Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 7 October 2023

Narges Mohammadi: `நோபல்' பரிசு வென்ற சிறைப்பறவை; இரானிய பெண்ணின் `போராட்ட' வாழ்வும், பின்னணியும்!

2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இரான் சிறையில் இருக்கும் சமூகச் செயற்பாட்டாளரான நர்கீஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. யார் இந்த நர்கீஸ் முகம்மதி... அவர் ஏன் சிறையில் இருக்கிறார்... சிறையில் இருக்கும் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறதென்றால் அப்படி அவர் என்னதான் செய்தார்... பின்னோக்கிப் பார்ப்போம்!நர்கீஸ் முகம்மதி

பிறப்பும் அரசியல் தாக்கமும்:

நர்கீஸ் முகம்மதி 1972-ம் ஆண்டு வடமேற்கு இரானில் உள்ள ஜன்ஜான் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். நர்கீஸின் தந்தை விவசாயியாக இருந்துகொண்டே சமையல் வேலைகளிலும் ஈடுபட்டுவந்தார். அதேநேரம் நர்கீஸின் தாய் வழி உறவினர்கள் அரசியல் தொடர்புடையவர்கள். 1979-ம் ஆண்டு இரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டபோது, நர்கீஸின் தாய்மாமன் உள்ளிட்ட சில உறவினர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களைச் சிறையில் சென்று சந்திப்பதும், அவர்கள் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்து அழுவதுமே நர்கீஸ் தாயாரின் வழக்கமாக இருந்திருக்கிறது. இவற்றை சிறுவயதிலிருந்தே உன்னிப்பாக கவனித்து வந்த நர்கீஸிக்கு அரசியல் தாக்கம் ஏற்பட்டது. நர்கீஸின் செயல்பாடுகளைப் பார்த்து அவளின் தாய் பலமுறை அறிவுறுத்தினாலும், அதை நர்கீஸ் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />


படிப்பும், சமூகசீர்திருத்தப் பணியும்:

தொடர்ந்து, இமாம் கொமேனி சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். மாணவப் பருவம் தொட்டே, பெண்ணியம், சமத்துவம் என சம உரிமை பேசத் தொடங்கினார். படிப்பு முடிந்து பொறியாளர் பணிக்குச் சேர்ந்த நர்கீஸை இரானில் நடக்கும் பழைமைவாத ஒடுக்குமுறை அரசியல் தொந்தரவு செய்தது. தனது அரசியல் செயல்பாட்டால் பொறியாளர் பணிபோனது. அதைத் தொடர்ந்து, பத்திரிகைத்துறையில் சேர்ந்த நர்கீஸ், பெண்ணுரிமை, பெண் விடுதலை, சமத்துவம், சமூகசீர்சிருத்தம் தொடர்பான பல்வேறு எழுச்சிமிகு கட்டுரைகளை எழுதிக் குவித்தார். நர்கீஸின் எழுத்து அவரைப் பல்வேறு சமூகசீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வழிகோலியது.நர்கீஸ் முகம்மதி

போராட்டமும் சிறையும்:

அதற்கேற்ப, 2003-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பில் இணைந்தார். அதுவரையில் பெண் உரிமை, சமத்துவம், மரண தண்டனை ஒழிப்பு, மனிதநேயம் என பத்திரிகைகளில் எழுதிவந்த நர்கீஸ், அதன் பிறகு களப்போராளியாக களத்தில் இறங்கி போராடத் தொடங்கினார். விளைவு, 2011-ம் ஆண்டு முதன்முறையாக கைதுசெய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றார். அதன் பிறகு 2013-ல் ஜாமீனில் வெளிவந்த நர்கீஸ், மீண்டும் இரானில் கொடுமையாக இருக்கும் மரண தண்டனைக்கு எதிராக இன்னும் தீவிரமாகப் போராட்டங்களில் ஈடுபட்டார். விளைவு, 2015-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் தனது போராட்ட குணத்தை விடாத நர்கீஸ் முகம்மதி, சிறையில் துன்புறுத்தப்படும் அரசியல் கைதிகள், திட்டமிட்டு பாலியல் வன்முறைகளுக்கு ஆளக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக போர்க்குரல் எழுப்பியபடி இருந்தார். நர்கீஸ் முகம்மதி

