருக்கிறது. எனவே, தற்போதைய இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை உயர்வுக்கு இந்துக்கள் பங்களிக்கவில்லை. சிறுபான்மை மக்கள்தொகை அதிகரிப்பு அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் அஸ்ஸாமை மோசமாகப் பாதிக்கும். அதனால் கடுமையான மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.பிரவின் தொகாடியா தொடக்கத்திலிருந்தே, எங்கள் அமைப்பு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கோரி வருகிறது. 1951 வாக்காளர் பட்டியல் மற்றும் டி.என்.ஏ மூலம் வங்காள தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களையும், ஊடுருவலாளர்களையும் அடையாளம் காண வேண்டும் என நான் அஸ்ஸாம் அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். மக்கள் தொகை என்னும் மாபெரும் சக்தி..!
http://dlvr.it/Sn84Vz

Wednesday, 26 April 2023

பிடிஎஸ் பாடகரை போல் மாற விரும்பிய நடிகர் - அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சோகம்!

தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS. உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஏழு பேர் கொண்ட இந்தக் குழு பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். இவர்களின் பாடல் வரிகள் சமூகவலைதளங்களில் மிக பிரபலம். இவர்களின் படைப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தக் குழு உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பாடல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். BTS இந்நிலையில் இந்தக் குழுவைச் சேர்ந்த பாடகரான ஜிமினை போல தோற்றமளிக்க விரும்பிய கனடாவை சேர்ந்த நடிகர் செயின்ட் வான், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதனால் ஏற்பட்ட விளைவுகளால் தற்போது உயிரிழந்துள்ளார். 22 வயதான செயின்ட் வான், கனடாவில் பிறந்து, தன் இசைத்துறை மற்றும் தொழிலுக்காக தென்கொரியாவுக்கு குடிபெயர்ந்தார். கடந்தாண்டு, தன் முகத்தை மாற்றுவதற்காக இவர் 12 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இதில் மூக்கை அழகாக்குதல், முகம், புருவம், கண்களை உயர்த்ததல், உதடு குறைப்பு ஆகியன அடங்கும். இதற்காக அவர் 2,20,000 டாலர் செலவிட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ. 1.80 கோடி. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, தாடை வடிவமைப்பை மாற்ற இவருக்குப் புதிதாக ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, ஊசி போட வேண்டியிருந்தது. நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே செயின்ட் உயிரிழந்தார். செயின்ட் வானின் உயிரிழப்பைப் பற்றி பேசியுள்ள அவரது விளம்பரதாரர் எரிக் பிளேக், `இது மிகவும் சோகமானது மற்றும் துரதிஷ்டவசமானது. செயின்ட் தனது தோற்றத்தில் மிகவும் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்தார். அவருக்கு சதுரமான தாடை மற்றும் கன்னம் இருந்தது. அது மிகவும் அகலமானதான இருப்பதாக நினைத்து தன் முக அமைப்புப் பிடிக்காமல் இருந்தார் செயின்ட். மேலும் பல நடிகர்களை போலவே தானும் `வி’ வடிவிலான முக அமைப்பை பெற விரும்பினார். அவர் தென்கொரியாவுக்கு வந்த பிறகு இங்கு அவருக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. அவர் தனது மேற்கத்திய தோற்றத்துக்கு எதிராக மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக உணர்ந்தார். இதனையடுத்து செயின்ட் மிகக் கடினமாக உழைத்தார், மிகவும் உற்சாகமாக இருந்தார்.செயின்ட் வானின் பழைய முக தோற்றம்BTS: பிரிகிறது உலகப் புகழ்பெற்ற இசைக் கூட்டணி... மீண்டும் இணைவது எப்போது? 2019-ல் ஒரு தென்கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்து செயின்டின் வீடு, போக்குவரத்து மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் செய்து வந்தது. யு.எஸ் ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்கிற்காக பிடிஎஸ் பாடகர் ஜினினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதுதான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. செயின்ட் வான் கடந்த வருடம் ஜூன் மாதம் கொரிய நாடகமான ‘பிரட்டி லைஸின்’ படப்பிடிப்பை தொடங்கி டிசம்பரில் முடித்தார். எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. ஆனால் அதற்குள் அவருக்கு இந்த நிலை உருவாகிவிட்டது" என, எரிக் வேதனை தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/Sn5xpT

Monday, 24 April 2023

ஸ்காட்லாந்தில் விற்பனைக்கு வரவிருக்கும் தீவு | பிரிட்டன் பெண் எம்.பி சஸ்பெண்ட் - உலகச் செய்திகள்

பிரிட்டன் அரசு புதிய அவசரக்கால எச்சரிக்கை சேவையின் முதல் சோதனையை நடத்தி முடித்தது. இது அந்நாட்டிலுள்ள அனைத்து கைப்பேசியிலும் மூன்று மணி அளவில் உரத்த அலாரம் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இது போன்ற செயல்பாடு கனடா, ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்மாதிரியாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது, 864 ஆஸ்திரேலியா வீரர்களுடன் மூழ்கிய ஜப்பானிய வணிகக் கப்பல் தென் சீனக் கடலிலுள்ள ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர் Richard Marles அறிவித்தார். ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் பார்லோக்கோ தீவு 190000 டாலருக்கு ( Rs 1.5 கோடி) விற்பனை செய்யப்படவிருக்கிறது. இது மக்கள் யாவரும் வசிக்காத தீவாகும். ட்விட்டரில் சமீபத்தில் சந்தா செலுத்தாத கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இந்த நிலையில், குறைந்தது பத்து லட்சம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் கணக்குகளுக்கு மீண்டும் அதிகாரபூர்வ அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எலன் மஸ்க் முடிவெடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இங்கிலாந்திற்கான உக்ரைன் தூதரான Vadym Prystaiko, `ரஷ்ய அதிபர் புதின் இறந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். மியான்மாரில் உயர்மட்ட தேர்தல் அதிகாரியான Sai Kyaw Thu, அந்த நாட்டின் வணிகத் தலைநகரான யாங்கூனில், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் போராளிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பனிப்பாறைகள் உருகியிருப்பதாக ஐநா ஆய்வறிக்கை வெளியிட்டது. 2022-ம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை, சராசரியை விட 1.15 C அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது. பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியை சேர்ந்த எம்.பி-யான Diane Abbott ' யூதர்கள் இனவெறியை எதிர்கொள்ளவில்லை' என்று கூறியதற்கு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சூடானின் தலைநகரான கார்ட்டூமில் தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் நடந்து வருவதால், பல நாடுகள் அதன் தூதர்களையும் மக்களையும் வெளியேற்றி வருகின்றன. கென்யாவின் கடற்கரை நகரமான மலிண்டி அருகே , 47 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கிருக்கும் ஒரு மதபோதகர் அவர்களை உணவு உண்ணாமல் இருக்க உத்தரவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
http://dlvr.it/Smzymx

Sunday, 23 April 2023

ஜப்பானின் `Crying Sumo' திருவிழா | வேகமாக உருகும் பனிப்பாறைகள் - உலகச் செய்திகள்

உருகும் பனிப்பாறைகள் ``முன்பு எப்போதும் இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. உலகம் முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில், கடுமையான வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவு உருகி வருகின்றன. காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம்" என ஐ.நா-வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்திருக்கிறது.இங்கிலாந்து இங்கிலாந்து அரசு, புதிய அவசரக்கால எச்சரிக்கை சேவையின் முதற்கட்ட சோதனையை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இன்றைய தினம் லட்சக்கணக்கான மொபைல் போன்களில் குறிப்பிட்ட நேரத்தில் சத்தமாக அலாரம் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது. கனடாவில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பிங்க் நிற ஹீல்ஸ் அணிந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்கள்மீது நடத்தப்படும் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தாலிபன் ஆப்கானிஸ்தானின் பக்லான், தாகர் பகுதிகளிலுள்ள பெண்கள், ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கத் தாலிபன்கள் தடைவிதித்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ChatGPT OpenAI-ன் சாட்பாட் தயாரிப்பான ChatGPT-ஐவிட மாணவர்கள் கணக்கியல் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் ChatGPT-ன் செயல்திறன் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், அதுவொரு கேம் சேஞ்சர் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானில் பாரம்பர்யமிக்க `Crying Sumo' திருவிழா நடைபெற்றது. இதில் சுமோ ஆடைகள் அணிவிக்கப்பட்டு, குழந்தைகள் சுமோ வலையத்தினுள் நிற்கவைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். விருது பெற்ற "கோகோமோ சிட்டி" ஆவணப்படத்தில் நடித்தவரும், திருநங்கை உரிமைகள் ஆர்வலருமான கோகோ டா டால், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.மியான்மர் மியான்மரில் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர், யாங்கூனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.மரணம் ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் உணவகத்தில் உணவு சமைக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரண்டு பேர் உயிரிழந்தனர்.
http://dlvr.it/SmxBlZ

Saturday, 22 April 2023

மணி ஹெயிஸ்ட்டுக்கு டஃப் கொடுக்கும் `ஐபோன் ஹெயிஸ்ட்'; ஆப்பிள் ஸ்டோரில் கைவரிசை காட்டிய திருடர்கள்!

அமெரிக்காவில் இரண்டு திருடர்கள் காஃபி ஷாப் வழியாக ஆப்பிள் ஸ்டோரின் பின்புறச் சுவரைத் துளையிட்டு ஐபோன்களைத் திருடிச் சென்று `ஐபோன் ஹெயிஸ்ட்' சம்பவத்தை அரங்கேற்றியிருக்கும் நிகழ்வு பலருக்கும் ஆச்சர்யத்தையும், ஆப்பிள் ஸ்டோர் உரிமையாளருக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.ஐபோன் சியாட்டிலின் ஆல்டர்வுட் மாலிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் திருடர்கள், ஆப்பிள் ஸ்டோரின் பின்புறமாக இருக்கும் காஃபி ஷாப் ஒன்றில் நுழைந்து, அங்கிருக்கும் கழிவறையின் சுவரில் பெரிய துளையை ஏற்படுத்தி அதன் வழியாக ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்து ஐபோன்களைத் திருடிச் சென்றிருக்கின்றனர். இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும்வரை திருடப்பட்ட பொருள்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவரவில்லை. பின்னர் இது போலீஸுக்குத் தெரியவரவே, உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.சம்பவம் நடந்த இடம் இது குறித்துப் பேசிய லின்வுட் காவல்துறையின் தகவல் தொடர்பு பிரிவின் அதிகாரி மரேன் மெக்கே (Maren McKay), ``திருடர்கள் முகமூடி அணிந்துகொண்டு உள்ளே நுழைந்திருக்கின்றனர். தோராயமாக 436 ஐபோன்கள் களவாடப்பட்டிருக்கின்றன. இதுவரை கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. யாரும் கைதுசெய்யப்படவுமில்லை. ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார். களவாடப்பட்ட ஐபோன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.1 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் காஃபி ஷாப் தரப்பிலிருந்து, தங்கள் கடையின் பூட்டுகளை சுமார் 900 டாலரும், கழிவறையைச் சரிசெய்வதற்கு 600 முதல் 800 டாலரும் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.டாடா குழுமம் ஐபோன் தயாரிப்பை கையில் எடுக்க உள்ளதா... உண்மை என்ன?
http://dlvr.it/Smv4nx

Friday, 21 April 2023

சூடான் மோதலில் 270-ஐ கடந்த பலி எண்ணிக்கை | நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்பட சர்ச்சை - உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் தோர்கம் எல்லை நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து இருவர் உயிரிழந்தனர். பலத்த இடி, மின்னல், தொடர் மழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. ஊதிய உயர்வு கோரி சுமார் 1,50,000 அரசு ஊழியர்கள் கனடாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். 2021-ம் ஆண்டிலிருந்து 13.5% ஊதிய உயர்வு கேட்டு, பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கின்றனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த இருவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி அழுத்தங்கள், கோவிட்-19 ஆகியவற்றின் காரணமாக, தெற்காசியாவில் அதிக குழந்தை மணப்பெண்கள் இருப்பதாக, யூனிசெஃப் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதாவின் நிதிநிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், அவரின் பங்குகள் குறித்த முழு விவரங்களை பிரிட்டன் கேபினட் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் மாடலான எம்மா கிளார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் இரண்டு பூனைகளைக் கொன்றதாகப் பதிவிட்டார். இந்த நிலையில், இது இணையவாசிகளைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். நெட்ஃபிளிக்ஸில் 'குயின் கிளியோபாட்ரா' என்ற ஆவணப்படத்தில் கிளியோபாட்ரா ஒரு கறுப்பின ஆப்பிரிக்கராகச் சித்திரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை Adele James நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், வடகொரியா தன்னுடைய முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையில் ஏற்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை 270-ஐ கடந்திருக்கிறது.
http://dlvr.it/Smqyk1

Thursday, 20 April 2023

`உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா?!' ஐ.நா அறிக்கை சொல்வது என்ன?

மக்கள் தொகையில் சீனாவைக் கூடிய விரைவிலேயே இந்தியா முந்தும் எனப் பல நிபுணர்கள் கணித்து இருந்தனர். இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் உலக மக்கள் தொகை அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்த ஆண்டு மத்தியில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 1.4286 பில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 1.4257 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபை!``உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா பங்களிப்பு 50% இருக்கும்...” ஆய்வறிக்கை சொல்வதென்ன? இந்தோனேஷியா, பாகிஸ்தான், நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் முறையே நான்கு, ஐந்து, ஆறு என வரிசையாக முதல் 10 இடத்தை பிடித்துள்ளது. மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது மக்களிடையே வாழ்வாதாரத்திற்கான அச்சத்தை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், ``மக்கள் தொகை எண்கள் பயத்தையோ அல்லது எச்சரிக்கையையோ உருவாக்கக் கூடாது. மாறாகத் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விருப்பங்கள் நிலைநிறுத்தப்பட்டால், முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கவேண்டும்'' என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் இந்தியப் பிரதிநிதியாக இருக்கும் ஆண்ட்ரியா வோஜ்னர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
http://dlvr.it/SmnPQY

Wednesday, 19 April 2023

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம் | பெய்ஜிங்: மருத்துவமனையில் தீ விபத்து - உலகச் செய்திகள்

சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, சுமார் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 71 நோயாளிகள் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர். பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் ஹன்னா (Noel Hanna) என்பவர் மேற்கு நேபாளில் அமைந்திருக்கும் அன்னபூர்ணா சிகரத்திலிருந்து இறங்கும்போது உயிரிழந்தார். புகழ்பெற்ற தென் கொரிய இசைக்குழுவான பிடிஎஸ்-ன் ஜே ஹோப் (J-Hope of BTS), அந்த நாட்டின் கட்டாய ராணுவ சேவையை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 2018 -ம் ஆண்டில் மோசமான உணவுப் பழக்கங்களால் உலகளவில் சுமார் 14.1 மில்லியனுக்கும் அதிகமானோர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேச்சர் மெடிசன் என்ற ஜர்னல் ( journal Nature Medicine) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Faisal bin Farhan சிரியாவுக்கு பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2011-க்கு பிறகு சிரியாவுடனான முதல் நேரடி பேச்சுவார்த்தை இதுவே. சுமார் 34 மில்லியன் மக்கள் ஆப்கானிஸ்தானில் வறுமையில் இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உக்ரைனில் அமைந்திருக்கும் கெர்சன் நகரை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். அங்கிருந்த ராணுவ வீரர்களிடம் போர்நிலை குறித்தும் அவர் விசாரித்தார். கெர்சனை உக்ரைன் ஆக்கிரமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச்-ன் (Evan Gershkovich) பெயில் கோரிக்கை மாஸ்கோ நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய தீவில் கடந்த ஆறு நாள்களாக உணவு, தண்ணீரின்றி சிக்கித் தவித்த பதினோறு மீனவர்கள் மீட்கப்பட்டனர். கடுமையான இல்சா புயலின் காரணமாக அந்த தீவில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலில், அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்தார்.
http://dlvr.it/Smkm1L

Tuesday, 18 April 2023

கறுப்பின சிறுவன் சுட்டுக்கொலை | 2,000 ஆண்டுகள் பழைமையான கடவுள் சிலை கண்டுபிடிப்பு - உலகச் செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினைப் பற்றி விமர்சித்த காரா முர்சா என்ற எதிர்க்கட்சி ஆர்வலருக்கு, மாஸ்கோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. புத்த வருடப்பிறப்பை முன்னிட்டு, மியான்மர் சிறையிலிருந்து சுமார் 3,000 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் பொதுத்தேர்தலின் ஏற்பாடுகள் தொடங்கியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தலைமையேற்பார் என்று கூறப்படுகிறது. சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் கடுமையான தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கிறது. தெற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள அரசு சாரா பெண்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தாலிபன் அரசு மூட உத்தரவிட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவால், நேற்று ஒரே நாளில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா மூர்த்தி, ரூ.500 கோடியை இழந்திருக்கிறார். தெற்கு இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையிலுள்ள பண்டைய கிரேக்க நகரமான பெஸ்டத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2,000 வருடங்கள் பழைமையான கிரேக்க கடவுள் ஈரோஸ்ஸின் (Eros) சிலையைக் கண்டுபிடித்திருக்கின்றனர். 34 வயதான அனுராக் மாலு என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். மலையேறுபவரான இவர், நேபாளின் அன்னபூரணா மலையில் ஏறும்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகையுள்ள நகரமாக மெல்போர்ன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக, முதலிடத்திலிருந்த சிட்னியைப் பின்னுக்குத் தள்ளியது மெல்போர்ன். அமெரிக்காவில் தவறான வீட்டுக் கதவைத் தட்டிய 16 வயது ரால்ஃப் என்ற சிறுவனை, அந்த வீட்டிலிருந்த ஆன்ட்ரூ என்ற 84 வயது நபர் சுட்டுக் கொன்றார். ரால்ஃப் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Smh9qJ

அமெரிக்காவில் முடிவுக்கு வருகிறதா டப்பர்வேர் தயாரிப்புகள்?