திருமணமும், குடும்பப் பிரிவும்:

1999-ம் ஆண்டு சீர்திருந்த ஆதரவு இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவந்த தாகி ரஹ்மானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரட்டைக் குழந்தைக்கு தாயானார். ஆனால், கணவர் தாகி ரஹ்மானியும் சீர்திருத்தக்காரர் என்பதால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது இரான் அரசு. ஈரேழு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, 2012-ம் ஆண்டு தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று தஞ்சமடைந்தார். தற்போது இரு குழந்தைகளுடன் நர்கீஸின் கணவர் தாகி ரஹ்மானி பிரான்ஸ் நாட்டில் வசித்து வர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குழந்தைகளையும், கணவரையும் காணமுடியாமல் தனிமைச் சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து வருகிறார். நர்கீஸின் சமசரமற்ற போராட்டத்தால் இரான் அரசு அவரை 13 முறை கைதுசெய்தது. 154 கசையடிகளைக் கொடுத்தது. அத்தோடு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.

மாஷா அமினி மரணமும், நோபல் பரிசும்:

இந்த நிலையில், 2022 செப்டம்பர் மாதம், மாஷா அமினி என்ற இளம்பெண் ஒழுங்காக `ஹிஜாப்' அணியவில்லை எனக் கூறி இரான் நாட்டின் கலாசாரக் காவல்துறை அவரைக் கைதுசெய்தது. ஆனால், விசாரணைக் காவலில் இருந்த மாஷா அமினி காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து, மாஷா அமினியின் மரணத்துக்கு நீதி கேட்டும், ஹிஜாப் மற்றும் கலாசாரக் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரானியப் பெண்கள் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கினர். ஹிஜாப்பை எரித்தும், முடிகளை வெட்டியும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500-க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றும், மரண தண்டனை விதித்தும் அட்டூழியம் செய்தது இரான் அரசாங்கம். அந்தச் சூழலில் போராட்டக்காரர்கள் அனைவராலும் உதிர்கப்பட்ட பெயர் நர்கீஸ் முகம்மதி! சிறையில் இருந்தாலும் போராடும் மக்களுக்கு தனது ஆதரவை வழங்கி, சிறையிலிருந்தபடியே போராட்டத்தை நடத்தினார் நர்கீஸ். நர்கீஸ் முகம்மதி - நோபல் பரிசு

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை நர்கீஸ் முகம்மதிக்கு அறிவித்திருக்கிறது நார்வே நோபல் கமிட்டி. இதற்கான காரணம் குறித்து தெரிவித்திருக்கும் நோபல் கமிட்டி, ``இந்த பரிசு, நர்கீஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெகுமதி! இரான் அரசு, அவரை ஐந்து முறை குற்றம்சாட்டியிருக்கிறது. 13 முறை கைதுசெய்திருக்கிறது. 154 கசையடிகள் கொடுத்திருக்கிறது. 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. இன்றளவும் நர்கீஸ் முகம்மதி சிறையிலேயேதான் இருக்கிறார்!" எனத் தெரிவித்திருக்கிறது.

`மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்; மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்! பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், சம உரிமை, சமத்துவம் மேலோங்க வேண்டும்! இரான் ஜனநாயக நாடாக மலர வேண்டும்!' என்பதுதான் நோபல் பரிசு வெற்ற நர்கீஸ் முகம்மதியின் லட்சியம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`வலுக்காட்டயமாக ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்’ - நோபல் பரிசு வென்ற கட்டலின் கரிகோ


http://dlvr.it/Sx7zM9

0 comments:

Post a Comment