ஸ்நாக்ஸ், ட்ரை ப்ரூட்ஸ், ஸ்கூல் லன்ச் பாக்ஸ்... இவற்றையெல்லாம் நினைத்தால் நம் நினைவிற்கு வருவது, கலர் கலரான டப்பாக்கள்தான். உலகம் முழுக்க உள்ள வீடுகளில் ஸ்டீல் டப்பாக்களைப் பயன்படுத்திய காலம் போய், அங்கு நிரந்தரமாக குடியிருக்க ஆரம்பித்தன பிளாஸ்ட்டிக் டப்பாக்கள். இந்த டப்பாக்களில் டப்பர்வேர் நிறுவனத்தின் படைப்புகளுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. தரமான தயாரிப்புகள் என்பதால், டப்பர்வேர் பொருள்களை ஒருமுறை பயன்படுத்தத் தொடங்கியவர்கள், வேறு டப்பாக்களைத் தேடிச் செல்ல மாட்டார்கள். டப்பர்வேர்நீட் பயிற்சி மைய வணிகத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!  ஆனால், அமெரிக்காவில் 70 வருடங்களுக்குமுன் உருவான டப்பர்வேர் நிறுவனம், இன்றைக்குத் தொடர்ந்து செயல்படுமா என்கிற கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்கப் பங்குச் சந்தையில் 90% விலை குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், டப்பர்வேர் அதன் சந்தை நிலையை உறுதிப்படுத்தத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர உடனடி மாற்றங்களை செய்யும் நெருக்கடியில் உள்ளது. 1946-ஆம் ஆண்டு முதலே அமெரிக்காவில் பட்டையைக் கிளப்பிவந்த இந்த டப்பர்வேர் நிறுவனத்தின் சின்ன ஃபிளாஷ்பேக்கைப் பார்ப்போமா? 1930-களில் ஏர்ல் டப்பர் என்ற வேதியியலாளர் ஒருவர் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த நிறுவனத்தில் மீந்துள்ள ஸ்கிராப் பொருள்களை ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதனால் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து ஏதாவது ஒரு புதிய பொருளைத் தயார் செய்ய முடியுமா என்று முயற்சி செய்துவந்தார். வேதியியலாளரான ஏர்ல் டப்பர், நல்ல தரத்தில் பிளாஸ்டிக் பொருள்களைச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். தரமான பாலித்தீனுடன் சரியான அழுத்தமும் வெப்பநிலையும் சேர்ந்தால் அற்புதமான பிளாஸ்ட்டிக் பொருள் கிடைக்கும் என்பதை அவர் உணர்ந்தவர், அப்படிப்பட்ட வலுவான பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கத் தேவையான உத்திகளைக் கண்டறிந்தார். ஆனால், இத்துடன் அவர் வேலை முடியவில்லை. இதற்கேற்றவாறு சரியான மூடியை வடிவமைப்பது முக்கியமாக இருந்தது. மேலும், வீடுகளில் தற்காலிகமாகப் பயன்படுத்தும் தகர மூடியின் பயன்பாட்டை நீக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர் மனதில் இருந்தது. அதனால் பெயின்ட் கேன்களில் உள்ள பாலித்தீன் முடிகளை வைத்து, அதன்மேல் ஒரு சீல் மட்டும் பொருத்தி, இந்தப் பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார். இதன் விளைவாக, தான் 1946-ஆம் ஆண்டு டப்பர்வேர் என்ற நிறுவனம் பிறந்தது. டப்பர்வேரின் பொருள்களை விற்பனை செய்ய, பிரவுன் வைஸ் என்ற விற்பனையாளர் களத்தில் இறங்கினார். அவர், டப்பாக்களின் விற்பனையை அதிகரிக்க அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ‘டப்பர்வேர் பார்ட்டி’-யை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு சில பெண்களை வரவழைத்து, அப்போது டப்பர்வேர் டப்பாக்களில் தின்பண்டங்களை நிரப்பி, காண்போரின் கண்களைக் கவரச் செய்தார். இந்த யுக்தி சரியாக வொர்க்அவுட் ஆனது. மேலும், டப்பர்வேரின் சந்தை, வீட்டில் சாமான்களைச் சேமித்து வைக்கும் பழக்கத்தை உடையவர்களையே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. டப்பர்வேர்திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை! இதை தொடர்ந்து, டப்பர்வேர் அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியது. வருமானம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், பெண் விற்பனையாளர்களைக் கொண்டு, பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் வித்திட்டது டப்பர்வேர். இதன்மூலம் அமெரிக்கக் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு காலப்போக்கில், டப்பர்வேர் தண்ணீர் பாட்டில்கள், கிரில்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் என்று பல வகையான பொருள்களை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட 80 நாடுகளில் அதன் கிளைகளை விரிவுபடுத்தியது. ஆனால், இந்த சாதனைகளைத் தொடர்ந்து , டப்பர்வேர் சில இடங்களில் பின்தங்கத் தொடங்கியது. முதலில், டப்பர்வேரை ஒரு சாதாரண பிளாஸ்டிக் டப்பாக்கள் செய்யும் நிறுவனமாகவே டப்பர்வேர் நிறுவனத்தை மக்கள் பார்த்தனர். மற்ற பிராண்டுகள் குறைந்த விலையில் கொடுத்த போது, டப்பர்வேரின் பொருள்களை மட்டும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையாக இருந்தது. இரண்டாவதாக, பிளாஸ்டிக், வளர்ந்துவரும் மாசுபாட்டிற்கு வித்திடுவதைப் பற்றி மக்கள் உணர்ந்தனர். அதனால் பலரும் கண்ணாடி ஜாடிகள் நோக்கி நகரத் தொடங்கினர். சாப்பாடு கேரியர்கள்... பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?! செய்ய வேண்டியவை செக் லிஸ்ட்! மேலும், டப்பர்வேர் நேரடி விற்பனையை மட்டுமே பின்பற்றி வந்தது. ஆனால், சமூக வலைத்தள சேவைகளின் மூலமாக விற்பனை செய்யும் நிறுவனங்களையே மக்கள் காலப்போக்கில் விரும்ப ஆரம்பித்தனர். டப்பர்வேரின் நேரடி விற்பனை அடுத்தடுத்த தலைமுறைகளிடையே பெரிய அளவில் சென்றடையவில்லை. ஆதலால் ,கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், டப்பர்வேரின் விற்பனை 40% வீழ்ச்சி அடைந்தது. மேலும், இன்றளவும் டப்பர்வேரின் விற்பனையில் 80% நேரடி விற்பனையே ஆகும். இதை உணர்ந்து 2019-லிருந்து பல இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்ய முயற்சி எடுத்து வந்தாலும், பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால்தான் இந்த நிறுவனத்தின் செயல்பாடு இனி எப்படி இருக்குமோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், அமெரிக்க டப்பர்வேர் நிறுவனம் மட்டுமே இந்த சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்திய டப்பர்வேர் நிறுவனமானது இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிபன் பாக்ஸ்!லாபம் ஈட்டுபவர், நஷ்டம் செய்பவர்... நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்? இந்தியாவில் டப்பர்வேர் தயாரிப்புகளானது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுவதால், மக்கள் அதை விரும்பி வாங்கிச் சென்று பயன்படுத்தவே செய்கின்றனர். அமெரிக்காவில் உள்ள டப்பர்வேர் நிறுவனம், தனக்கு நேர்ந்துள்ள சிக்கல்களை எல்லாம் தாண்டி மீண்டும் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
http://dlvr.it/SmggTz

Monday, 17 April 2023

விண்ணில் பாயத் தயாராகும் மஸ்க்கின் ராக்கெட் |மன்னிப்புக் கேட்ட ஸ்காட்லாந்து எம்.பி - உலகச் செய்திகள்

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், நேற்று அமெரிக்காவில் சரிவர இயங்காததால் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் புகாரளித்திருக்கின்றனர். ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் சார்ல்ஸ் கேர் (Stephen Charles Kerr), திருநங்கைகளையும், கற்றலில் குறைபாடு உள்ளவர்களையும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த நிலையில், மக்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், ஐ.நா-வுக்காக பணிபுரியத் தாலிபன்கள் தடைவிதித்திருக்கின்றனர். இது தங்கள் உள்நாட்டு விவகாரம், இதனை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள மோண்ட்கோமரி பகுதியில், பிறந்தநாள் விழா ஒன்றில் 20 பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதிக அளவில் ஏற்படும் காட்டுத்தீயின் காரணமாக, நேபாள தலைநகர் காத்மாண்டு, உலகில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் மிகவும் அபாயகரமான பொருள்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பனிமலைகள் நடுவே தீப்பற்றி எரியும் காட்சிகள் வேகமாகப் பரவி வருகிறது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பைப் வெடிகுண்டாக இருக்கலாம் என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கனடாவில் ஆர்ட் கேலரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கலை பொருள் மீது விளையாட்டாகச் சிக்கிக்கொண்ட நபருக்கு நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிக்கிக்கொண்ட அவரை மீட்கக் கலைப்பொருளை சேதப்படுத்த நேரிட்டது குறிப்பிடத்தக்கது. கனடாவின் பாரம்பர்யமிக்க வைசாகி கொண்டாட்டம் கோவிட் இடைவெளியைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது. அணிவகுப்பில் அந்த நாட்டின் பிரதமர் உட்பட இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில் இரண்டு நாள்களில் 6 பெண் ஆசிரியைகள் தங்கள் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ``ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி'' ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
http://dlvr.it/Smd90X

உ.பி.யில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலவுன் பகுதியில், பைக்கில் வந்த இரண்டு பேர், கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலவுன் பகுதியில், பைக்கில் வந்த இரண்டு பேர், கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதாகும் கல்லூரி மாணவி, அந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பிஏ படித்து வந்த அவர், தேர்வுக்காக ஜலவுன் வந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து நேரில் பார்த்தவர்களிடமும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரித்து வருகிறார்கள்.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Pa13EVc https://ift.tt/41tSsC9
via IFTTT

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு (ஏப்.17 முதல் 20) வரை நான்கு நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா். 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Pa13EVc https://ift.tt/UnHAuxZ
via IFTTT

``அம்மா என்னைக் காப்பாற்றுங்கள்" - AI மூலம் மகளைப்போல் பேசி தாயிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல்!

இணையத்தின் வருகைக்குப் பிறகு கணினிமயமாக்கல் வேலைகள் அனைத்துக்கும் மனிதன் பழக்கப்படுத்தப்பட்டான். அடுத்து, மனிதன் பார்க்கும் வேலைகளைச் செய்ய மனிதர்களைக்கொண்டே ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மனிதனின் மூளையைப்போலவே சிந்தித்து செயல்படுமளவுக்கு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனும் அடுத்தகட்டத்தை நோக்கி தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. குறிப்பாக இந்த AI தொழில்நுட்பம் குறிப்பிட்ட மனிதர்களின் முகம், குரல் ஆகியவற்றைப் பதிவுசெய்து, அச்சு அசல் அந்தக் குறிப்பிட்ட நபர்களைப்போலவே பேசவும் செய்யும்.AI மோசடி இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு நன்மைகள் இருக்கும் அதே அளவுக்கு மோசடிகளும் இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே, அமெரிக்காவில் ஒரு கடத்தல் கும்பல் AI தொழில்நுட்பத்தின் மூலம், சிறுமி ஒருவரைப்போலவே பேசி, சிறுமியின் தாயிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஜெனிஃபர் டெஸ்டெஃபனோ (Jennifer DeStefano) என்பவர், ``என்னுடைய மகள் பிரியானா (Briana), பனிச்சறுக்குப் பயணத்தில் (Skiing Trip) இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியபோது, என் மகள் அழும் குரல் கேட்டது. நான் பதறிவிட்டேன். என்ன ஆனது என்று நான் கேட்டபோது, சிலர் தன்னைக் கடத்தியிருப்பதாகவும், காப்பாற்றுங்கள் என்றும் என் மகள் கூறியதும் இன்னொரு நபர், `நான் சொல்வதைக் கேள். உன்னுடைய மகள் என்னிடம் இருக்கிறாள். நீங்கள் போலீஸ் அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால், நான் உங்கள் மகளுக்குப் போதைப்பொருள் செலுத்தி, மெக்ஸிகோவில் இறக்கிவிடப்போகிறேன்' என்றார். பின்னர் என் மகளை என்னிடம் ஒப்படைக்க ஒரு மில்லியன் டாலர் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றதும் ஒருவழியாக அந்தக் கடத்தல்காரர் 50,000 டாலருக்கு ஒத்துக்கொண்டார்.AI மோசடி அது முழுக்க முழுக்க என் மகளின் குரல்தான். அதனால்தான் ஒரு நொடிகூட யோசிக்காமல் இந்த முடிவுக்கு வந்தேன். பிறகுதான் என்னுடைய மகள் பனிச்சறுக்குப் பயணத்தில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது" என்றார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஜெனிஃபர் டெஸ்டெஃபனோ ஃபேஸ்புக்கில், ``இது போன்ற இக்கட்டான சூழலில் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையைக் கேள்வியாகக் கொண்டுவாருங்கள். அப்போது நீங்கள், AI-யால் மோசடி செய்யப்படுகிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்திருந்தார். இன்னொருபக்கம், இதை யார் செய்தார்கள் என போலீஸ் விசாரணை செய்துவருகிறது.விடுப்புக்காக உடம்பு சரியில்லை என `காதுகுத்த' முடியாது; குரலை வைத்தே ஜலதோஷத்தைக் கண்டறியும் AI!
http://dlvr.it/SmcgRP

அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம்... இந்திய வர்த்தகத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் நாடு எது?

கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் கூறுகிறது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2022-23 நிதியாண்டில் இந்தியா - அமெரிக்க இடையிலான வர்த்தகம் 7.65 சதவீதம் உயர்ந்து 128.55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2021-22 நிதியாண்டில் 119.5 பில்லியன் டாலராகவும், 2020-21 நிதியாண்டில் 80.51 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்க முதலிடம்!நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்... எப்போது? என்ன செய்ய வேண்டும்? 2021-22 நிதியாண்டில் 76.18 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி வர்த்தகம், 2022-23 நிதியாண்டில் 2.81 சதவீதம் உயர்ந்து 78.31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டை விட, இந்த நிதியாண்டில் இறக்குமதி வர்த்தகம் 16 சதவீதம் உயர்ந்து 50.24 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவு வலுபெற்று வருவதால், வரும் ஆண்டுகளிலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம், இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 1.5 சதவீதம் குறைந்து 113.83 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் 28 சதவீதம் குறைந்து 15.32 பில்லியன் டாலராக ஆகியுள்ளது. ஆனால் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி வர்த்தகம் 4.16 சதவீதம் உயர்ந்து 98.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2021-22 நிதியாண்டில் 72.91 பில்லியன் டாலராக இருந்த இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி 83.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.சீனாவுக்கு இரண்டாமிடம்!`வெற்றி வேண்டுமா?' இதை கட்டாயம் செய்ய வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா சொன்ன அந்த சீக்ரெட் என்ன தெரியுமா? 2013-14 நிதியாண்டிலிருந்து 2017-18 நிதியாண்டு வரை மற்றும் 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக சீனா இருந்தது. சீனாவிற்கு முன்பு இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக ஐக்கிய அமீரகம் (யூ.ஏ.இ) இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ஐக்கிய அமீரகம்(76.16 பில்லியன் டாலர்) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் சவுதி அரேபியா(52.72 பில்லியன் டாலர்) நான்காவது இடத்தையும், சிங்கப்பூர்(35.55 பில்லியன் டாலர்) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
http://dlvr.it/SmcCqb

Sunday, 16 April 2023

தில்லி முதல்வா் கேஜரிவாலிடம் சிபிஐ விசாரணை: ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை விசாரணைக்கு அழைத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களும், தொண்டா்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை விசாரணைக்கு அழைத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களும், தொண்டா்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி அமைச்சா்கள் செளரவ் பரத்வாஜ், அதிஷி, கைலாஷ் கெலாட், மாநிலங்களவை உறுப்பினா்கள் சந்தீப் பதக், ராகவ் சத்தா, சஞ்சய் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவா்கள் பலா் சிபிஐ தலைமை அலுவலகம் அருகே கூடினா். தில்லி மெஹ்ரெளலியில் உள்ள எம்பி சாலை, ஐஐடி மேம்பாலம் மற்றும் ஐடிஓ அருகே கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திரண்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் நரேஷ் யாதவ் ( மெஹ்ரெளலி), கா்தாா் சிங் தன்வாா் ( சத்தா்பூா்), பூபிந்தா் சிங் ஜூன் (பிஜ்வாசன்), அமானத்துல்லா கான் (ஓக்லா) உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டனா். ஆா்ச் பிஷப் சாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஐஐடி மேம்பாலத்தின் கீழ் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற எம்எல்ஏ சோம்நாத் பாா்தி கூறுகையில், ‘ஒரு முதல்வரை சிபிஐ விசாரணைக்கு அழைப்பது இதுவே முதல்முறையாகும். அவா்களிடம் எங்கள் தலைவா்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. நாட்டின் வளா்ச்சிக்காக எப்போதும் பாடுபட்ட கேஜரிவாலை பயமுறுத்த மத்திய அரசு சிபிஐயை தவறாக பயன்படுத்தி வருகிறது’ என்றாா்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Pa13EVc https://ift.tt/3NCbgWu
via IFTTT

அமெரிக்கா: சிறைக் கைதியை உயிருடன் தின்றனவா மூட்டைப்பூச்சிகள்? - அதிர்ச்சியைக் கிளப்பிய மரண விவகாரம்

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஃபுல்டன் கவுன்ட்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பரிசோதனைகளுக்குப் பின்னர் தெரியவர, அவர் மனநலப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 13, 2022 அன்று, தாம்சன் தனது சிறை அறையில் நினைவிழந்த நிலையில் எந்தவித சலனமும் இன்றி கிடந்திருக்கிறார். உடனே அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தாம்சனின் வழக்கறிஞர், ``மூட்டைப்பூச்சிகள் அவரை உயிருடன் தின்றதால்தான், அவர் இறந்துவிட்டார்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். அதோடு அவருடைய குடும்பத்தினர் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்தச் சிறையை மூடிவிட்டு, தரமானதாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மரணம் இது குறித்து தாம்சன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் மைக்கேல் டி.ஹார்பர் ஊடகங்களிடம் பேசுகையில், "தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை சுகாதாரமற்று மூட்டைப்பூச்சிகள் நிறைந்திருந்தன. அவரை மூட்டைப் பூச்சிகள் உயிருடன் தின்றிருக்கின்றன. அவருக்கு இத்தகைய கொடூரமான சாவு நிகழ்ந்திருக்கக் கூடாது. அவர் சலனமற்று கிடந்தபோது, சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்க சிறை அதிகாரி ஒருவர் முதலில் மறுத்தார். அவருடைய சாவுக்கு சிறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். யாரேனும் ஒருவர் கண்டிப்பாக பதில் கூற வேண்டும். மேலும் தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த அறை எவ்வளவு சுகாதாரமின்றி அழுக்கு நிறைந்ததாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. அவரின் உடலும் மிகவும் அழுக்காக இருந்தது" என்றும் கூறியிருக்கிறார். மேலும், தாம்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்படி, அவரின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை. ஆனால். கடுமையான மூட்டைப் பூச்சி தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனினும் அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இது தொடர்பாக ஃபுல்டன் கவுன்ட்டி ஷெரஃப் அலுவலகம் அளித்த அறிக்கையில், ``தாம்சனின் மரணம் குறித்து முழு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. மூட்டைப்பூச்சிகள், பேன்கள், பிற பூச்சிகளின் தொல்லைகளைத் தீர்க்க 5,00,000 டாலர் பயன்படுத்தி சிறையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சுற்றுகளுக்கான நெறிமுறைகளைப் புதுப்பித்தல் உட்பட சிறையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மேலும், தற்போது இருக்கின்ற சிறையின் பாழடைந்த நிலையை மாற்றி அதைப் புதுப்பித்து, மேம்படுத்தி, சுகாதாரமான முறையில் மாற்றும் எங்கள் இலக்குக்கான பயணம் மிகவும் எளிதானது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமே. தற்போது தாம்சனுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் வேறு ஏதேனும் கிரிமினல் குற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்ற பாணியிலும் விசாரணை நடத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து கென்டக்கி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் மைக்கேல் பாட்டர் பிபிசி-யிடம், ``பொதுவாக மூட்டைப்பூச்சிகள் மரணத்தை உருவாக்கும் அளவுக்குக் கொடியது அல்ல. ஆனால், சில அரிதான சந்தர்ப்பங்களில், நீண்டகாலமாக அதிகமான மூட்டைப்பூச்சிகளின் தொல்லைக்கு ஆளானால், அது கடுமையான ரத்த சோகையை ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தானது. ஏனெனில் இந்த மூட்டைப்பூச்சிகள் ரத்தத்தை உண்கின்றன" என்று கூறியிருக்கிறார்.அமெரிக்கா: பண்ணையில் தீ; 18,000 மாடுகள் பரிதாபமாக பலியான சோகம்!
http://dlvr.it/SmYzP1

Saturday, 15 April 2023

பிரான்ஸ்: அரசு ஊழியர்களின் ஓய்வு  வயது 64ஆக உயர்வு

பிரெஞ்சு செனட்டர்கள் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.   பிரான்ஸ்: பிரெஞ்சு செனட்டர்கள் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இது அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதனால் நாடு முழுவதும் எதிர்ப்புகளையும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கன்சர்வேட்டிவ் லெஸ் ரிபப்ளிக்கைன்ஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தும் செனட்டின் 201 உறுப்பினர்கள், ஓய்வு பெறும் வயது குறித்த சீர்திருத்தத்தின் முக்கிய பிரிவு 7க்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே நேரத்தில் 115 பேர் அதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். சீர்திருத்த மசோதாவின் மீதமுள்ள பிரிவுகளுக்கு பிரெஞ்சு மேலவை இந்த வார இறுதியில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இம்மாத இறுதிக்குள் ஓய்வூதிய மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசு நம்புவதாக தெரிகிறது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Bu5NPL8 https://ift.tt/PgJ4QU8
via IFTTT

கருணைக் கொலைக்கு அனுமதித்த நெதர்லாந்து| 500 நாள்கள் குகைக்குள் தனியாக வாழ்ந்த பெண் - உலகச் செய்திகள்

கிழக்கு உக்ரைனிலுள்ள ஸ்லோவியன்ஸ்க் (Sloviansk) பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் படுகாயமடைந்தனர். குடியிருப்புக் கட்டடங்கள்மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.போல்சனேரோ பிரேசில் அதிபர் மாளிகைமீது முன்னாள் அதிபர் போல்சனரோவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கில், அவர் நேரில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என பிரேசில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.போதை போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருளை உற்பத்தி செய்யும் மிகவும் மேம்பட்ட, சர்வதேச வசதியில் அமைந்திருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆய்வகம் ஸ்பெயின் காவல்துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு, அரசர் மூன்றாம் சார்லஸ் மீது ஐந்து முட்டைகளை எறிந்த வழக்கில், 23 வயது மாணவர் பாட்ரிக் தெல்வெல் (Patrick Thelwell) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாக அறியப்பட்ட டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான 111 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரை நினைவுகூரும் விதமாகவும், கடல் பயணத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. நெதர்லாந்து அரசு 12 வயதுக்குட்பட்ட தாங்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிழைப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகயிருக்கும் குழந்தைகளைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) என்ற ராக்கெட்டைத் திங்களன்று சோதனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ராக்கெட், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மைக் பாம்பியோ அறிவித்திருக்கிறார். ட்ரம்ப்பின் ஆதரவாளரான இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பிரான்சில் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசின் முடிவுக்கு மக்கள் போராடிவரும் நிலையில், அரசின் முடிவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீரரான பியாட்ரிஸ் ஃப்லமினி (Beatriz Flamini) என்பவர் 500 நாள்கள், 70 மீட்டர் ஆழமான குகையில் மனிதர்களைப் பார்க்காமல் தனியாக வசித்த பின்னர், மீண்டும் வெளியே வந்திருக்கிறார்.
http://dlvr.it/SmXDvm

இலங்கைத் தீவில் மட்டுமே வசிக்கும் செங்குரங்குகள்: சீனாவுக்கு லட்சக்கணக்கில் ஏற்றுமதி! பின்னணி என்ன?

சீனாவில் சுமார் 1000 விலங்கியல் பூங்காக்ககள் உள்ளன. சீனாவிலுள்ள இந்த விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கை தீவில் மட்டுமே வாழக்கூடிய செங்குரங்குகளை வழங்குமாறு இலங்கை அரசிடம் கேட்டுள்ளது சீனா. இதற்கு இலங்கை அரசு மனமுவந்து சம்மதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பிரதிநிதிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் மூன்று முறை  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடைசியாக ஏப்ரல் 11 அன்று இலங்கை விவசாய அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், முதல்கட்டமாக ஒரு லட்சம் செங்குரங்குகளை சீனாவிற்கு அனுப்ப உள்ளனர்.மஹிந்த அமரவீரஇந்தப் பூச்சி கடித்தால் தொடர்ச்சியாகத் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்; காடுகளைக் காக்கும் பூச்சிகள்..! இதுகுறித்து இலங்கை இலங்கை வேளாண்மைத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில்,  ``இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 30 லட்சம் குரங்குகள் உள்ளன. இலங்கையில் உள்ள விவசாய விளை நிலங்களில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே சுமார் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் சேதப்படுத்தியுள்ளது. மேலும் மற்ற பயிர் வகைகளையும் குரங்குகள்  சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் சீனாவும் இலங்கை குரங்குகளை கேட்டது. இதையடுத்தே, குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குரங்கை பிடிப்பது, அந்த குரங்குகளை தனிமைப்படுத்தி, நோய்கள் உள்ளதா என்று சோதனை செய்வது, அதன் பின்னர் கூண்டுகளில் அடைத்து சீனாவிற்கு கொண்டு செல்வது என அனைத்து செலவுகளையும் சீனாவே ஏற்றுக் கொள்ள இருக்கிறது. இப்படி ஒரு குரங்கை கொண்டு செல்வதற்கு இலங்கை மதிப்பில் சுமார் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை சீனா செலவிடும்" என்று தெரிவித்தார்.குரங்குஇதயம் கனத்துப்போகும்... ரோமியோ ஜூலியட் மாதிரி பறவைகளின் தனித்துவமான காதல் கதை இது! இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. " ஒரு பெரிய கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலங்கை செலுத்த வேண்டிய தொகையை குறைக்க சீனா முன்வந்துள்ள நிலையில், விஞ்ஞான பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்காக குரங்குகளை கேட்கிறதா சீனா? பூங்காவுக்கு குரங்குகளை வாங்க இவ்வளவு பணம் செலவு செய்யுமா சீனா.. அவ்வளவு நல்லவனா? என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ``இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளையோ அல்லது விலங்கின் பகுதிகளையே ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. சீனா உண்மையில் எதற்காக, என்ன நோக்கத்திற்காக கேட்கிறது? முதல் கட்டமாக ஒரு லட்சம் குரங்குகள் என்றால் மொத்தம் எத்தனை முறை எவ்வளவு குரங்குகளை கேட்கிறார்கள் என்பதை அரசு அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும்" என்று சூழல் ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில், ``இறைச்சிக்காக குரங்குகளை இவ்வளவு செலவு செய்து வாங்க மாட்டார்கள் சீனர்கள். எனவே இறைச்சிக்கு பயன்படுத்த மாட்டார்கள்.  விலங்கியல் பூங்காக்களுக்குத்தான் செல்கிறது" என்று தெரிவித்தார். அரசின் நடவடிக்கை திருப்தி இல்லாத நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் இப்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், செங்குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இதற்கு சட்டரீதியாக தீர்வு காணவும் குழு ஒன்றை அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார். காடுகள், சூழல், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வுகள் செய்து தொடர்ந்து எழுதியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியும் வருபவர் டாக்டர் மணிவண்ணன். அவரிடம் இதுகுறித்து கேட்டோம், அவர் கூறுகையில், ``முகத்தில் அழகிய சிவப்பு நிறத்துடன் தோன்றும் இந்த குரங்குகள் நம்ம ஊர் குரங்குகள் [Bonnet Macaque] போல் தோற்றமளித்தாலும் முகத்தில் இதன் சிகப்பு தன்மையும், தலையில் தொப்பி போன்ற முடி அமைப்பு இருப்பதாலும்  நமது இந்திய குரங்கிலிருந்து சற்று மாறுபட்டு காணப்படும். இந்த செங்குரங்குகள் இலங்கைத் தீவில் மட்டுமே வசிக்கின்றன, உலகில் வேறு எங்கும் இவை கிடையாது.டாக்டர் மணிவண்ணன்பசுமை பயணத்தில் கவனிக்க வேண்டியவை... வியக்க வைத்த பறவைகள், விலங்குகள், பூர்வகுடிகள்! நம்ம ஊரில் உள்ள சிங்கவால் குரங்குகள் தனி இனம், தென்னிந்திய மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மட்டுமே வசிக்கும் இவை உலகில் வேறு எங்கும் கிடையாது, அது போல, இந்த செங்குரங்குகள் இலங்கை தீவில் மட்டுமே வசிக்கின்றன. 1948 -ல் உலகளாவிய IUCN [ The International Union for Conservation of Nature] என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன்படி காட்டுயிர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. •Extinct (EX) – அழிந்துவிட்ட இனம் •Extinct in the wild (EW) – மிருகக்காட்சி சாலையில் அல்லது வளர்ப்பு மிருகங்களாக மட்டுமே உள்ளவை. •Critically endangered (CR) – அழிவின் விளிம்பில், காட்டில் ஓரிரண்டு எஞ்சியிருக்கும்  விலங்குகள் •Endangered (EN) – அழியும் ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள். •Vulnerable (VU) – எதிர்கால ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள் . •Near threatened (NT) – தற்போது நல்ல நிலையில் இருக்கிறது, எதிர்காலத்தில்  ஆபத்துக்கு செல்லலாம். •Least concern (LC) – நிறைய உள்ளது, ஆபத்து இல்லை.  தனி இனமான இவை IUCN பட்டியல் படி Endangered (EN) -ல் வருகிறது அதாவது பாதுகாக்கப்பட வேண்டிய அழியும் ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள் என்ற பட்டியலில் வருகிறது. இலங்கை தீவில் நகரமயமாக்கல் மற்றும் காடுகள் தேயிலை, காப்பி தோட்டங்களாக மாற்றம் மற்றும் இயற்கையான மரங்களை அகற்றி வணிக மரங்கள் நடப்படுதல் போன்றவைகளால் வன உயிரினங்களுக்கு வாழ்விடச் சிக்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த குரங்குகளை வேட்டையாடும் வன உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைவதால் குரங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது. இலங்கை தீவில் மூன்று மில்லியன் அளவில் இந்த குரங்குகள் உள்ளதாக அரசு தெரிவிக்கிறது, ஆனால் முறையான கணக்கெடுப்பு இல்லை, அதை உடனே மேற்கொள்ள வேண்டும் என இலங்கையில் உள்ள  இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.செங்குரங்கு தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் சிகிச்சை: அதிகரிக்கும் சம்பவங்கள்... ஏன்?; தீர்வு என்ன? மக்கள் பௌத்த ஆலயங்கள், கோவில்களுக்கு செல்லும்போது குரங்குகளுக்கு உணவு தருவது கடவுளுக்கு உணவு தருவது மாதிரி, பெரும் புண்ணியம் என நினைத்து உணவுகளை வாரி வழங்குவதால் அவை காட்டுப் பகுதிக்கு செல்லாமல், ருசி மிகுந்த மனிதனின் உணவையே நாடுகிறது. நாட்கள் செல்ல செல்ல செயற்கை உணவுக்கு அவை பழகி விடுவதால் இயற்கை உணவை தேடும் திறனை குரங்குகள் இழந்து விடுகின்றன. இதனால் மனிதன் வாழும் பகுதியை விட்டு அவை செல்ல மறுத்து மனிதனிடமிருந்து உணவை தட்டிப் பறக்கிறது, இதனால் மனித விலங்கு மோதலும் அதிகரிக்கிறது. விவசாய பூமியில் விவசாயத்தை இந்த குரங்குகள் சேதம் செய்வதால்  மனிதனின் விவசாய வருமானமும் குறைந்து விடுகிறது. இப்படி பல காரணங்களால் குரங்குகள்  மனிதனுக்கு தொல்லை தரும் விலங்காகவே மாறிவிட்டது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை யாராவது ஒரு மீட்பர் வந்து தனது நாட்டை மீட்டு விட  மாட்டாரா என பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளுக்கு வலை விரித்து இருக்கிறது உலகின் மிகப்பெரிய பொருளாதார மீட்பரான  சீனா. இந்த குரங்குகள் ஏற்றுமதியானால் இலங்கையின் குரங்குகள் எண்ணிக்கை குறையும் அது மறுப்பதற்கு இல்லை. ஆனால்  இலங்கையின் உயிர் சமநிலை தன்மை [Ecosystem Diversity]  மாறும் இதை உணர்ந்து கொள்ள இலங்கைக்கு பல வருடங்கள் ஆகும். உலகில் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஒவ்வொரு விலங்குக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அங்குள்ள நோய்களுக்கு  ஏற்றார் போல் அமைந்திருக்கும். இலங்கையில் இருந்து  ஏற்றுமதி[?] செய்யப்படும் குரங்கிலிருந்து புதிய நோய்கள் சீனாவில்  உள்ள விலங்குகளுக்கு ஏற்படலாம், அந்த விலங்குகள் இந்த நோய் எதிர்ப்பு தன்மையை பெற்றிருக்காமல் போனால் சீனாவில்  உள்ள விலங்குகள் இதனால் பாதிப்படையும், ஏனெனில் இந்த குரங்குகள் அனைத்தும் சீனாவில்  உள்ள மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சீனா சொல்லி இருக்கிறது.இலங்கை சிங்கங்களும் புலிகளும் ஒரே நாட்டில்... சிலிர்க்க வைக்கும் வனங்களின் வரலாறு..! ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இங்கு நான் குறிப்பிடுகிறேன். 1887 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதும் கால் பதித்திருந்த பிரித்தானிய காலனி ஆதிக்கம்,  இத்தாலியிலிருந்து தனது தேவைக்காக அதிகம் பால் தரும் மாடுகளை இறக்குமதி செய்தது. அந்த இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளில் இருந்து விலங்குகளுக்கு ஏற்படும் பிளேக் நோய் (RINDERPEST) எனும் வைரஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் பரவியது. ஏறக்குறைய கொரனோ (Corona) மாதிரி!, இந்த நோயால் ஆப்பிரிக்க மக்கள் வளர்த்து வந்த 90 சதவீத கால்நடைகள் இறந்தன. ஏனெனில் அங்குள்ள கால்நடைகள் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கவில்லை.  இதனால் நிலத்தை உழவு செய்ய, பால் மற்றும் மாமிசம் தர கால்நடைகள் இல்லாமல் போயின. விவசாயம் இல்லாததால் வறுமையும் பஞ்சமும் (Famine) ஆப்பிரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடியது. ஆனால் எவ்வளவு நடந்தாலும் வரலாற்றிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்வதில்லை. உலகெங்கும் சக மனிதனையே அகதியாக ஏற்றுமதி செய்யும் இலங்கை  நாட்டுக்கு இந்த குரங்கு ஏற்றுமதி பெரிய விஷயம் இல்லை. ஆனால் உயிர் சமநிலை இலங்கை நாட்டிலும், நோயால் சீன விலங்குகள் பாதிக்கப்படும் போது இதை இந்த நாடுகள் உணர்ந்து உணர்ந்து கொள்ளுமா?  தெரியவில்லை . உலகெங்கும் வன உயிரினங்கள் கடத்தல், சட்டத்திற்கு புறம்பான மிகப் பெரிய மோசமான தொழில். ஆனால் அந்த தொழிலை அரசாங்கங்கள் செய்யும் போது அது சட்டத்திற்கு உட்பட்டதா ??? என்பதை நீங்களே சொல்லுங்கள்” என்றார்.
http://dlvr.it/SmWxLT

அம்மாவை பற்றி புகார் கூற பயணம்; 130 கி.மீ சைக்ளிங் செய்து பாட்டி வீட்டுக்குச் சென்ற சிறுவன்!

பொதுவாகப் பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கும்போதோ திட்டும்போதோ, அவர்களைவிடப் பெரியவர்களிடம் குழந்தைகள் போய் தஞ்சமடைவதுண்டு. அவர்களும் `விடு... குழந்தைதானே' என, அடிக்க வரும் பெற்றோரைச் சமாளிப்பதுண்டு. இந்த வேலையை அதிகம் செய்வது தாத்தாவும் பாட்டியுமாகத்தான் இருக்கும்.  இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன், 24 மணிநேரமாகத் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி 130 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இவ்வளவு வேகம், இவ்வளவு கோவம் வேறெதற்கும் இல்லை, அம்மாவுக்கும் தனக்கும் நடந்த சண்டை குறித்து, தன் பாட்டியிடம் புகார் கூறத்தான். cycle இவ்வளவு தூரம் தொடர்ந்து பயணித்ததால், சிறுவன் சோர்வடைந்திருக்கிறார். எக்ஸ்பிரஸ்வே டன்னலில் சிலர் சிறுவனின் நிலையைக் கண்டு, காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். உடனே காவல் துறையினர் அங்கு வந்து சிறுவனை மீட்டு காரணத்தை விசாரித்து இருக்கின்றனர். சிறுவன் அவர்களிடம், `அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வந்தது. அப்செட்டாக இருக்கிறது. அதனால் மெய்ஜியாங்கில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு அம்மாவைப் பற்றி புகார் கூறக் கிளம்பிவிட்டேன்' எனக் கூறியிருக்கிறார்.  சாலை சிக்னல்களை அடையாளமாக வைத்து சைக்கிளில் பயணித்திருக்கிறார். சில தவறான டர்ன்களில் திரும்பி வழி மாறியிருக்கிறார். இதனால் சென்ற இடத்துக்கே இரண்டு முறை செல்வது போலாகியிருக்கிறது. எனினும் ஒரு மணி நேரம் தாமதமானாலும் தன்னுடைய இலக்கை அடைந்திருக்கிறார். இரவு நேரப் பயணங்களில் தன்னுடன் கொண்டு சென்ற பிரட் மற்றும் தண்ணீரைப் பருகியிருக்கிறார். பிரட்!பாட்டி அரைத்த மருதாணி! | My Vikatan நீண்ட தூரம் பயணித்ததால் சிறுவனால் நடக்க முடியவில்லை. காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுவன், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.  தகவல் அறிந்த பின் சிறுவனின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர், காவல் நிலையத்துக்குச் சென்று சிறுவனை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.  அம்மாவைப் பற்றி புகார் அளிக்க 130 கி.மீ வரை சிறுவன் பயணித்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
http://dlvr.it/SmWdXB

Friday, 14 April 2023

வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய எதிா்க்கட்சிகள் திட்டம்

மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து செயல்பட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து செயல்பட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தோ்தலுக்கு ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே உள்ளது. தோ்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என அனைத்து எதிா்க்கட்சிகளும் விரும்பினாலும், காங்கிரஸை கூட்டணியில் இணைத்துக் கொள்வதில் எதிா்க்கட்சிகள் மத்தியில் இருவேறு கருத்து நிலவுகிறது. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி ஆகியவை காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க தனித்தனியாக முயற்சித்து வருகின்றன. சமாஜவாதி கட்சி தனது தெளிவான நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், அண்மையில் சாவா்க்கா் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து காரணமாக இரு கட்சிகள் இடையே கசப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோரை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் சந்தித்துப் பேசினா். தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு ஒன்றிணையும்போது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது தொடா்பாகவும் காா்கே விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவான இலக்குகளைக் கொண்டு தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சரத் பவாா், மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங், சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோபால் யாதவ் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைக்கவும், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய எதிா்க்கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான பொறுப்பை அந்தக் குழுவிடம் ஒப்படைப்பது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Bu5NPL8 https://ift.tt/OYxCWK3
via IFTTT

தெலங்கானாவில் 125 அடி உயர அம்பேத்கா் சிலை திறப்பு

அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளையொட்டி ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ள அவரின் 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளையொட்டி ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ள அவரின் 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த அம்பேத்கா், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பல்வேறு சமூக சீா்திருத்தங்களுக்குப் பாடுபட்டாா். அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூரவும், அரசு நிா்வாகத்தை ஊக்கபடுத்தவும் அவரின் மாபெரும் சிலை, தலைமைச் செயலகத்துக்கு அருகில் அமைக்கப்படும் என தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் அறிவித்திருந்தாா். அதன்படி, ரூ. 146.5 கோடி செலவில் 360 டன் இரும்பு மற்றும் 114 டன் வெண்கலம் கொண்டு அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாநில முதல்வா் கே. சந்திரசேகா் ராவ், அம்பேத்கா் சிலையைத் திறந்து வைத்தாா். பின்னா், ஹெலிகாப்டரில் இருந்து அம்பேத்கா் சிலை மீது மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, விழாவில் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் பேசுகையில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் நோக்கில் அவா்கள் தொழில் தொடங்க அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கும் திட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் பாரத ராஷ்டிர சமிதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேற்கு வங்கம், பிகாா் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற வரவேற்பை எதிா்பாா்க்கிறோம். வரும் மக்களவைத் தோ்தலில் அமையவுள்ள ஆட்சி நம்முடைய ஆட்சியாக மட்டுமே இருக்கும். லட்சியத்துக்கு ஒளியேற்ற சிறு பொறி போதும்’ என்றாா்.      

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Bu5NPL8 https://ift.tt/ELMRdt1
via IFTTT

பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து: 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் பலி! - அமெரிக்காவில் சோகம்!

அமெரிக்காவின் தெற்கு மாநிலமான டெக்சாஸில் உள்ள பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சுமார் 18,000 பசுக்கள்  இறந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். பண்ணையில் சிக்கியிருந்த ஒரு  பணியாளரைத் தீவிர போராட்டத்துக்குப்பிறகு மீட்டு  லுபாக் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ``பண்ணையில் அதிகளவு எருவை சேமித்து வைத்திருந்திருக்கலாம். அதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இந்த சோகத்திற்கான காரணம் மற்றும் உண்மைகளை அறிந்தவுடன், பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படும். அதன்மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்கலாம்.” என தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். பண்ணையில் பயங்கர தீ விபத்து மாட்டு சாணத்தை உறுஞ்சும் இயந்திரத்தில் வெளியான அதிக வெப்பம் காரணமாக, பண்ணையில் இருந்த மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. டெக்ஸாஸ் விவசாய ஆணையர்  சிட் மில்லர் அறிக்கையில்," டெக்ஸாஸ் வரலாற்றில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கொடிய தீ விபத்து இதுவாகும், விசாரணை செய்வதற்கும் மற்றும் அந்தப் பகுதியைச் சுத்தம்  செய்வதற்குச் சிறிது காலம் ஆகலாம்" என்று  தெரிவித்தார்.ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: பதறிய ஜப்பான் மக்கள்; கண்டனம் தெரிவித்த அமெரிக்கா!
http://dlvr.it/SmTf7Z

நாட்டிலேயே உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு

நாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார். நாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார்.  நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 133 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார்.  தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஹூசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடாளுமன்ற கட்டடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11.4 ஏக்கரில் ரூ.146.5 கோடியில் 360 டன் ஸ்டென்யின்லஸ் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலையை வடிவமைத்தவர் 98 வயதான ராம் வஞ்சி என்ற சிற்பி ஆவார். இவர்தான் குஜராத்தில் வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயர ஒற்றுமை சிலையையும் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/dqHUxn8 https://ift.tt/nmIksU8
via IFTTT

Thursday, 13 April 2023

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. பவுன் ரூ.45,760-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையானது.   சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையானது. சா்வதேச பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரலில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் விலை ஏப்.5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் தங்கத்தின் விலை குறைந்தது. இந்நிலையில், மூன்று நாள்கள் குறைந்து வந்த தங்கத்தின் விலை, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிகரிக்க தொடங்கியது. இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை பவுன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாள்கள் அதிகரித்து வந்த தங்கம், வியாழக்கிழமை சற்று குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கும் பவுனுக்கு ரூ.32 குறைந்து 45,408-க்கும் விற்பனை ஆனது. 24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,124-க்கும் பவுன் ரூ.48,992-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.81,800-க்கும் விற்பனையாகியது. அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை... வியாழக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலை, இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,720-க்கும், பவுன் ரூ.45,760-க்கும் விற்பனையாகிறது.   

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/dqHUxn8 https://ift.tt/7cQHgXy
via IFTTT

மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக சிறப்பு இணைப்பு வாகன வசதி

மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம்முதல் 2.50 லட்சம் போ் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து (ரேபிடோ), பெண்கள் இயக்கும் இணைப்பு வாகன வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி கூறியதாவது: மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகிறோம். மேலும், குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பெண்கள் நீண்ட தூரம் நடக்கும் சூழல் ஏற்படுவதால், அவா்களுக்கு வசதியாக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ரயில் நிலையங்களில்: பெண்களால், இயக்கப்படும் இந்த இருசக்கர வாகன வசதியை, முதல்கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூா், சைதாப்பேட்டை, அரசினா் தோட்டம் என 5 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இவ்வசதி விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றாா் அவா். சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இந்த இணைப்பு வாகன வசதியை அவா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையும் படிக்க: அம்பேத்கா் பிறந்தநாள் இன்று அரசு விடுமுறை நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன கூடுதல் பொது மேலாளா் எஸ்.சதீஷ் பிரபு, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/dqHUxn8 https://ift.tt/4Wkrip7
via IFTTT

சா்வதேச பொருளாதார, அரசியல் சூழல்: இந்தியா கவலை: நிா்மலா சீதாராமன்

சா்வதேச பொருளாதார, அரசியல் சூழல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.   வாஷிங்டன்: சா்வதேச பொருளாதார, அரசியல் சூழல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: சா்வதேச அளவில் பொருள்களின் விநியோகத்தில் எழுந்துள்ள சிக்கல்கள் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகித உயா்வு, பணவீக்கம் அதிகரிப்பு, பண மதிப்பு சரிவு உள்ளிட்டவை சிக்கலை மேலும் அதிகரிப்பவையாக உள்ளன. சமீப காலத்தில் வளா்ந்த நாடுகளின் வங்கித் துறையில் ஏற்பட்ட (அமெரிக்க வங்கிகள் திவால் ஆனது) பெரும் பிரச்னைகள் பொருளாதார சவால்களை மேலும் அதிகரித்துள்ளன. சா்வதேச அளவில் உணவுப் பொருள்கள், எரிபொருள், உரம் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. இது எளிய மக்களை அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக வளரும் நாடுகள் இப்பிரச்னையை அதிகம் எதிா்கொண்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், சா்வதேச பொருளாதார, அரசியல் சூழல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இப்போதைய நிலையில் சா்வதேச அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பொருளாதார சவால்களை எதிா்கொள்ள வேண்டும். சாதகமான தொழில் சூழல், தொழிலக உற்பத்தி அதிகரிப்பு, கரோனாவில் இருந்து வேகமாக விடுபட்டது, குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியது ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது. வேளாண்மை மற்றும் தொழிலாளா் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் வளா்ச்சியை ஊக்குவித்தது. எரிசக்தி தேவைக்கு வெளிநாடுகளை அதிகம் சாா்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக சூரிய மின் உற்பத்தி, மின் வாகனப் பயன்பாடு ஆகியவை வெகுவாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/dqHUxn8 https://ift.tt/sobqw0d
via IFTTT

நேர்காணலில் பிபிசி நிருபரைச் சாடிய மஸ்க் | சீனாவுக்குச் சென்ற பிரேசில் அதிபர் லூலா - உலகச் செய்திகள்

வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இதையடுத்து, அந்த ஏவுகணை ஜப்பானின் எல்லைக்குள் வரவில்லை என்பதை ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெளிவுபடுத்தியிருக்கிறார். ஜனவரி மாதத்தில் சுமார் 12,000 ஊழியர்களைப் பணியிலிருந்து கூகுள் நீக்கியதையடுத்து, மேலும் அடுத்தகட்ட பணிநீக்கத்தை கூகுள் விரைவில் அறிவிக்கலாம் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் (The Wall Street Journal) ஒரு நேர்காணலில் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் பிபிசி-யுடனான ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது நிருபர், ட்விட்டரில் அதிகரித்துவரும் வெறுப்புக் கருத்துகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பினார். இது தொடர்பான விவாதத்தின்போது பிபிசி நிருபரை, எலான் மஸ்க் கடுமையாகச் சாடியிருக்கிறார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Qin Gang, உஸ்பெகிஸ்தானில் சீனா பொருளாதாரரீதியாக முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தினார். மேலும், அந்த நாட்டிலிருந்து தரமுள்ள பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதாக அவர் கூறினார். ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் புதிதாகப் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு கண்டறிந்திருக்கிறது. இது குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டிருக்கிறது.ஜி-7 நாடுகள் ஜி 7 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக நிதியமைப்பின் பொருளாதாரத்தைப் பராமரிக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆர்-21 எனப்படும் புதிய மலேரியா தடுப்பூசியை கானா (Ghana) நாடு அங்கீகரித்தது. இந்த வகை தடுப்பூசியைப் பரிசோதனை செய்து முடித்து, அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். பிரேசில் அதிபர் லூலா சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். இது இரண்டு நாடுகளுக்கிடையே உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியின் கலாசார அமைச்சர் ஜென்னாரோ சாங்கியுலியானோ (Gennaro Sangiuliano), அந்த நாட்டிலுள்ள நினைவுச் சின்னங்களையோ, கலாசார தளங்களையோ சேதப்படுத்துவோரிடம் அபராதமாகக் குறைந்தபட்சம் 10,000 யூரோ வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SmRFWS

ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: பதறிய ஜப்பான் மக்கள்; கண்டனம் தெரிவித்த அமெரிக்கா!

`அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்க நாட்டின் ராணுவத்தையும், போர் ஆயுதங்களையும் வலுப்படுத்த  வேண்டும்’ என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கொரியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில், வடகொரியா இன்று காலை  8 மணியளவில் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனையை மேற்கொண்டது.வடகொரியா இந்தச் சோதனை தொடர்பான தகவல்கள் வெளியானதுடன் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு, ஹொக்கைடோ (Hokkaido) பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள்... வெளியேறுங்கள் எனக் கூறியிருக்கிறது. பொதுமக்கள் கட்டடத்துக்கு அடியிலோ அல்லது நிலத்துக்கு அடியிலோ சென்று மறைவாக இருந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்தியது. தென்கொரிய மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது. இதனால் ஹொக்கைடோ மக்களிடம் குழப்பம் நிலவியது. ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்கக்கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. ராஜதந்திரத்தின் கதவு மூடப்படவில்லை. எனவே, உடனடியாக உங்களின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது. தென்கொரிய ராணுவ அதிகாரி, ``சமீபத்தில் வடகொரிய ராணுவ அணிவகுப்புகளில் காட்டப்பட்ட ஒரு புதிய ஆயுத அமைப்பை இந்தச் சோதனை உள்ளடக்கியதாகத் தெரிகிறது.ஏவுகணை ஏவுகணையின் பாதை, வரம்பை ராணுவம் ஆய்வுசெய்து வருகிறது. மேலும், இது திட எரிபொருள் ஏவுகணையாக இருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோர காவல் படை, "வடகொரியா ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே இருக்கும் கடலில் விழுந்திருக்கக்கூடும். இது குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.'அமெரிக்கா - தென்கொரியா போர் ஒத்திகை' - ஏவுகணையை ஏவிய வடகொரியா; என்னதான் நடக்கிறது?!
http://dlvr.it/SmQlVg

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம்... தென்கொரியா அறிவித்த சலுகைக்கு காரணம் என்ன?

உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ள தென் கொரியாவில், குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். தென் கொரியா, உலகளவில் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில், அந்த நாட்டில் ஒரு பெண்ணின் சராசரி குழந்தை எண்ணிக்கையானது, 0.78 ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டின் விகிதமான 0.81 என்பதைவிட குறைவாகும். பொதுவாக, மக்கள் தொகையை நிலையானதாக வைத்திருக்கத் தேவைப்படும் பிறப்பு எண்ணிக்கை விகிதம் 2.1 ஆகும்.South Korea கடினமான பணிச்சூழல், நிலையான வேலைவாய்ப்பு இல்லாதது, முறையான வீட்டுவசதியின்மை, கல்விச் செலவுகள் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவை, மக்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் காரணிகள்; அவற்றைத் தடுக்க உரிய வழிமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டுமென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். இதையடுத்து, குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, கடந்த சில ஆண்டுகளாகவே தென் கொரிய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைபெறும் தாய்மார்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகளை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மேலும் சில அறிவிப்புகளை தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதிஉதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பின்படி , ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ. 62 ஆயிரமும் (ஒரு மில்லியன் வோன்), இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ. 31 ஆயிரமும் (500,000 வோன்) நிதி உதவியாக, வரும் 2024-ம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இது 2022-ம் ஆண்டில் முறையே ரூ. 43 ஆயிரம் மற்றும் ரூ. 21 ஆயிரம் என்று இருந்தது.Baby (Representational Image)`பிறப்பு விகிதம் அதிகரிக்க ரூ.42,000 கூடுதலாக வழங்கப்படும்' - ஜப்பானிய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுதவிர, கல்வி நிதிச்சுமையைக் குறைக்கவும் அரசு நிதி உதவிகளை வழங்குகிறது. அதன்படி, ஆரம்பப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கான மருத்துவச் செலவினங்கள், குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவுகள், குழந்தை காப்பகச் சேவைகள் உள்ளிட்டவற்றையும் தென் கொரிய அரசே வழங்கும். இதனிடையே, குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீட்டு வேலைச்சுமையைக் குறைக்க வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை குறைந்தபட்ச ஊதியத்திற்கு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற யோசனைகளை தென் கொரிய அரசியல்வாதிகள் முன்வைத்துள்ளனர்.
http://dlvr.it/SmQHYm

Wednesday, 12 April 2023

`சீன நிறுவனங்களுடன் அதானி கூட்டு?' - ஹிண்டர்பர்க் டு ராகுல் வரை... சர்ச்சையும் முழுப் பின்னணியும்!

`அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கிறது. என்ன நடக்கிறது... எங்கிருந்து இந்தச் சர்ச்சை தொடங்கியது... அலசுவோம்.அதானி - ஹிண்டன்பர்க் பரபரப்பைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை: அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. அதைத் தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, இரட்டை இலக்க இடத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். குறிப்பாக, அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் என பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, 88 கேள்விகளையும் முன்வைத்தது ஹிண்டன்பர்க். இந்த நிலையில், ஹிண்டன்பர்க் எழுப்பியிருந்த கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளித்த அதானி நிறுவனம், `ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாமீது நடத்தப்பட்ட தாக்குதல்' என சால்சாப்புக் காட்டியது. ``அதானி விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ.க பல்வேறு நாடகங்களை நடத்துகிறது" - காங்கிரஸ் தாக்கு அதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், `தாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனவும் அதிலும் குறிப்பாக, `சீனாவைச் சேர்ந்த சாங் சங் லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்குமிடையே என்ன தொடர்பு?' என எழுப்பிய கேள்விக்கு இதுவரை அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியது. மேலும், `மோசடிகளை மறைக்க தேசியவாதத்துக்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்' என அதானி நிறுவனத்தை விமர்சித்ததோடு, சீன நாட்டவர் சாங் சங் லிங்குக்கும் அதானி குழுமத்துக்குமிடையேயான தொடர்பையும் போட்டுடைத்தது.சாங் சங் லிங் - அதானி குறிப்பாக, ``சாங் சங் லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பிருக்கிறது. அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு மிகவும் நெருக்கமானவர். மொரீஷியஸிலுள்ள க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனத்தை அதானி குழுமத்தின் அதானி பவர் நிறுவனம் சுமார் 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. அந்த நிறுவனத்தை சாங் சுங் லிங்தான் நடத்திவருகிறார். சிங்கப்பூரிலுள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியைத்தான் சாங் சுங் லிங் தனது முகவரியாகக் கொடுத்திருக்கிறார்" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது.அதானி - ஹிண்டன்பர்க் மேலும், ``அதானி குழும நிறுவனம், பி.எம்.சி. புராஜெக்ட்ஸ் (PMC Projects) என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 6,300 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. இந்தப் பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும், சாங் சுங் லிங்கின் மகன்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். அதானி குழுமத்தால் அதிகம் லாபமடைபவர்" என பரபரப்பு கிளப்பியது. அதானி சர்ச்சை: நிபுணர் குழுவை நம்ப முடியாது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைதான் தேவை - காங்கிரஸ்! நாடாளுமன்றத்தில் எழுப்பிய ராகுல் காந்தி: ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய அரசியலையே உலுக்கியெடுத்த நிலையில், `அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்; அதானியின் மிகவும் நெருங்கிய நண்பரான பிரதமர் மோடி ஹிண்டர்பர்க் அறிக்கை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?' என சரமாரியாகக் கேள்வியெழுப்பினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள்(மோடி) வெளிநாட்டுக்குச் சென்றபோது, எத்தனை முறை உங்களை அதானி சந்தித்திருப்பார். வெளிநாடுகளில் நீங்கள் இருந்தபோது, ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்காக எத்தனை முறை அதானி அந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பார். கடந்த 20 ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் உட்பட பா.ஜ.க-வுக்கு கௌதம் அதானி நன்கொடையாக அளித்த பணம் எவ்வளவு?" என்று பிரதமர் மோடியைப் பார்த்து அடுக்கடுக்கான கேள்விகளையெழுப்பினார். மேலும், அதானியுடன் மோடி இருக்கும் புகைப்படத்தை உயர்த்திக்காட்டி, `மோடிக்கும் அதானிக்குமிடையேயான உறவுகள் இது’ என ஆக்ரோஷம் காட்டினார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி குறிப்பாக, ``காஷ்மீர் முதல் குமரி வரை அதானி பற்றிய பேச்சுகள்தான் இந்தியா முழுக்கவும் இருக்கிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என்று எல்லா இடத்திலும் அதானிதான் இருக்கிறார். மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது தொடங்கியது. மோடியுடன் நெருக்கமான நட்பு பாராட்டினார் அதானி. அதன் பின்னர் 2014-ல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பெரிய மேஜிக் நடக்கத் தொடங்கியது. 2014-ல் 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் மொத்த மதிப்பு 140 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதானிக்கு எஸ்.பி.ஐ ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுத்திருக்கிறது. அதானிக்காக விதிகளைக்கூட மாற்றியமைத்தார் பிரதமர் மோடி. விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், அந்த விதியை அதானிக்காக மாற்றினார் மோடி. அதன் பின்னர், அதானி வசம் ஆறு விமான நிலையங்கள் சென்றன. இந்தியாவின் மிகவும் லாபகரமான `மும்பை விமான நிலையம்' கூட அதானிக்குக் கொடுக்கப்பட்டது.’’பிரதமர் மோடியின் பினாமிதான் அதானி!” – போட்டுத்தாக்கும் நாராயணசாமிகோத்தபய - அதானி - மோடி அதானிக்குப் பாதுகாப்புத்துறையிலெல்லாம் அனுபவம் இல்லை. ஆனாலும், அவருக்கு தற்போது பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அதானி ஒருபோதும் டிரோன்களை உருவாக்கியது இல்லை. ஆனால், பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று டிரோன் ஒப்பந்தத்தை அதானிக்காகப் பெற்றுத் தந்திருக்கிறார். அதேபோல, மோடி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார், ஒரு மேஜிக்போல அதானிக்கு முதலீடு கிடைக்கிறது. மோடி பங்களாதேஷ் செல்கிறார், உடனே அங்கு அதானிக்கு என்று 25 ஆண்டுகள் மின்சாரத்துறை ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. 2022-ல், இலங்கை மின்சார வாரியத் தலைவர் இலங்கையிலுள்ள நாடாளுமன்றக் குழுவில் வெளிப்படையாகவே அதானி பற்றி பேசினார். அதானிக்கு காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குமாறு பிரதமர் மோடியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய அதிபர் ராஜபக்சே தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். முடங்கிய நாடாளுமன்றம்: 16 எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி - சூடுபிடிக்கும் அதானி விவகாரம்! இது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அல்ல. இது அதானியின் கொள்கை. ஆனால், இதைத்தான் இந்தியாவின் கொள்கைபோல காட்டிவருகிறார்கள். முன்பு அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தற்போது மோடியின் விமானத்தில் அதானி பயணிக்கிறார்!" எனச் சரமாரியாக விமர்சித்துப் பேசினார் ராகுல்காந்தி. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, அதானி குறித்து அறவே வாய்த்திறக்கமால் தவிர்த்தார். வயநாட்டில் ராகுல் காந்தி `அதானி குறித்த கேள்வியால் பதவிநீக்கம்' - ராகுல் காந்தி அந்த நிலையில், பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குஜராத்தின் சூரத் நீதிமன்றம். அதன் விளைவால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் மோடிக்கும் அதானிக்குமிடையேயுள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். எனது கேள்விகளைத் திசை திருப்பவே தகுதிநீக்கம் மற்றும் சிறைத் தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இது குறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார். மேலும், ``என்னை இன்னும் இவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நான் அவர்களுக்கு பயப்படப்போவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளும் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதையும் நான் நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்குமிடையேயுள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்!" எனத் தெரிவித்தார்.ராகுல் காந்தி, அதானி - மோடி குறிப்பாக, ``அதானிக்கும் பிரதமருக்குமிடையேயுள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்களுடன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு ஆதாரமாக, அதானியின் விமானத்தில் ரிலாக்ஸ் செய்த பிரதமரின் படத்தைக் காட்டினேன். பாதுகாப்புத்துறையில் அதானியின் நிறுவனத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு குறித்த ஆவணங்களை அளித்தேன். ஆஸ்திரேலியாவின் ஸ்டேட் வங்கித் தலைவருடன் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் படங்களை ஆதாரமாக அளித்தேன். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகே பா.ஜ.க தனது வேலையை ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் எனது பேச்சுகள் நீக்கப்பட்டன. `அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் சரிதானா?! எனினும், சபாநாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதி, எனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டி அனுப்பினேன். பாதுகாப்புத்துறை, விமான நிலைய அதானி முதலீடுகள் குறித்த பத்திரிகைச் செய்திகள், சட்ட ஆவணங்களையும் இணைத்து இதுவே எனது பேச்சுக்கு ஆதாரமான அடித்தளம் என சபாநாயகருக்கு விரிவான விளக்கமும் கொடுத்தேன். ஆனால், எனது பேச்சுகள் எதுவும் நாடளுமன்றத்தில் பதிவாகவில்லை" என்றார்.மோடி - ராகுல் காந்தி மேலும், ``அதானி குறித்த எனது உரை பிரதமர் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நான் அவரது கண்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே முதலில் திசை திருப்பல்களைச் செய்தார்கள். அடுத்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் நிரந்தரமாகவே தகுதிநீக்கப்பட்டாலும் நான் எனது வேலையைத் தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்துக்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளைப் பாதுகாப்பது, ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவைத் தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது போன்ற ஜனநாயகப் பணியைத் தொடர்ந்து செய்வேன்" என சூளுரைத்தார். ``அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக் அணைக்கப்படுகிறது" - மல்லிகார்ஜுன கார்கே காட்டம் `அதானி நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருடையது?'- தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி ராகுல் காந்தி சொன்னபடியே பதவிநீக்கத்துக்குப் பின்னரும் தொடர்ச்சியாக அதானி - மோடி - சீன நாட்டவர் குறித்த கேள்விகளைப் பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பிவருகிறார். கடந்த வாரம் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.20,000 கோடி பற்றி பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார். அது பினாமி பணமென்றால், அதன் உரிமையாளர் யார்?" என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்திலும் இதே கேள்விகளை எழுப்பி, ``பிரதமரே, ஏன் இத்தனை பயம்?" எனப் பதிவிட்டிருக்கிறார். ராகுல் ட்விட்டர் தொடர்ந்து மற்றொரு ட்விட்டர் பதிவில் அதானியுடன் சீன நாட்டவர் சாங் சங் லிங் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``PMC திட்டங்கள் - 'பிரதான் மந்திரி சீன' திட்டங்கள்? - இந்தியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்கள், விமான ஓடுபாதைகள், ரயில் பாதைகள், மின்சாரப் பகிர்மானப் பாதைகள் உள்ளிட்டவை ஏன் சீன நிறுவனத்தால் அமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.``அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை காங்கிரஸ் குரல் எழுப்பும்" - ராகுல் காந்தி உறுதிமோடி-அதானி இது தொடர்பாக அதானி நிறுவனம், ``அதானி குழும புரொமோட்டர்கள், அதானி நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதானி டோட்டல் காஸ் நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 35 சதவிகிதப் பங்குகள் ஆகியவற்றை பிரான்ஸைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனத்துக்கு விற்று 287 கோடி டாலர் திரட்டினர். 2019-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக இந்தப் பணம் திரட்டப்பட்டது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இப்படிக் கிடைத்த பணத்தில் 255 கோடி டாலர் (ரூ.20,000 கோடி) அதானி குழும துணை நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றில் மறுமுதலீடு செய்யப்பட்டது. புதிய வணிகங்களின் வளர்ச்சிக்காக இப்படிச் செய்யப்பட்டது. இந்தப் பணத்தைத்தான் போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக சிலர் வர்ணிக்கிறார்கள். எல்லாப் பரிமாற்றங்களும் பங்குச்சந்தைக் கணக்குத் தாக்கலில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் பொதுவெளியிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. பங்குச்சந்தை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்துவருகிறோம். இருப்பினும் திசைதிருப்பும் வகையில் செய்தி பரப்புவது வருந்தத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டபோதிலும், ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும்போதிலும் சீன நாட்டவருடனான தொடர்பு குறித்தும் பிரதமர் மோடி வாய்த்திறக்காமல் இருந்துவருவது ஏன்... என்ற கேள்வி, கேள்வியாகவே நிற்கிறது..!
http://dlvr.it/SmMJmr